ஆதித்தியா மியூசிக்கு
ஆதித்தியா மியூசிக்கு இந்தியா தனியார் வரையறுக்கப்பட்டது (Aditya Music India Private Limited) என்பது ஓர் இந்திய இசை நிறுவனம் ஆகும்.[3] தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள இசைத்தொகுப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.[2] இதன் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளது.[4][5] வரலாறுஆதித்தியா மியூசிக்கானது 1990களின் பிற்பகுதியில், தற்போது இதன் அவைத்தலைவராக உள்ள உமேசு குத்தாவால் நிறுவப்பட்டது.[1][2] இந்நிறுவனமானது 1996ஆம் ஆண்டு வரையில் ஏனைய இசை நிறுவனங்களின் இசைத் தொகுப்புகளை ஆந்திரப் பிரதேசத்தில் வழங்கி வந்தது.[2] இதன் பின்னர், சொந்த இசை உரிமங்களைப் பெற்று இசைத் தொகுப்புகளை வெளியிடத் தொடங்கியது.[2] 2000இல் ஒலிப்பேழைகளை உருவாக்குவதற்கான நிலையத்தையும் அமைத்துக் கொண்டது.[2] ஆந்திரத் திரைப்படத்துறையின் பெரும்பாலான திரைப்படங்களுக்கான இசை உரிமங்கள் ஆதித்தியா மியூசிக்கிடம் உள்ளன.[2] சிவா மியூசிக்கல்சு, இலியோ, மாருதி மியூசிக்கு, எக்கோ, சோகன் மியூசிக்கு, சுப்பிரீம், பிரமிடு ஆடியோ போன்ற நிறுவனங்களின் இசை உரிமங்களையும் ஆதித்தியா மியூசிக்கு பெற்றுள்ளது.[2] போனோகிறாபிக்கு பெருபோமன்சு வரையறுக்கப்பட்டது இந்தியாவிலும் இந்திய ஆற்றுகை உரிமக் குமுகத்திலும் (ஐ. பி. ஆர். எசு.) இந்நிறுவனம் உறுப்பினராக உள்ளது.[6] வெளியிட்ட தமிழ் இசைத் தொகுப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia