ஆம் ஆத்மிஆம் ஆத்மி (Aam Aadmi, Hindi: आम आदमी , Urdu: عام آدمی ) — நேரடி மொழிபெயர்ப்பு: " சாதாரண மனிதன் " ( ஆம் என்றால் சாதாரண + ஆத்மி என்றால் மனிதன்) - இஃது ஒரு இந்துசுத்தானி மொழி பேச்சு வழக்கு மற்றும் " சராசரி ஜோ " என்ற சொல்லுக்கு இணையானதாகும். இந்திய தேசிய காங்கிரசு தனது 2004 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையை ஆம் ஆத்மி என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டதாக உருவாக்கியது. தேர்தலுக்கான கட்சியின் முழக்கமானது காங்கிரஸ் கா ஹாத், ஆம் ஆத்மி கே சாத் ("காங்கிரஸின் கை சாமானியர்களிடம் உள்ளது") என்பதாகும். [1] 2007 ஆம் ஆண்டில், காங்கிரசு தனது ஐமுகூ அரசாங்கத்தின் திட்டங்களைப் பிரபலப்படுத்த தனது ஆம் ஆத்மி கா சிபாஹி ("சாதாரண மனிதனின் சிப்பாய்") பரப்புரையைத் தொடங்கியது. [2] 2012 இல் உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியால், இந்தக் கூற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1885 ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி என்பது காங்கிரசின் இன்னொரு பெயராக இருந்ததாகக் கூறி, புதிதாக உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் பெயருக்கு காங்கிரசு எதிர்ப்பு தெரிவித்தது.[3] ஆம் ஆத்மி என்ற சொற்றொடரின் அபத்தமான மொழிபெயர்ப்பாக "மாம்பழ மனிதன்" ( ஆம் என்பது "மாம்பழம்" என்பதன் இந்தி சொல்லாகும்) என்பது இருந்தது. 2012 ஆம் ஆண்டில், ராபர்ட் வதேரா " வாழைக் குடியரசில் மாம்பழ மனிதர்கள்" என்று கேலி செய்தபோது, ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டார். [4] [5] 2014 ஆம் ஆண்டில், புதிய பிரதமர் மோதி, ஏர் இந்தியாவின் நீண்ட கால இலட்சினையான மகாராஜாவை ஆம் ஆத்மிகளும் வானூர்தியைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற குறிப்பதாக மாற்றுமாறு உத்தரவிட்டார். [6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia