ஆர்க்காடு

காவிரிக்கரை ஆர்க்காட்டை ஆண்ட அரசன் அழிசி. அவன் மகன் சேந்தன். இருவரும் அரசர்கள்.[1]

யானைப்படை கொண்ட பசும்பூண் சோழர் என்னும் சோழர் கால்வழி ஆர்க்காட்டில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்துவந்தது. இந்த ஆர்க்காட்டில் தேரோடும் தெருவில் கள்ளுப்பானையில் ஈ மொய்ப்பது போல மக்கள் கூடி ஆரவாரம் செய்வார்களாம். அந்த ஆரவாரம் போலத் தலைவன்-தலைவி கள்ளக் காதலைப்பற்றி ஊர்மக்கள் கௌவைமொழி பேசிக்கொண்டார்ளாம். [2]

இடையன் சேந்தன் கொற்றனார் என்பவர் புலவர். இவர் இடையர்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவைக்களத்தில் இருந்த ஐவருள் ஒருவன் ஆதன் அழிசி. [3]

ஆதன், அழிசி, சேந்தன், கொற்றனார் என்னும் பெயர்கள் ஒரு கால்வழிப் பரம்பரையைக் காட்டுவது போல அமைந்திருந்தாலும், அவர்கள் இன்னின்னார் என்று இந்த விளக்கங்களை எண்ணிப்பார்த்தால் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.

இது வடார்க்காடு மாவட்டத்திலுள்ள ஆர்க்காடு அன்று.

சான்று

  1. குறுந்தொகை 258, நற்றிணை 190
  2. நற்றிணை 227
  3. புறம் 71
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya