ஆரஞ்சு மிட்டாய்
ஆரஞ்சு மிட்டாய் என்பது 2015இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை பிஜூ விஸ்வநாத் எழுதி இயக்கினார். விஜய் சேதுபதி தயாரிப்பில் முதன்மை வேடத்தை ஏற்று நடித்தார். இவருடன் ரமேஷ் திலக், ஆசிர்தா மற்றும் கருணாகரன் (நடிகர்) ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் 2014இல் தொடங்கப்பட்டது.[1] கதைசத்தியா (ரமேஷ் திலக்) அவசர ஊர்தி சேவையை நடத்திவரும் ஒரு மருத்துவ உதவியாளர். அவரது தந்தையின் முதலாமண்டு நினைவு நாளில், உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஒரு வயதான பெரியவரை சத்யா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இருவரும் மீட்டெடுக்கிறார்கள். நோயாளி, கைலாசம் (விஜய் சேதுபதி), ஒரு இதய நோயாளியாக இருப்பதால் தனது உயிருக்கு போராடுகிறார். அந்த நிலையில் கைலாசத்தின் எரிச்சலூட்டும் மற்றும் பிடிவாதமான செய்கையானது அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ உதவியளிப்பது சத்யாவிற்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. கைலாசம் யார்? அவருக்கு என்ன வேண்டும்? அவரது பிடிவாதமான இயல்புக்கு காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்கள் கதையின் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் ஒரு மருத்துவமனையை கண்டுபிடிக்கும் தேவை இருக்கிறது. ஆனால் அது ஒரு நீண்ட தூர பயணமாக இருக்கிறது. பிரபஞ்சம் என்ன திட்டமிட்டுள்ளது என்பதை அறிய ஒரே வழி, பயணம் செய்வதே ஆகும், சில நேரங்களில் பயணம் என்பதே இலக்காகும். நடிப்பு
தயாரிப்புநடிகர் விஜய் சேதுபதி தயாரித்த முதல் படம் "ஆரஞ்சு மிட்டாய்". இது 2014 பிப்ரவரியில் பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்தது. இப்படத்தில் ஜெயப்பிரகாசு, ரமேஷ் திலக், அனு பாலா , அஷ்ரிதா உட்பட பலரும் நடித்திருந்தனர்.[2][3] 2014 ஜூலையில் விஜய் சேதுபதி தான் 55 வயது கொண்ட முதியவர் பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார். இது முதலில் நடிகர் ஜெயப்பிரகாசு நடிப்பதாக இருந்தது.[4] அவர் எழுத்தராக அறிமுகமான முதல்படம் இதுவாகும்.[5] இப்படக்குழு தென் தமிழ்நாட்டின் அம்பாசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான திருநெல்வேலி, பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) போன்ற இடங்களில் படமாக்கியது.[6] ஒலித்தொகுப்புஇதன் ஒலித்தொகுப்பினை ஜஸ்டின் பிரபாகரன் மேற்கொண்டார். விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்திற்கு இசையமைத்தவராவார். இப்படத்தின் பாடல்கள் 2015 ஜூலை 1 அன்று வெளியிடப்பட்டது.[7] நான்கு பாடல்கள் கொண்டதில் இரு பாடல்களை விஜய் சேதுபதியே இயற்றிப் பாடியிருந்தார்.[8]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia