இஞ்சிமேடு
![]() இஞ்சிமேடு (Injimedu) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] இது இஞ்சிமேடு ஊராட்சிக்கு உட்பட்டது. 2001 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தில் 406 வீடுகளும், 1,663 மக்களும் வசிக்கின்றனர். [1] சமயம்இஞ்சிமேடு யக்ஞ வேதிகை என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த கிராமத்தில் பல வேள்விச் சடங்குகள் செய்யப்படுகின்றன. இது பெரணமல்லூர் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இஞ்சிமேடு செல்ல சிறந்த வழி 1) காஞ்சிபுரம்-செய்யாறு-பெரணமல்லூர்-இஞ்சிமேடு 2) தாம்பரம்-உத்திரமேரூர்-வந்தவாசி-மழையூர் (சேத்துப்பட்டு சாலை) -சின்ன கோழிபுலியூர்-இஞ்சிமேடு. வைணவ சித்தாந்தக் கோட்பாடுகளை பறைசாற்றும் அகோபில மடத்தின் 34வது பட்டம் சிறீ சடகோப ராமானுஜ யதீந்திர மகா தேசிகன் மற்றும் 42வது பட்டம் சிறீரங்க சடகோப யதீந்திர மகா தேசிகன் ஆகிய இருவரும் இத்தலத்தில் பிறந்தவர்களாவர். இங்கு பல கோயில்கள் இருந்தன தொடர்ச்சியான படையெடுப்புகளால் அவை அழிக்கப்பட்டன. கிராமத்தில் தற்போது மூன்று முக்கிய கோவில்கள் உள்ளன: பெருமாள் கோவில், லட்சுமிநரசிம்மர் கோவில், சிவன் கோவில் ஆகியவை ஆகும். இஞ்சிமேடு பெரியமலை கோவில்இஞ்சிமேடு பெரியமலை கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தொன்மவியல் ரீதியாக இது கிருதயுகத்துடன் தொடர்புடையது .
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia