இங்கிலாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி (England women's cricket team) பெண்கள் பன்னாட்டு அளவில் விளையாடும் துடுப்பாட்ட வடிவத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அணியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம் (ஈசிபி) நிர்வகிக்கிறது. ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தனது முதல் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 2-0 எனும் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
2017 ஆம் ஆண்டில், இந்த அணி பிபிசி விளையாட்டில் ஆளுமைமிக்க அணிக்கான விருதை வென்றனர்.
வரலாறு
1935, சிட்னியில் நடந்த இரண்டாவது பெண்கள் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள்.
அந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றது மற்றும் மூன்றாவது போட்டியினை சமன் செய்து தொடரைக் கைப்பற்றியது. பின்னர் நியூசிலாந்தை ஓர் ஆட்டப்பகுதி மற்றும் 337 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [8]
முதல் உலகக் கிண்ணம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதுவரை தேர்வு போட்டியில் விளையாட அனுமதி வழங்கப்படவில்லை, ஆனால் இங்கிலாந்து 1969-70 மற்றும் 1970-71 ஆம் ஆண்டுகளில் சர் ஜாக் ஹேவர்டின் நிதியுதவியுடன் இரண்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டது. [9]
2005
2005 உலகக் கோப்பையில், அரையிறுதியில் இங்கிலாந்து ஆத்திரேலியாவிடம் தோற்றது. இருப்பினும், ஆத்திரேலியாவுக்கு எதிரான இரண்டு தேர்வு போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் வென்றது, 42 ஆண்டுகளில் முதல் முறையாக பெண்கள் ஆஷஸைக் கோரியது.