நிலக்கரி (ஆங்கிலம்: Coal) என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப் படுகிறது. பெரும்பாலும் கரி மற்றும் ஹைடிரோகார்பன்களால் ஆன நிலக்கரி கந்தகம் உட்பட்ட பல இதர வேதிப் பொருட்களையும் கொண்டிருக்கும். தொழில் புரட்சியுடன் தொடர்புடைய நிலக்கரி ஒரு முக்கியமான எரிபொருளாகும்.
நிலக்கரி ஓர் அடையற் பாறை வகையைச் சேர்ந்ததாகும். அது வழமையாக ஒரு சதுப்பு நில சூழலில் பாதுகாக்கப்பட்டு திரட்சியடைந்த தாவர உயிர்சுவடுகளினால் உருவாகியதாக காணப்படுகின்றது. இயற்கை வாயு, கனிய எண்ணெய் போன்றவற்றுடன் குறிப்பிடப்படும் முக்கியமான தொல்படிவ எரிபொருட்களுள் ஒன்றாகும். நிலக்கரி மின்உற்பத்தி போன்ற பல்வேறு பரந்த பயன்பாடுடையது. நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.[1] 1983 லிருந்து உலக நிலக்கரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.[2]
ஜெர்மனியின் கார்ஸ்வீலரில் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம். உயர் தெளிவுத்திறன் பனோரமா.
நிலக்கரி வணிகம்
நிலக்கரி பூமியிலிருந்து இருந்து எடுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள், அல்லது நிலத்தடி குழாய் சுரங்கங்கள் அல்லது திறந்த குழிச் சுரங்கங்கள் மூலம் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. 1983 லிருந்து உலகின் நிலக்கரி தயாரிப்பாளர்களுள் சீனா முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. உலகின் 7,695 மில்லியன் டன்கள் அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 49.5% அதாவது 3,250 மில்லியன் டன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அமெரிக்கா (993 மில்லியன் டன்கள்), இந்தியா (589 மில்லியன் டன்கள்), ஐரோப்பிய ஒன்றியம் (576 மில்லியன் டன்கள்), ஆஸ்திரேலியா (416 மில்லியன் டன்கள்) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.[3] அதிகளவு நிலக்கரி ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா திகழ்கிறது. 2010 இல் இந்நாடு 328 மில்லியன் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்தது. இது உலக நிலக்கரி ஏற்றுமதியில் 27.1 விழுக்காடு ஆகும். அடுத்த இடத்தில் இந்தோனேசியா 316 டன்களை ஏற்றுமதி செய்து இரண்டாமிடத்திலுள்ளது இதன் ஏற்றுமதி அளவு உலக நிலக்கரி ஏற்றுமதியில் 26.1 விழுக்காடு ஆகும்.[4] நிலக்கரியை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடுகளாக 207 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து ஜப்பான் முதலிடத்திலும் (உலக அளவில் 17.5%) சீனா 195 மில்லியன் டன்கள்(உலக அளவில் 16.6%) நிலக்கரியையும் தென்கொரியா 126 மில்லியன் டன்கள் (10.7%) நிலக்கரியையும் இறக்குமதி செய்கின்றன.[5]
தோற்றம்
நிலக்கரியின் வேதிக் கட்டமைப்பின் எடுத்துக்காட்டு
மிகப்பன்னெடுங்காலத்திற்கு முன்பு பூமியில் அடர்ந்த காடுகளும் ஈரப்பதம் மிகுந்த சதுப்புநிலங்களும் காணப்பட்டன. இயற்கையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்காடுகள் மண்ணில் புதையுண்டன. மேன்மேலும் மண்ணானது இப்பகுதியை மூடியது. இச்செயல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது. புவியின் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் இவை அழுத்தத்திற்கு உள்ளாயின. எனவே புதையுண்ட தாவரங்கள் படிவுகளாக மாறி நிலக்கரியாக மெதுவாக உருமாறத்தொடங்கின. நிலக்கரியில் கார்பன் பெருமளவு அடங்கியுள்ளது. இவ்வாறு தாவஙக்ள் நிலக்கரியாக மாறுவது கரிமமாற்றம் என்றழைக்கப்படுகிறது.[6][7][8]
இங்கு இருப்புக் காலம் என்பது அட்டவணையிலுள்ள நாடுகளின் தற்போதைய உற்பத்தி அளவையும் மெய்பிக்கப்பட்ட இருப்பையும் கொண்டு மதிப்பிடப்பட்டதாகும். எதிர்காலத்தில் உற்பத்தி அளவு கூடுதலாவதையோ அல்லது தற்கால உற்பத்தி மாற்றங்களையோ கருத்தில் கொள்ளவில்லை. ஆண்டுக்கு 100 மில்லியன் டன்களுக்கு கூடுதலான உற்பத்தியுள்ள நாடுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. ஒப்பீட்டிற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளும் தரப்பட்டுள்ளன. எண்ணெய்க்கு இணையான டன்களில் மாற்றப்பட்ட தரவுகளைக் கொண்டு நாடுகளின் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நாடு வாரியாகவும் ஆண்டு வாரியாகவும் நிலக்கரி உற்பத்தி (மில்லியன் டன்கள்)[3]
ஆண்டுக்கு 10 மில்லியன் டன்களுக்கு கூடுதலாக மொத்த ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நிகர ஏற்றுமதியாளர்கள் எனக்கொண்டாலும் ஆஸ்திரேலியா (328.1 மில்லியன் டன்கள்), இந்தோனேசியா (316.2) மற்றும் உருசியா (100.2) பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகும்.
நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி ஏற்றுமதி (மில்லியன் அமெரிக்க டன்கள்)[4][13][14]
20 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக நிலக்கரியை மொத்த இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல். நிகர இறக்குமதி எனக்கொண்டாலும் பெருமளவு இறக்குமதியாளர்களாக ஜப்பான் (206.0 மில்லியன் டன்கள்), சீன மக்கள் குடியரசு (172.4) மற்றும் தென் கொரியா (125.8) உள்ளனர்.[15]
நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி இறக்குமதி (மில்லியன் அமெரிக்க டன்கள்)[5]
↑எஆசு:[1293:ACFPUH2.0.CO;2 10.1130/0016-7606(1957)68[1293:ACFPUH]2.0.CO;2] This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand