நாணய நூதனசாலை, கொழும்பு
நாணய நூதனசாலை, கொழும்பு அல்லது நாணய அருங்காட்சியகம், கொழும்பு (Currency museum, Colombo) என்பது இலங்கையில் அமைந்துள்ள ஒரேயொரு நாணய அருங்காட்சியகம் ஆகும். இது கொழும்பின் புறக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியில் தலைமைக் காரியாலயத்தில் அமைந்துள்ளது. கி.மு. 3 ஆம் ஆண்டிற்குப் பின்னர் புழக்கத்தில் இருந்த நாணயக்குற்றிகள் தொடக்கம் நவீன காலத்தில் புழக்கத்திலுள்ள நாணயக்குற்றிகள் மற்றும் நாணயத்தாள்கள் வரை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனுராதபுர யுகத்திலும், பொலன்னறுவை தொடக்கம் கோட்டை யுகத்திலும் காலனித்துவ காலத்திலும் பயன்படுத்திய நாணயங்களை இங்கு காணலாம். வெளிநாட்டு நாணயத்தாள்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[1] திறக்கும் நேரம்இவ்வருங்காட்சியகத்தினுள் உள்நுழைவதற்கு பிரத்தியேகக் கட்டணங்கள் எதுவும் இல்லை. வாரநாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இவ்வருங்காட்சியகம் திறந்திருக்கும். பொதுசன விடுமுறைகளிலும் வங்கி விடுமுறைகளிலும் இவருங்காட்சியகம் திறக்கப்படமாட்டாது. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia