ஆயர் (கிறித்துவ பட்டம்)ஆயர் (Bishop) என்பவர், கிறிஸ்தவ திருச்சபை ஒன்றின் அருட்பொழிவு பெற்ற தலைவராக விளங்குபவர் ஆவார்.[1][2][3] சொல் தோற்றம்"ஆயர்" (ⓘ) என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையான "Bishop" என்னும் ஆங்கிலச் சொல் ἐπίσκοπος (epískopos) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதற்கு "மேற்பார்வையாளர்", "கண்காணிப்பாளர்" (supervisor, overseer) என்பது நேரடிப் பொருளாகும். கிறித்தவ சபைகளில் மேற்பார்வைப் பொறுப்புக் கொண்டவர்களுக்குப் பொதுவாக "ஆயர்" என்னும் பெயர் பொருந்தும். "ஆயர்" என்றால் "(ஆடுகளை) மேய்ப்பவர்" என்பது நேரடிப் பொருள். அது கிறித்தவ சபையின் மக்களை வழிநடத்துபவர் என்று பொருள்தரும். "ஆயர்" என்னும் சொல்லுக்கு நேரிணையான ஆங்கிலச் சொல் "pastor" (shepherd) என்பதும் விவிலியத்தில் வேரூன்றியதாகும். இயேசு தம்மை "நல்ல ஆயர்" (Good Shepherd) என்று அறிமுகப்படுத்துகிறார். அவரிடத்தில் நம்பிக்கை கொண்டு அவரால் வழிநடத்தப்படும் "ஆடுகளை" அவர் கண்காணித்துக் காக்கிறார். யோவான் நற்செய்தியில் இயேசு இவ்வாறு கூறுகிறார்:
கத்தோலிக்க திருச்சபையில்கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை, ஒரு மறைமாவட்டத்தின் தலைவர் ஆயர் என்று அழைக்கப்படுகிறார். சிறப்பாக உலகத் திருச்சபையின் தலைவரும், புனித பேதுருவின் வழித்தோன்றலுமான உரோமை உயர்மறைமாவட்டத்தின் ஆயர் திருத்தந்தை என்று அழைக்கப்படுகிறார். கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி, உரோமை ஆயர் மட்டும் கர்தினால் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்; மற்ற மறைமாவட்டங்களில், "ஆயர்" என்னும் பொறுப்பைப் பெறுபவர் சட்டத்தில் உள்ளபடி முன்மொழியப்பட்டு, திருச்சபையின் உயர்முதல் தலைவராகிய திருத்தந்தையால் உறுதிசெய்யப்பட்டால் அவர் ஆயராக நியமிக்கப்படுகிறார். ஒரு ஆயர் அவருடைய அதிகாரத்தின்படி ஆயர்நிலை அருட்பொழிவு பெறுவார். முன்னாள்களில் "ஆயர்" என்னும் சொல்லுக்குப் பதிலாக "மேற்றிராணியார்" என்னும் சொல் வழக்கத்தில் இருந்தது. அச்சொல் "மேல்+திராணி" என்னும் மூலத்திலிருந்து பிறந்து "மேல் பொறுப்பு" கொண்டவர் என்னும் பொருள் தந்தது. கிரேக்க மூலத்துக்கு ஏற்ப "கண்காணிப்பாளர்" என்னும் பொருளும் அதில் அடங்கியிருந்தது. ஆயர் நிலைக்குத் வேட்பாளராகத் தகுதிகள்ஆயர் நிலைக்குத் தகுதியான வேட்பாளராக ஒருவர் இருக்கத் தேவையானவை;
உயர்த்தப்பட வேண்டியவரின் தகுதியைப் பற்றிய இறுதி முடிவு திருத்தூதரக ஆட்சிப்பீடத்தைச் சார்ந்தது. ஆயர் நிலைகள்கத்தோலிக்க திருச்சபையில் பேராயர், ஆயர், இணை ஆயர், துணை ஆயர் என்ற நான்கு நிலைகளில் ஆயர்கள் பணி செய்கின்றனர்.
ஆயர் அணிகள்
தென்னிந்திய திருச்சபையில்சீர்திருத்த சபைகளில், குறிப்பாகத் தென்னிந்திய திருச்சபையில் bishop என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக "பேராயர்" என்பது பயன்படுகிறது. வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia