ஆடம்சின் வினையூக்கி
ஆடம்ஸின் வினையூக்கி (Adams' catalyst) என்பது பிளாட்டினம் ஈராக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மமானது பிளாட்டினம் (IV) ஆக்சைடு ஐதரேட்டு PtO2•H2O என்றும் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இது கரிமத் தொகுப்பு முறை தயாரிப்புகள், ஹைட்ரஜனேற்றம், ஹைட்ரஜனோலிசிஸ் ஆகியவற்றிற்கான ஒரு வினையூக்கியாகும் .[1] இந்த அடர் பழுப்பு நிறத் தூள் வணிக ரீதியாக கிடைக்கிறது. ஆக்சைடானது, சாதாரணமாக செயலில் உள்ள வினையூக்கி அல்ல, ஆனால் ஹைட்ரஜனின் வெளிப்பாட்டிற்குப் பிறகு அது செயல்நிலையில் உள்ளது, ஹைட்ரஜனின் வெளிப்பாட்டிற்கு ஆட்பட்ட பிறகு இது உலோக பிளாட்டினமாக மாறுகிறது, இதுவே வேதிவினைகளுக்கு காரணமாக இருக்கிறது. தயாரிப்புஆதம்சின் வினையூக்கியானது குளோரோபிளாட்டினிக் அமிலம் H2PtCl6 அல்லது அமோனியம் அறுகுளோரோபிளாட்டினேட்டு, (NH4)2PtCl6, ஆகியவற்றுடன் சோடியம் நைட்ரேட்டின் பினைப்பினால் உருவாகிறது. முதன் முதலில் வெளியிடப்பட்ட தயாரிப்பு முறையானது வி. ஊர்ஹீசு மற்றும் ரோஜர் ஆடம்சு ஆகியோரால் குறிப்பிடப்பட்ட முறையாகும்.[2] இந்தத் தயாரிப்பு முறையானது முதலில் பிளாட்டினம் நைட்ரேட்டைத் தயாரித்து, பின்னர் அதை வெப்பப்படுத்தி நைட்ரசன் ஆக்சைடுகளை வெளியேற்றும் செயல்முறைகளை உள்ளடக்கியது ஆகும்.[3]
இதன் விளைவாக வரும் பழுப்பு நிறக் கட்டியானது நைட்ரேட்டுகளிலிருந்து விடுபடச் செய்யும் பொருட்டு தண்ணீரில் கழுவப்படுகிறது. வினையூக்கியை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது உலர்த்தி பின்னர் பயன்படுத்தும் பொருட்டு ஒரு உலர்த்தியில் சேமிக்கலாம். இராச திராவகத்தையும் அதைத் தொடர்ந்து அம்மோனியாவையும் பயன்படுத்தி அம்மோனியம் குளோரோபிளாட்டினேட்டாக மாற்றுவதன் மூலம் பயன்படுத்தப்பட்ட வினையூக்கியிலிருந்து பிளாட்டினத்தை மீட்டெடுக்க முடியும். பயன்பாடுகள்ஆடம்சின் வினையூக்கி பல பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஹைட்ரஜனேற்றம், ஹைட்ரஜனோலிசிஸ், ஹைட்ரஜன் நீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற வினைகள் ஆகியவற்றிற்கு மதிப்புமிக்கதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வேதிவினையின் போது, பிளாட்டினம் உலோகம் (பிளாட்டினம் பிளாக்) உருவாகிறது, இது செயலில் உள்ள வினையூக்கியாக குறிப்பிடப்பட்டுள்ளது.[4][5] ஆல்க்கீன்கள் மற்றும் ஆல்கைன்களில் முறையே இரட்டை அல்லது முப்பிணைப்புகள் போன்ற நிறைவுறா பிணைப்புகளுடன் ஹைட்ரஜன் அணுக்களைச் சேர்ப்பதற்கு ஆடம்ஸின் வினையூக்கி ஒரு பொதுவான வினையூக்கியாகும். மிக முக்கியமான உருமாற்றங்களில் சில கீட்டோன்களை ஹைட்ரஜனேற்றுவதன் மூலம் ஆல்கஹால்கள் அல்லது ஈத்தர்களாக மாற்றுகின்றன. மேலும், நைட்ரோ சேர்மங்களை அமீன்களாக குறைப்பதற்கும் இந்த வினையூக்கி பயன்படுகிறது.[6][7] இருப்பினும், நைட்ரோ தொகுதியை ஒடுக்கம் செய்யலாமல் நைட்ரோ தொகுதிகளின் முன்னிலையில் ஆடம்சின் வினையூக்கி மூலம் ஆல்கீன்களில் ஒடுக்கத்தைச் செய்யலாம்.[8] நைட்ரோ சேர்மங்களை அமீன்களாக குறைக்கும்போது, ஹைட்ரஜனோலிசிஸை குறைக்க பலேடியம் வினையூக்கிகளை விட பிளாட்டினம் வினையூக்கிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பலேடியம் வினையூக்கிகளால் சாத்தியப்படாத பீனைல் பாஸ்பேட்டு எசுத்தர்களின் நீரக வேதி மாற்ற வினைக்கு இவ்வினையூக்கி பயன்படுத்தப்படுகிறது. கரைப்பானின் pH வினையின் போக்கை கணிசமாக பாதிக்கிறது, மேலும் வினையூக்கியின் வினைகள் பெரும்பாலும் தூய்மையான அசிட்டிக் அமிலம் அல்லது பிற கரைப்பான்களில் கரைக்கப்பட்ட அசிட்டிக் அமிலக் கரைசல்களில் நிகழ்த்தப்படும் போது தூண்டப்படுகிறது. பாதுகாப்புஆக்சைகை் கையாளும் போது சிறிய முன்னெச்சரிக்கை தேவைப்படுகிறது, ஆனால் ஹைட்ரஜனுடன் (H2) உடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, இதன் விளைவாகக் கிடைக்கும் உலோக பிளாட்டினம் (பிளாட்டினம் பிளாக்) காற்றில் தீப்பற்றும் தன்மை உடையதாக இருக்கலாம். எனவே, அது உலர அனுமதிக்கக்கூடாது மற்றும் ஆக்ஸிஜனின் அனைத்து வெளிப்பாடும் குறைக்கப்பட வேண்டும். மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia