ஆபிரிக்க வரலாறுஆபிரிக்க வரலாறு இக் கண்டத்தில் முதல் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொடங்கி இன்று பல்வேறு நாட்டின அரசுகளைக் கொண்ட ஒரு கண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆப்ரிக்காவின் வரலாறு காலத்தால் முற்பட்டது ஆகும். ஆப்ரிக்காவில் விவசாயம் செய்ததற்கான ஆதாரங்கள் கி.மு. 16000 முதல் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் உலோக பயன்பாடு கி.மு. நான்காயிரம் முதல் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் உலகின் முதன் மனிதனின் கால் தடமும் ஆப்ரிக்க கடற்கரை ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தொண்மையான ஆப்ரிக்க வரலாற்றை கூறுபவை ஆகும். தொன்மைக் காலம்ஆபிரிக்காவின் எழுதப்பட்ட வரலாறு கிமு 4 ஆம் ஆயிரவாண்டில் எகிப்திய நாகரிகத்தின் எழுச்சியுடன் தொடங்குகிறது. இதனால் பழங்கால எகிப்தின் வரலாறு பெரும்பாலும் பழைய எகிப்து மற்றும் நுபியா ஆகிய பகுதிகளின் வரலாற்றையே குறிக்கின்றன. சஹாரா பகுதிகள் இக்காலத்தில் மிகவும் சிறிய வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளன. பின் வந்த நூற்றாண்டுகளில் நைல் பள்ளத்தாக்குக்கு அப்பாலும் பல்வேறுபட்ட சமுதாயங்கள் வளர்ச்சியடைந்தன. மிகப் பழைய காலத்திலேயே இந் நாகரிக மக்கள் ஆபிரிக்க நாகரிகம் அல்லாத நாகரிகங்களைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இவர்களுள், கார்த்தேஜில் வணிகப் பேரரசை நிறுவியிருந்த போனீசியர்கள் தொடக்கம், கிமு முதலாம் நூற்றாண்டில் வட ஆபிரிக்கா முழுவதிலும் குடியேற்றங்களை அமைத்திருந்த ரோமர்கள் வரை அடங்குவர். இக் காலத்தில் கிறிஸ்தவம் வட ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் பரவியது. பழைய கற்காலம்பழைய கற்காலத்திலேயே மக்கள் பெருமளவில் ஆப்ரிக்காவில் வாழ்ந்தற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் தொல் பொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் மண்டை ஓடுகள் மனித குரங்கின் மண்டை ஒட்டை ஒத்திருப்பதும், ஆனால் இரண்டு கால்கள் மூலம் இடம்பெயற வல்லதாகவும் இவை இருந்துள்ளதால், இவை ஆதி மனிதர்களின் மண்டை ஓடுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்கள் அடர்ந்த காடுகளிலும், சமவெளி பகுதிகளிலும் வாழும் தகுதிகளும் கொண்டவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பயன் படுத்தப்பட்ட கற்கருவிகளும் இப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வைகை மனிதர்கள் மாமிசம் உண்பவர்களாக இருந்து வந்துள்ளனர். 2.3 மில்லியன் வருடங்களுக்கு முன் வேட்டையாடப் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளும் , ஆப்ரிக்க பகுதிகளில் உழவு தொழில் செய்ததற்கான ஆதாரங்களும் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[1]. 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பரினாம வளர்ச்சி அடைந்த மனிதனின் கால் தடப்பதிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. புதைபடிவ பதிவுகளில் குறைந்தது 100,000 அல்லது 150,000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் மனிதர்கள் வாழ்ந்தத்ற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன[2]. 40,000 ஆண்டுகளுக்கு முன்பு , ஆப்ரிக்காவிலிருந்து மனித இனங்கள் குடிபெயறத் தொடங்கி தற்போது இருக்கும் இடங்களுக்கு வந்துள்ளதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 10,000 கி.மு. அவர்களின் இடம்பெயர்வு, மொழியியல் , கலாச்சார மற்றும் மரபணு ஆகியவற்றின் ஆதாரங்களின் மூலம் இவை அறிய வருகின்றது [3][4]. விவசாயத் தோற்றம்மக்கள் கி.மு 16000 வாக்கில் செங்கடல் மலைகள் முதல் வடக்கு எத்தியோப்பிய நிலப்பகுதிகள் வரை உள்ள கொட்டைகள், கிழங்குகள், மற்றும் புட்கள் ஆகியவற்றை உணவாக உட்கொண்டு வந்துள்ளான். கி.மு 13000 முதல் கி.மு 11000 வரை மனிதன் காட்டு தானியங்களை சேகரித்து உண்ணத் தொடங்கினான். இவ்வகை உணவு முறைகள் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா வரை பரவியது. இதுவே விவசாயம் தோன்றக் காரணம் ஆகும். 10000 முதல் 8000 கி.மு வாக்கில் வடகிழக்கு ஆப்ரிக்க மக்கள் பார்லி, மற்றும் கோதுமை ஆகிய தானியங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளனர். மேலும் ஆசியர்களைப்போல ஆடுகளையும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். கி.மு ஏழாயிரம் வாக்கில் ஆப்ரிக்கர்கள் கழுதைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கழுதைகளை வீட்டு விலங்காக வளர்ப்பது ஆப்ரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு பரவியது.[5][6] உலோக பயன்பாடுஆப்ரிக்காவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செம்பு, வெண்கலம் ஆகிய உலோககங்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[7]. ஆப்ரிக்கா கண்டத்தில் தாமிரப் பயன்பாடு சாம்ராஜியங்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியுள்ளன[8] . வெண்கலம் கி.மு 3000 முதலே புழக்கத்தில் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உயர்தர உலோகங்கள் சாம்ராஜ்ஜியங்கள் இருந்த பொழுது புழக்கத்திற்கு வந்துள்ளன என அறியப்படுகின்றது[9]. கி.மு பத்தாயிரம் வாக்கில் வடமேற்கு ஆப்ரிக்கா , எகிப்து, மற்றும் நுபியா ஆகிய பகுதிகளில் இரும்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கிபி 7 - கிபி 16![]() ![]() கிபி ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடக்கு ஆபிரிக்காவும், கிழக்கு ஆபிரிக்காவும் இஸ்லாம் மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டது. இது நாளடைவில் சுவாஹிலி மக்களுடையதைப் போன்ற புதிய பண்பாடுகள் உருவாவதற்கும், சோங்காய் பேரரசு போன்ற அரசுகள் உருவாவதற்கும் வழி வகுத்தது. மேலும் தெற்கே கானா, ஓயோ, பெனின் பேரரசு போன்றவை கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரண்டு மதங்களினது செல்வாக்கினாலும் பாதிக்கப்படாமல் வளர்ச்சியடைந்தன. அடிமைப்படல், குடியேற்றவாதம்இஸ்லாத்தின் எழுச்சியுடன், 19 ஆம் நூற்றாண்டில் அரபு அடிமை வணிகம் உச்சநிலையை அடைந்தது. இதன் மூலம் பல ஆபிரிக்க மக்கள் புதிய உலகுக்குப் பலவந்தமாக அனுப்பப்பட்டனர். அத்துடன் ஆபிரிக்காவுக்கான போராட்டமும் தொடங்கியது. ஆபிரிக்காவின் குடியேற்றவாதக் காலம் 1800 களில் தொடங்கியது. 20 ம் நூற்றாண்டுஆபிரிக்க விடுதலை இயக்க நடவடிக்கைகளால், 1951 ஆம் ஆண்டில் லிபியா விடுதலை பெற்ற முதலாவது முன்னாள் ஆபிரிக்கக் குடியேற்ற நாடு ஆகியது. காலனி ஆதிக்கம்இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனி ஆதிக்கம் தொடங்கியுள்ளது. ஆப்ரிக்கா கண்டத்தின் சுதந்திரம் லிபியாவிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது. லிபியா 1951-இல் விடுதலைப்பெற்றது. லிபியாவில் தொடங்கி 1960 காலகட்டம் வரை ஆப்ரிக்காவிற்கு தொடர்ந்து விடுதலைகள் கிடைக்கப்பெற்றன. 1960-இல் பிரன்ச் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பல விடுதலைப்பெற்றன. அங்கோலா , மொசாம்பிக் ஆகிய நாடுகள் போர்ச்சுகளிடமிருந்து 1975-ஆம் ஆண்டு விடுதலைப் பெற்றன. டிஜிபோடி பிரான்ஸிடமிருந்து 1977-இல் விடுதலை வாங்கியது. மேலும் சில நாடுகள் ஐக்கிய ராச்சியத்திலிருந்தும், தென் ஆப்ரிக்காவிடமிருந்தும் விடுதலைப் பெற்றன. பல நாடுகள் விடுதலைப் பெற்றவுடன் தனது நாட்டின் பெயர்களை மாற்றம் செய்து கொண்டன. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
உசாத்துணைகள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia