ஆதித்தியன்
ஆதித்தியன் (இயற்பெயர்: டைட்டஸ், 9 ஏப்ரல், 1954 - 6 டிசம்பர், 2017) என்பவர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இவர் தான் இசையமைத்த படங்களிலும், பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தியாவிலும், மலேசியாவிலும் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆதித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.[2] இவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், இவரது ஓவியங்கள் பல வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. வாழ்க்கைக் குறிப்பு9 ஏப்ரல், 1954 அன்று பிறந்தார் ஆதித்தியன். திரைத்துறைப் பணிஒலி வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கிய இவர், "வெத்தல போட்ட" மற்றும் "சந்திரரே சூரியரே" போன்ற பாடல்கள் இடம்பெற்ற அமரன் (1992) படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் இவர் மாமன் மகள், லக்கிமேன், அசுரன், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட 30 இக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[3] திரைப்படங்கள்
மறைவுஆதித்தியன், உடல்நலக் குறைவால் 5 திசம்பர் 2017 அன்று தன் 63-ஆம் அகவையில் தெலங்காணா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் காலமானார்.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia