ஆர்சனிக் முச்செலீனைடு
ஆர்சனிக் முச்செலீனைடு (Arsenic triselenide) என்பது As2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக்கின் செலீனைடு உப்பான இச்சீருறாத் திண்மம் 870 நானோ மீட்டர் மற்றும் 17.2 மைக்ரோ மீட்டர் அளவுக்கு ஒளிச்செலுத்துகை அளவுகள் கொண்டிருப்பதால் , அகச்சிவப்பு ஒளியியலில் சால்கோசெனைடு கண்ணாடியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்சனிக் முச்செலீனைடு ஒரு சகப் பிணைப்புச் சேர்மமாகக் காணப்படுகிறது. இருப்பினும் ஆர்சனிக் , முறைப்படியான +3.என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. பயன்கள்உயர் ஒளிவிலகல் எண் காரணமாக ஆர்சனிக் முச்செலீனைடு கண்ணாடிகளின் மெல்லிய படமானது, ஒருங்கிணைந்த ஒளியனியலில் நடுத்தர அக்ச்சிவப்பு ஒளிச்செலுத்துகை மற்றும் உயர் நேரிலா ஒளியியல் சுட்டிகள் என முக்கியத்துவம் பெற்ற பொருளாக வெளிப்பட்டுள்ளது. எத்திலீன் ஈரமீன் கரைசல்களில் இருந்து தற்சுழற்சிப் பூச்சு மூலம் உயர்தரமான As2Se3 கண்ணாடிப் படங்களைப் படிய வைக்க முடியும்[2] பாதுகாப்புவீரியமிக்க அமிலங்கள் மற்றும் அலுமினியம் அல்லது துத்தநாகத்துடன் தொடர்புடைய வீரியமான காரங்கள் முதலியனவற்றிடமிருந்து ஆர்சனிக் முச்செலீனைடைத் தள்ளி வைக்கவேண்டும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia