ஆரியநெல்லூர்
ஆரியநெல்லூர் (Ariyanellur) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில், திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலையில் 7 வது கிலோமீட்டரில் உள்ள ஒரு சிற்றூராகும். இது முன்னிலைக்கோட்டை ஊராட்சியால் நிருவகிப்படுகிறது.[1] இங்கு முற்காலத்தில் அதிக நெல் விளைந்ததால் இப்பெயர் வந்தது. இவ்வூரில் இந்துக்களும், கிறித்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் நெல், வாழை, காய்கறிகள், தென்னை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு உள்ள்வர்களில் பலர் அரசுப்பணியில் உள்ளனர். பலர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமைவிடம்இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லிருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், ஆத்தூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 465 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] சிறப்புகள்இங்கு உள்ள கிறித்தவர்களின் புனித இராயப்பர் சின்னப்பர் தேவாலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்வாலயத்தில் உள்ள இராயப்பர் சொருபத்தை சுற்றி வரும்போது அதன் நிழல் விழுவதால் நேயாளிகள் குணமடைந்து வருகிறார்கள்.ஒவ்வொரு சனிகிழமையும் மாலையில் இதற்கு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. இவ்வாலாய ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதம் 28,29 ம் தேதிகளில் கொண்டாடப்டுகிறது.இவ்விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia