ஆர்த்தோ கிரெசால்
ஆர்த்தோ கிரெசால் (ortho-Cresol) என்பது CH3C6H4(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-மெத்தில்பீனால், ஆ-கிரெசால் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. திண்ம நிலையில் நிறமற்றதாகக் காணப்படும் இச்சேர்மம் பிற வேதிப்பொருட்களைத் தயாரிக்கும்போது பரவலாக ஒரு இடைநிலைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பீனால் வழிப்பொருளான இது பாரா கிரெசால் மற்றும் மெட்டா கிரெசால்களின் மாற்றியன் ஆகும் [3]. இயற்கைத்தோற்றம்நீர்நாய் வகை விலங்குகளின் உடலில் காணப்படும் சுரப்பிகளில் ஆர்த்தோ கிரெசால் உள்ளதாகக் கூறப்படுகிறது. நீரெலிகளின் சுரப்பிகளிலும் அவை நுகரும் வெண் சிடார் மரவகைகளிலும் ஆர்த்தோகிரெசால் காணப்படுகிறது .[4]. தயாரிப்புகல்கரியை உற்பத்தி செய்வதற்காக நிலக்கரித்தாரை வறுக்கும்போது பெறப்படும் ஆவியாகும் பொருட்களில் இருந்து பாரா கிரெசால் பாரம்பரிய முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் கசடின் எடையில் சிலசதவீதம் அளவுக்கு பீனாலும் கிரெசால்களும் காணப்படுகின்றன. கூடுதலாக இந்த இயற்கை மூலங்கள் தவிர்த்து மெத்தனாலைப் பயன்படுத்தி பீனாலை மெத்திலேற்றம் செய்து மேற்குலக நாடுகள் மூன்றில் இரண்டு பங்கு ஆர்த்தோ கிரெசாலை தயாரிக்கின்றன. உலோக ஆக்சைடுகள் இவ்வினையில் வினையூக்கிகளாகச் செயல்படுகின்றன.
மிகையான மெத்திலேற்றம் நிகழ்ந்தால் சைலினால் தோன்றுகிறது. சாலிசிலிக் அமில ஆக்சிசனேற்ற கார்பாக்சில் நீக்க வினை, தொலுயீணை ஆக்சிசனேற்றம் செய்தல், 2-குளோரோதொலுயீனை நீராற்பகுத்தல் உட்பட வேறுவகையான உற்பத்தி முறைகளும் சோதிக்கப்பட்டு வருகின்றன[3]. பயன்பாடுகள்பிற வேதிச்சேர்மங்களைத் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாக ஆர்த்தோ கிரெசால் பயன்படுகிறது. 2-மெத்தில்-4-குளோரோபீனாக்சி அசிட்டிக் அமிலம் போன்ற முக்கியமான பூச்சிக் கொல்லிகள் ஆர்த்தோ கிரெசாலை குளோரினேற்றமும், ஈத்தராக்கலும் செய்து தயாரிக்கப்படுகின்றன. நைட்ரசனேற்றம் செய்யும்போது ஆ-கிரெசால் டைநைட்ரோகிரெசால் என்ற பிரபலமான பூச்சிக் கொல்லியைத் தருகிறது. கோல்ப்-சிக்கிமிட்டிக் கார்பாக்சிலேற்ற வினையில் மருந்துவகை இடைநிலையான ஆ-கிரெசோடினிக் அமிலத்தைக் கொடுக்கிறது. புரோப்பைலீனுடன் சேர்ந்து ஆல்க்கைலேற்ற வினையினால் கார்வாகிரால் சாரத்தைக் கொடுக்கிறது. தசைத் தளர்ச்சியளிக்கும் மேப்பினேசீன் ஆ-கிரெசாலில் இருந்து பெறப்பட்ட ஒர் ஈத்தர் ஆகும் [3]. உடல்நலக் கேடுகள்கிரெசால்கள் அதிகமான அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. தோலில் எரிச்சலை உண்டாக்குகின்றன. மிக அதிக அளவில் உட்கொள்ளப்பட்டால் அல்லது தோலில் படநேர்ந்தால், சுவாசிக்கப்பட்டால் அபாயத்தை விளைவிக்கும். மூக்கிலும் தொண்டையிலும் எரிச்சல் உண்டாகும் என்பதைத் தவிர வேறு அபாயகரமான விளைவுகள் ஏதும் அறியப்படவில்லை. சுண்டெலிகளில் உட்செலுத்தி பரிசோதிக்கும் போது இதன் உயிர் கொல்லும் அளவு 344 மி.கி/கி.கி ஆக இருக்கிறது[3]. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia