இசுருமுனிய நூதனசாலை
இசுருமுனிய நூதனசாலை அல்லது இசுருமுனிய அருங்காட்சியகம் (Isurumuniya Archaeological Museum) என்பது இலங்கையின் இசுருமுனியவில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் இசுருமுனி விகாரையில் 1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவ்வருங்காட்சியகம் இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இசுருமுனிய விகாரை வளாகத்தில் காணப்படும் சிற்பச் செதுக்கல்களே இங்கு அதிகமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2] இவற்றுள் மிகவும் பிரசித்தமானது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசுருமுனிய காதலர் சிலை எனும் சிற்பச் செதுக்கல் ஆகும். இது குப்தர் கால வடிவமைப்பை ஒத்ததாகக் காணப்படுகின்றது. இது அரச தோட்டைத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.[3] திறக்கும் நேரம்ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இவ்வருங்காட்சியகம் திறந்திருக்கும். பொதுசன விடுமுறைகளிலும் வங்கி விடுமுறைகளிலும் இவ்வருங்காட்சியகம் திறக்கப்படமாட்டாது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia