ஆ. கந்தையா
ஆ. கந்தையா (மார்ச் 19, 1928 - அக்டோபர் 3, 2011) ஈழத்துத் தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார். கட்டுரை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்தவர். வாழ்க்கைக் குறிப்புகந்தையா யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மறவன்புலவு என்ற ஊரில் ஆறுமுகம், சிவகாமி ஆகியோருக்குப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையிலும், நுணாவில் மகாலக்சுமி வித்தியாசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் (1948-49) பயின்றார். பள்ளிப் படிப்பின் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற்ற ஆசிரியராக வெளியேறினார். 1953 முதல் 1955 வரை கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1956 இல் சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் மு. வரதராசன் போன்றோரின் வழிகாட்டலில் தமிழ்த் துறையில் பட்டம் பெற்றார். வரதராசனாரின் நெறியில் தந்தையின் பரிசு என்னும் நூலை எழுதியிருக்கிறார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் 'பக்தி இலக்கியம்' பற்றி ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றினார். இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் சிட்னிப் பல்கலைக்கழகத்திலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தார். 1978-80ஆம் ஆண்டுகளில் இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1984-85ஆம் ஆண்டுகளில் பிரித்தானியத் திறந்த பல்கலைக்கழகத்தில் தொலைக்கல்வி பயின்றவர். இலங்கைக் கல்விச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை 45 நூல்களை எழுதியிருக்கிறார். வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முதனிலை வகுப்புகளுக்குப் பாடநூலாக இவரின் "மலரும் மணமும்" நூல் அமைந்தது. மேலைத்தேய ஆங்கில இலக்கிய கர்த்தாக்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழில் அறிமுகப்படுத்தியவர். அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த பின்பும் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதியவர். மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள இவர் அவுஸ்திரேலிய சிறப்பு ஒலிபரப்புச் சேவைக்காக கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்துக்கு ஆங்கில உபதலைப்புகளை எழுதினார். விருதுகள்
வெளிவந்த நூல்கள்புலம் பெயர முன்னர் எழுதியவை
புலம் பெயர்ந்த பின்னர் எழுதிவை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia