ஆர். வைத்திலிங்கம்இரெ. வைத்திலிங்கம் என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] 2001 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆவர். இவர் 30 சூன் 2016 அன்று மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2021 சட்டமன்றத் தேர்தலில் இவர் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், தான் வகித்திருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து 10 மே 2021 அன்று விலகினார்.[5][6] வாழ்க்கைக் குறிப்புஇவரது பெற்றோர் ரெங்கசாமி, முத்தம்மாள் ஆவர். இவரின் சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள தெலுங்கன் குடிக்காடு என்பதாகும். இவர் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அரசியல் வாழ்க்கை
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia