ஆர்ட்டிமீசியம்![]() ஆர்ட்டிமீசியம் (Artemisium அல்லது Artemision, கிரேக்கம் : Ἀρτεμίσιον) என்பது கிரேக்கத்தின் வடக்கு யூபோயாவில் கடலை ஒட்டியுள்ள நில முனைப் பகுதி ஆகும். சியுசின் புகழ்பெற்ற உள்ளீடற்ற வார்ப்பு வெண்கலச் சிலை, அல்லது ஆர்ட்டெமிஷன் வெண்கலம் என்று அழைக்கப்படும் பொசைடன், இந்த முனையில் மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்டது. [1] [2] மேலும் அந்தக் கப்பலில் ஜாக்கி ஆஃப் ஆர்ட்டெமிஷன் எனப்படும் ஒரு பந்தய குதிரையும் அதன் மீதமர்ந்த குதிரை வீரரின் வெண்கல சிலையும் கண்டறியப்பட்டது. கிமு 480 இல் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பின் போது அப்போர் தொடரில் நடந்த தேமோபைலேச் சமர் என்னும் மிகவும் பிரபலமான நிலப் போர் ஆகும். அப்போர் நடந்தபோதே இந்தக் கடற்பகுதியில் மூன்று நாட்கள் நடந்த ஆர்ட்டெமிசியம் போர் என்றழைக்கப்படும் கடற்போரும் ஒரே நேரத்தில் நடந்தது. 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் திரைப்படம் இந்த வரலாற்றுப் போரை அடிப்படையாகக் கொண்டது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia