ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை
ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை அல்லது ஆர்மீனிய அப்போஸ்தலிக்க திருச்சபை (Armenian Apostolic Church; ஆர்மீனியம்: Հայ Առաքելական Եկեղեցի, Hay Aṙak’elakan Yekeghetsi; [a]) என்பது ஆர்மீனிய மக்களின் தேசியத் திருச்சபையாகும். இது கிழக்கத்திய மரபுவழித் திருச்சபையின் பகுதியும் மிகப் பண்டைய கிறித்தவ சமூகங்களில் ஒன்றுமாகும்.[2] ஆர்மீனியா நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (பாரம்பரியமாக 301 இல்) இத்திருச்சபையை உருவாக்கியதும், உத்தியோகபூர்வச் சமயமாக கிறித்தவத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது நாடும் ஆகும்.[3] திருத்தூதர்கள் பர்த்தலமேயு, ததேயு என்போரின் மறைபணி, முதலாம் நூற்றாண்டில் கிறித்தவத்தின் ஆரம்ப மைய மூலம் என்பவற்றுக்கு இத்திருச்சபை உரிமை கொள்கிறது. இது சிலசமயங்களில் ஆர்மீனிய மரபுவழித் திருச்சபை (Armenian Orthodox Church) அல்லது கிரகோரியத் திருச்சபை (Gregorian Church) எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. இதன் நிறுவனர்களாகிய பர்த்தலமேயு, ததேயு என்போரின் நோக்கைக் கொண்டு இருந்ததும், திருச்சபையின் முதலாவது உத்தியோகபூர்வ ஆளுனராக புனித கிரோகரியின் கலப்படமற்ற நோக்கும் இருந்ததால் பின்னவர் இதனைத் திருச்சபையாக கருத விரும்பவில்லை. இது சுருக்கமதாக ஆர்மீனிய திருச்சபை (Armenian Church) எனவும் அறியப்படுகிறது. வரலாறு![]() மூலங்கள்ஆர்மீனிய திருச்சபை திருத்தூதர்கள் பர்த்தலமேயு, ததேயு என்போரின் ஊடாக திருத்தூதர் மரபுவழியை உரிமை கொள்கிறது.[4][5][6] பழங்கதை ஒன்றின்படி, இரு திருத்தூதர்களின் வருகையும் அவர்கள் கொண்டு வந்த "எடோசாவின் உருவம்" (இயேசுவின் உருவம் பதித்த துணி) மூலம் ஐந்தாம் அப்காரின் தொழுநோய் குணமாகியதும், கி.பி. 30 இல் அவர் மதமாறினார். அப்கார் ததேயுவை ஆர்மீனியாவெங்கும் மறைபரப்புதலுக்கு நியமித்தார். இதனைத் தொடர்ந்து அரசர் சனட்ருக்கின் மகளை ததேயு மதமாற்றினார். அதனால் ததேயுவும் அரசருடைய மகளும் மறைசாட்சியாக கொல்லப்பட்டனர். இதன் பிறகு, பர்த்தலமேயு ஆர்மீனியாவுக்குச் சென்றார். அவர் செல்லும்போது கன்னி மரியாளின் உருவப்படத்தையும் கொண்டு சென்று, அனகித் கோயில் இருந்ந இடத்தின் மேல் அவர் உருவாக்கிய கன்னியர் மாடத்தில் வைத்தார். பர்த்தலமேயு சனட்ருக்கின் சகோதரியை மனமாற்றினார். இதனால் பர்த்தலமேயுவும் சனட்ருக்கின் சகோதரியும் மறைசாட்சியாக கொல்லப்பட்டனர். இரு திருத்துதர்களுடைய இறப்புக்கு முன்பே, அப்பகுதிக்குரிய உள்ளூர் ஆயர் திருநிலைப்படுத்தப்பட்டார். மேலும், சில வேறு ஆர்மீனியர்களும் இயேசுவின் சகோதரர் யாக்கோபுவால் ஆர்மீனியாவுக்கு வெளியில் வைத்து திருநிலைப்படுத்தப்படடார்கள்.[5][6] ஆர்மீனிய கிறித்தவர்களின்படி, அவர்ளை அரசர்களான அக்சிடரஸ், முதலாம் கோஸ்ரோவ், மூன்றாம் டிரிடட்ஸ் ஆகியோர் துன்புறுத்தினர். இவர்களில் மூன்றாம் டிரிடட்ஸ் கிறித்தவத்திற்கு கிரகோரியினால் மதமாற்றப்பட்டார்.[4] பண்டைய ஆர்மீனியாவின் அரச சமயமாக கிறித்தவம் ஏற்றுக் கொள்ளப்பட்டமை "பெரும்பாலும் அதன் வரலாற்றில் மிக முக்கிய அடி" எனக் குறிப்பிடப்படுகிறது.[7] இதனால் ஈரானிடமிருந்தும் சரத்துஸ்திர சமய அடித்தளத்திலிருந்தும் இது வேறுபட்டும், பார்த்திய செல்வாக்கிலிருந்தும் தன்னைப் பாதுகாத்தது.[4][7] வேறு அறிஞர்களின் கூற்றுப்படி, கிறித்தவ ஏற்றக்கொள்ளல் பகுதியாக இருந்தது என்றும் சஸ்சானிட்டுக்களின் எதிர்ப்பினை உருவாக்கியது என்றும் குறிப்பிடுவர்.[8] டிரிடேட்ஸ் ஆர்மீனியத் திருச்சபையின் முதலாவது "கத்தோலிக்கஸ்" என கிரகரியை அறிவித்து, அவரை செசேரியாவிற்கு அருள்நிலைப்படுத்தப்பட அனுப்பினார். அவர் திரும்பியதும், சிலைகளை அகற்றி தேவாலயங்களையும் துறவி மடங்களையும் கட்டி, குருக்களையும் ஆயர்களையும் திருநிலைப்படுத்தினார். அவர் தியானத்தில் இருக்கும்போது, இயேசு சுத்தியலால் உலகிற்கு அடிக்க வருவது போல் அகக்காட்சி கண்டார். இந்த இடத்தில் பெரும் சிலுவை ஒன்றுடன் கிறித்தவக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. கடவுள் பிரதான ஆர்மீனியத் தேவாலயம் ஒன்றை அங்கு கட்டுவதற்கு குறிப்பிடுகிறார் என அவர் தெரிவித்தார். அரசருடைய உதவியுடன் அவர் அகக்காட்சியின்படி செய்து முடித்தார். அவர் அந்நகரை எச்மியாட்சின் பேராலயம் என்று, அதாவது "ஒரே பேறானவர் இறங்கிய இடம்" என்று பெயர் மாற்றினார்.[9] ஆரம்பத்தில் ஆர்மீனியத் திருச்சபை உலகில் பெரும் திருச்சபையாக இருந்தது. இதன் அங்கத்தவர்கள் நீசியாவின் முதலாம் சங்கத்திலும் (325) கொன்தாத்திநோபிளின் முதலாம் சங்கத்திலும் (381) பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். ஆயினும், எபேசுவின் முதலாம் சங்கத்தில் (431) பங்குபற்றாமல், சங்கத்தின் தீர்மானங்களுக்கு உடன்படுவதாக செய்தி அனுப்பினார்கள்.[10] குறிப்புகள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia