சத்யா (தொலைக்காட்சித் தொடர்)
சத்யா என்பது 2019 முதல் 2021 வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது 'சிந்துரா பிந்து' என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[1] இந்த பருவத்தில் ஆயிஷா மற்றும் விஷ்ணு ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2] இது ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிந்துரா பிந்து' என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[3] இந்த தொடர் ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாகக் கொண்டது ஆகும். இந்த தொடர் 4 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி, 24 அக்டோபர் 2021 அன்று 768 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இரண்டாம் பருவம் சத்யா 2 என்ற பெயரில் அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஒரே உருவ ஒன்றமையில் உள்ள சத்யா, நித்தியா ஆகியோரையும் சத்யாவின் முன்னாள் கணவன் பிரபுவை சுற்றி கதை நகர்கிறது. தொடரின் பருவங்கள்
கதைச்சுருக்கம்சத்யா என்ற பெண் தனது வாழ்க்கையை ஆண் இயல்பு கொண்ட பெண்ணாக வாழ்கிறாள். அவர் தனது அம்மா, பாட்டி மற்றும் மூத்த சகோதரி திவ்யா உடன் வசிக்கிறார். சத்யா, ஆண் தோழர்களுடன் ஒட்டிக்கொண்டார். எதிர்பாராத சூழ்நிலையில், அவள் ஒரு பணக்காரனான பிரபு மீது காதல் மலர்கிறது. ஆயினும்கூட, பிரபு திவ்யாவின் கணவராக மணம் முடிகிறார், இறுதியில் பிரபு சத்யாவை திருமணம் செய்து கொள்கிறார். நடிகர்கள்முக்கிய கதாபாத்திரங்கள்பிரபு குடும்பத்தினர்
சத்யா குடும்பத்தினர்
துணை கதாபாத்திரங்கள்
முந்தைய கதாபாத்திரம்
நடிகர்களின் தேர்வுஇத்தொடரில் சின்னத்திரை நடிகர்கள் ஆயிஷா மற்றும் விஷ்ணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.[5] 2 வது ஜீ தமிழ் குடும்ப விருதுகளில் சிறந்த தொடருக்கான விருதை பெற்றுள்ளது. நேர அட்டவணைஇந்த தொடர் ஆரம்பத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, பின்னர் தினமும் 10 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் சர்வைவர் தமிழ் 1 நிகழ்ச்சிக்காக, 12 ஜூலை 2021 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, 18 அக்டோபர் 2021 முதல் மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகிறது.
மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia