ஆனந்த் அமிர்தர்ராஜ் பிறப்பு 20 மார்ச்சு 1951 (1951-03-20 ) (அகவை 74) சென்னை , இந்தியா உயரம் 1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்) இளைப்பாறல் ஆம் விளையாட்டுகள் வலதுகை (one-handed backhand) பரிசுப் பணம் அமெரிக்க டாலர் 332,133ஒற்றையர் போட்டிகள் சாதனைகள் 195–170 பட்டங்கள் 7 அதிகூடிய தரவரிசை எண். 74 (6 நவம்பர், 1974) பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள்பிரெஞ்சு ஓப்பன் 1ஆம் சுற்று (1973, 1974, 1976, 1979) விம்பிள்டன் 2-ஆம் சுற்று (1973, 1977, 1978) அமெரிக்க ஓப்பன் 3R (1974) இரட்டையர் போட்டிகள் சாதனைகள் 288–269 பட்டங்கள் 12 அதியுயர் தரவரிசை No. 80 (2 சனவரி, 1984) பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள்ஆத்திரேலிய ஓப்பன் 1-ஆம் சுற்று (1984) பிரெஞ்சு ஓப்பன் 3-ஆம் சுற்று (1979) விம்பிள்டன் SF (1976) அமெரிக்க ஓப்பன் காலிறுதி (1973, 1976) அணிப் போட்டிகள் டேவிசுக் கோப்பை இறுதி (1974,1987)
ஆனந்த் அமிர்தராஜ் (Anand Amritraj பிறப்பு 20 மார்ச் 1951) ஓர் இந்திய மேனாள் டென்னிசு வீரரும் தொழிலதிபரும் ஆவார்.[ 1] [ 2] [ 3] இவரது சகோதரர் விஜய் அமிர்தராஜுடன் இணைந்து 1974 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வழிநடத்தினார்,[ 4] 1987 இல் சுவீடனுக்கு எதிராக டேவிஸ் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டிய விஜய் அமிர்தராஜ் தலைமையிலான இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.
தொழில் வாழ்க்கை
ஆனந்த் அமிர்தராஜ், இவரது இளைய சகோதரர்கள், விஜய் , அசோக் ஆகியோருடன் சர்வதேச டாப் பிளைட் போட்டிகளில் கலந்துகொண்டார். 1976 ஆம் ஆண்டு விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆனந்த் மற்றும் விஜய் ஜோடி அரையிறுதியில் விளையாடினர். 1974 டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் ஆனந்த் இடம் பெற்றிருந்தார். அந்தத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கைகளை எதிர்த்து இந்திய அரசாங்கம் போட்டியைப் புறக்கணிக்க முடிவு செய்ததால் தோல்வியடந்தது.[ 5] 1987 இல் சுவீடனுக்கு எதிராக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இவரது மகன் இசுடீபன் அம்ரித்ராஜ் ஓர் அமெரிக்க முன்னாள் தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார், அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
டான் போஸ்கோவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார்.[ 6]
சென்டர் கோர்ட்டில் 2000 விம்பிள்டன் சீனியர் இரட்டையர் இறுதிப் போட்டியில் விஜய் மற்றும் ஆனந்த் அமிர்தராஜ் பயிற்சியில் ஈடுபட்டபோது.
இவரது மருமகள் அலிசன் ரிஸ்கே-அமிர்தராஜ் WTA டூரில் டாப்-50 வீராங்கனையாகவும் உள்ளார்.[ 7]
தொழில் இறுதிப் போட்டிகள்
ஆனந்த் மற்றும் விஜய் அமிர்தராஜ் 2000 விம்பிள்டன் சீனியர் இரட்டையர் இறுதிப் போட்டியின்போது
மேற்கோள்கள்
↑ Padmanaban, Geeta (13 May 2003). "Advantage! Amritraj" . தி இந்து . Archived from the original on 6 June 2011. Retrieved 31 January 2010 .
↑ Seminara, Dave (28 November 2009). "The Year the Davis Cup Felt Empty" . The New York Times . Archived from the original on 25 March 2019. Retrieved 31 January 2010 .
↑ Keerthivasan, K (1 January 2003). "Anand – the genial Indian" . தி இந்து . Archived from the original on 6 June 2011. Retrieved 31 January 2010 .
↑ "South Africa v India" " . Davis Cup. Archived from the original on 12 December 2019. Retrieved 31 July 2021 .
↑ "1976 Wimbledon men doubles" . Archived from the original on 3 July 2008. Retrieved 15 May 2008 .
↑ "Hollywood's Chennaiite: Ashok Amritraj talks about his love for Hollywood and Tennis" . The New Indian Express . 15 December 2017. Archived from the original on 23 July 2018. Retrieved 23 July 2018 .
↑ Watch: American tennis star Alison Riske grooves to Bollywood song at her wedding with Stephen Amritraj பரணிடப்பட்டது 3 சனவரி 2024 at the வந்தவழி இயந்திரம் 23 July 2019
வெளியிணைப்புகள்