ஆஸ்திரேலியாவின் புவியியல்
ஆஸ்திரேலியாவின் புவியியல் (Geography of Australia) ஆஸ்திரேலியா கண்டம் உலகின் ஏழு கண்டங்களில் ஒன்றாகும். ஓசியானியாவின் தென் பசிபிக் கடலில் அமைந்த உலகின் சிறிய கண்டமான ஆஸ்திரேலியா கண்டத்தில் அமைந்த தீவு நாடான ஆஸ்திரேலியா ஆறு வகையான உயிர்ப்புவியியல் பிரதேசங்களைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகின் ஆறாவது பெரிய நாடாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ளது. ஆஸ்திரேலியா கண்டத்தின் புவியியல் மிகவும் மாறுபட்டது, ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மற்றும் டாஸ்மேனியாவின் பனி மூடிய மலைகள் முதல் பெரிய பாலைவனங்கள், வெப்பமண்டல மற்றும் மிதமான காடுகள், புல்வெளிகள், தரிசு நிலங்கள் மற்றும் வனப்பகுதிகள் கொண்டது. ஆஸ்திரேலியா நிலப்பகுதிக்கு மேற்கில் இந்தோனேசியா, கிழக்கு திமோர் மற்றும் வடக்கில் பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள், வனுவாட்டும், கிழக்கில் நியூ கலிடோனியா, தென்கிழக்கில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இயற்பியல் புவியியல்![]() ![]() ![]() ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடலுக்கு இடையில் ஓசியானியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது 7,686,850 சகிமீ (2,967,910 சதுர மைல்) பரப்பளவு கொண்ட உலகின் ஆறாவது பெரிய நாடாகும். இது அமெரிக்காவின் 48 மாநிலங்களை விட சற்று சிறியதாகும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தை விட 31.5 மடங்கு பெரியதாகும். ஆஸ்திரேலியாவின் மொத்த கடற்கரை நீளம் 35,821 கிமீ (22,258 மைல்) ஆகும் மேலும் அதன் தீவுக்கூட்டங்களின் கடற்கரை நீளம் 23,860 கிமீ (14,830 மைல்) ஆக உள்ளது.[1] நாடு முழுவதும் 758 கழிமுகங்கள், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல மண்டலங்களில் அமைந்துள்ளன. [2] சமீபத்திய உலகளாவிய ரிமோட் சென்சிங் பகுப்பாய்வு ஆஸ்திரேலியாவில் 8,866 சகிமீ பரப்பளவிற்கு அலை தட்டையான பகுதி கொண்டுள்ளது.[3] ஆஸ்திரேலியா 8,148,250 சகிமீ (3,146,060 சதுர மைல்) பரப்பளவிற்கு 3 வது மிகப்பெரிய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளது. பூமியில் உள்ள எந்த நாட்டைக் காட்டிலும் ஆஸ்திரேலியா மிகப்பெரிய கடல் எல்லைக்குள் உள்ளது. [4] ஆஸ்திரேலியாவின் நான்கு புறங்களிலும் பசிபிக் கடல் சூழ்ந்திருப்பதால், அதற்கு நில எல்லைகள் இல்லை. கண்டத்தின் பிரதான நிலப்பகுதியின் வடக்குப் பகுதிகள் குயின்ஸ்லாந்தின் கேப் யார்க் தீபகற்பம், வடக்கு பிரதேசத்தின் மேல் முனை ஆகும். நாட்டின் வடக்குப் பகுதி டோரஸ் ஜலசந்தி தீவுகளில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியானது மேற்குப் பீடபூமியைக் கொண்டுள்ளது, இது மேற்கு கடற்கரைக்கு அருகில் மலை உயரத்திற்கு உயர்ந்து கண்டத்தின் மையத்திற்கு அருகில் குறைந்த உயரத்தில் அமைகிறது. ஹேமர்ஸ்லி மலைத்தொடர், மேக்டொனெல் மலைத்தொடர்கள் மற்றும் மஸ்கிரேவ் மலைத்தொடர் போன்ற பல்வேறு மலைத்தொடர்களால் மேற்கு பீடபூமி உடைக்கப்பட்டிருந்தாலும், பொதுவாக தட்டையானது. மேற்கு பீடபூமியில் மேற்பரப்பு நீர் பொதுவாக குறைவாக உள்ளது. இருப்பினும் மேற்கு மற்றும் வடக்கில் மர்சிசன், ஆஸ்பர்டன் மற்றும் விக்டோரியா ஆறுகள் பாய்கிறது. கிழக்கு மேட்டு நிலம் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் காடுகளால் அதிக மழைப்பொழிவு, மிகுதியான மற்றும் மாறுபட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் அடர்த்தியான மனிதக் குடியிருப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கிழக்கு மலைப்பகுதிகளுக்கும் மேற்கு பீடபூமிக்கும் இடையில் மத்திய தாழ்நிலங்கள் உள்ளன, அவை கிரேட் ஆர்டீசியன் பேசின் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நதி அமைப்புகளான முர்ரே-டார்லிங் வடிநிலம் மற்றும் அயர் ஏரி வடிநிலம் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உலகின் மிகப்பெரிய பெருந் தடுப்புப் பவளத்திட்டு வளாகம் உள்ளது. பெரிய மற்றும் மலைத்தொடரான டாஸ்மேனியா, ஆஸ்திரேலியாவின் மாநிலமும், ஆஸ்திரேலிய நிலப்பகுதியின் தென்கிழக்கு மூலையில் தெற்கே உள்ளது. இது பெருமளவிலான மழையைப் பெறுகிறது. மேலும் இதன் நிலப்பரப்பு அதிக வளமான மண்ணைக் கொண்டுள்ளது மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia