ஆ. கார்மேகக் கோனார்
ஆ. கார்மேகக் கோனார் (Karmegha Konar) மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவாளர். எழுத்தாளர். பிறப்புகார்மேகக் கோனார் 1889ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27ஆம் நாளன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர்.[1] பணிமதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி 1951ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.[2] அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்:
இவர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார். விருதுஇவருக்கு மதுரையில் 1955ஆம் ஆண்டு சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் செந்நாப்புலவர் என்னும் பட்டத்தை பி. டி. இராசன் வழங்கினார்.[2] ஆக்கங்கள்இவர் பின்வரும் நூல்களை இயற்றி இருக்கிறார்:
இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி உள்ளது.[3][4] மறைவுகார்மேகர் 22-10-1957ஆம் நாள் மதுரையில் மறைந்தார்.[2] சான்றடைவு
|
Portal di Ensiklopedia Dunia