ரோடியம்-பிளாட்டினம் ஆக்சைடு(Rhodium-platinum oxide) என்பது ஒரு ஐதரசனேற்ற வினையூக்கியாகும். Rh–Pt ஆக்சைடு அல்லது நிசிமுரா வினையூக்கி என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள்[2].
பயன்கள்
பல்வேறு கரிமச் சேர்மங்களை இயல்பான அறைவெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்தத்தில் அவற்றுடன் தொடர்புடைய வளைய ஆல்க்கேன்களாக அல்லது நிறைவுற்ற பல்லின வளையங்களாக ஒடுக்கப் பயன்படுகிறது[3][4]. இப்பயன்பாட்டில் பிளாட்டினம் டையாக்சைடு போன்ற பிற 10 ஆவது தொகுதி வினையூக்கிகளைக் காட்டிலும் ரோடியம்-பிளாட்டினம் ஆக்சைடு அதிக பயனளிக்கும் வினையூக்கியாகச் செயல்படுகிறது. மேலும் ஐதரசன் பகுப்பு வினை வழியாக ஆக்சிசனைப் பெற்றுள்ள வேதிவினை குழுக்களை இழப்பது குறைவாக இருக்கவும் இவ்வினையூக்கி பயன்படுத்தப்படுகிறது[5][6][7].
தயாரிப்பு
ரோடியம் குளோரைடின் நீரிய கரைசல், குளோரோபிளாட்டினிக் அமிலம், சோடியம் நைட்ரேட்டு ஆகியவை சேர்ந்த கரைசலை ஆவியாக்கி பின்னர் அதை 460-480 பாகை செல்சியசு வெப்பநிலையில் நைட்ரசனின் ஆக்சைடுகள் முடியும்வரை உருகவைக்கப்படுகிறது[2][4]. கிடைக்கும் திண்மத்தை வாலைவடி நீர் மற்றும் சோடியம் நைட்ரேட்டு ஆகியவற்றில் கழுவி கால்சியம் குளோரைடு சேர்த்து உலரவைத்து ரோடியம்-பிளாட்டினம் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக 3:1 Rh/Pt அல்லது 7:3 Rh/Pt. விகிதங்களில் உலோகங்கள் இவ்வினையூக்கியில் பயன்படுத்தப்படுகின்றன.
↑Heuser, Heidi. "Nishimura's catalyst". Product Number: 3000034604. Umicore: Precious Metal Chemistry. Archived from the original on 3 பெப்பிரவரி 2016. Retrieved 29 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)