ஆயிஷா (நடிகை)
ஆயிஷா என்பவர் தமிழ்நாட்டு தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தொலைக்காட்சி தொடர்களில் 2017 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகின்றார். 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்ற நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப வாழ்க்கைஇவர் ஜூன் 06, 1993 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் பிறந்தார். காசர்கோடு அம்பேத்கர் வித்யானிகேதன் ஆங்கில நடுத்தர மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். சென்னை எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். நடிப்புத்துறையில்இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் மாயா என்னும் தொடரில் நடித்தார். தற்போது ஜீ தமிழ்தொலைக்காட்சியில் சத்யா 2 என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia