ஆலீஸ் குமாரசுவாமி
இரத்தன் தேவி (Ratan Devi, 1889 - 1958 சூலை 15) ஆலிஸ் எத்தேல் ரிச்சர்ட்சன் என்ற பெயரில் பிறந்த இவர் ஓர் இசையமைப்பாளர் ஆவார். இவர் இந்திய இசையை பதிவு செய்தார். மேலும் இந்து சமய பாடல்கள் மற்றும் கவிதைகளை மேடைகளில் நிகழ்த்தினார். பிரித்தன் மற்றும் அமெரிக்காவில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். பிரித்தானிய பேரரசில் இசை தொடர்பாக கவனிக்கப்படாத குறிப்பிடத்தக்க பெண்களில் ஒருவராக ஆலிஸை மார்ட்டின் கிளேட்டன் என்பவர் அடையாளம் காட்டுகிறார்.[1] சுயசரிதைஆலிஸ் எத்தேல் ரிச்சர்ட்சன் 1889 அக்டோபரில் இங்கிலாந்தின் செபீல்டில் ஜார்ஜ் ரிச்சர்ட்சன் மற்றும் சாரா பால்க்னர் ஆகியோருக்குப் பிறந்தார்.[2] [3] முதல் திருமணம்1907ஆம் ஆண்டில் ஆலிஸ் கலை வரலாற்றாசிரியர் ஆனந்த குமாரசுவாமி மற்றும் அவரது மனைவியும், கைவினைக் கலைஞருமான டையர் எத்தேல் ஆகியோர் நடத்தி வந்த கலைக்குழுவின் அங்கமாக ஆனார். ஆனந்திற்கும் எத்தேலுக்கும் குழந்தை இல்லை. ஆனந்த் ஆலிஸுடன் ஒரு இரகசிய உறவில் இருந்தார். இறுதியில் ஆனந்த் தான் ஆலிஸை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருக்கும் யோசனையை தனது மனைவி எத்தேலிடம் கூறினார். இதைக் கேட்ட எத்தேல் வீட்டை விட்டு வெளியேறினார்.[3] ஆலிஸ் 1913இல் இலண்டனின் செயின்ட் பாங்க்ராஸில் குமாரசாமியை மணந்தார்.[4] இவர்களுக்கு நாரத குமாரசாமி மற்றும் ரோகினி குமாரசாமி என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.[5] இருவரும் சேர்ந்து இந்தியா வந்து காஷ்மீரின் சிறீநகரில் ஒரு வீட்டுப் படகில் தங்கினர்.[6] குமாரசாமி ராஜபுதன ஓவியத்தையும், ஆலிஸ் கபுர்தலாவைச் சேர்ந்த அப்துல் ரஹீமுடன் இந்திய இசையையும் பயின்றார். இவர்கள் இங்கிலாந்து திரும்பியபோது, ஆலிஸ் ரத்தன் தேவி என்ற மேடை பெயரில் இந்திய பாடல்களை மேடைகளில் நிகழ்த்தினார்.[3] இரத்தன் தேவி வெற்றிகரமான் இசைக் கலைஞராக இருந்தார். நிகழ்ச்சிகள்1913ஆம் ஆண்டில் இவர் தனது கணவருடன் இணைந்து எழுதிய "பஞ்சாப் மற்றும் காஷ்மீர்" என்ற தலைப்பில் முப்பது பாடல் தொகுப்பினை வெளியிட்டார். இந்தப் புத்தகம் இரவீந்திரநாத் தாகூரின் அறிமுகத்துடன் வெளியானது. தாகூர் ஆலிஸின் பாடலைப் பற்றி மிகவும் நல்லமுறையில் விமர்சனம் செய்திருந்தார்.[7] பத்திரிகைகளைத் தவிர, இசையமைப்பாளர் பெர்சி கிரெய்ங்கர், நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட் ஷா மற்றும் கவிஞர் டபிள்யூ. பி. யீட்சு ஆகியோரிடமிருந்தும் நல்ல விமர்சனங்களையும் பெற்றார். [3] இரண்டாவது திருமணம்ஆனந்த் குமாரசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக அவரை ஆலிஸ் விவாகரத்து செய்தார். பின்னர் அமெரிக்கக் கலைஞரான ஸ்டெல்லா ப்ளாச் என்பவரை மணந்தார்.[8] மூன்றாவது திருமணம்ஆலிஸ், சக்திவாய்ந்த காந்தங்களை கண்டுபிடித்ததற்காக அறியப்பட்ட பிரான்சிஸ் பிட்டர் என்பவரை 1928 மே 31 அன்று நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் திருமணம் செய்து கொண்டார். வெஸ்டிங்ஹவுஸில் பணிபுரிந்த பிட்டர் 1930 இல் கலிபோர்னியாவின் பாசடீனாவில் உள்ள கால்டெக்கிலும் பின்னர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்திலும் பேராசியராகவும் இருந்தவர்.[9] இறப்பு1958 சூலை 15, அன்று மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பிலிப்ஸ் இல்லத்தில் ஆலிஸ் இதய நோயால் இறந்தார்.[9] மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia