இடாய்ச்சு இலத்தீன்அகரவரிசை கொண்டு எழுதப்படுகின்றது. 26 வழமையான எழுத்துக்களைத் தவிர, இடாய்ச்சு மூன்று உயிரெழுத்துக்களை உயிர் மாற்றக் குறியீடுகளுடனும் (Ä/ä, Ö/ö, Ü/ü) எழுத்து ßவையும் பயன்படுத்துகின்றது.
ஆத்திரிய இடாய்ச்சு, சுவிசு இடாய்ச்சு போன்று இடாய்ச்சு மொழி பல வட்டார வழக்குகளைக் கொண்டுள்ளது.
இடாய்ச்சு மொழி ஜெர்மனி, ஆசுதிரியா, லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளில் அலுவல்மொழியாகவும் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் வரையறுக்கப்பட்ட அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இத்தாலி, சுலோவீனியா, அங்கேரி, நமீபியா, போலந்து போன்ற பல நாடுகளில் சிறுபான்மை மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. மிகவும் பயன்படுத்தப்படும் மொழியாக அறிவியலில் இரண்டாவதாகவும் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலில் மூன்றாவதாகவும் உள்ளது; வணிகம் மற்றும் பண்பாட்டில் முதன்மையான மொழியாக விளங்குகின்றது. உலகளவில், புதிய நூல்கள் வெளியிடுவதில் இடாய்ச்சு மொழி ஐந்தாவது இடத்தில் உள்ளது. உலகின் அனைத்து நூல்களிலும் (மின்னூல்கள் உட்பட) பத்தில் ஒன்று இடாய்ச்சில் உள்ளது.[14][15] இணையதளங்களில் உள்ளுரைக்காக மிகவும் பயன்படுத்தப்படும் மொழிகளில் மூன்றாவதாக உள்ளது.[16]
இடாய்ச்சு எழுத்துக்கள்
a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
entschuldigen Sie – மன்னித்துவிடுங்கள் – என்ஷூல்டிகன் சீ
guten Tag – வணக்கம் – கூடன் டாக்
auf wiedersehen - மீண்டும் சந்திப்போம் – ஆஃப் விடர்சேகென்
tschüss – போய் வருகின்றேன் – சூஸ்
guten Morgen – காலை வணக்கம் – கூடன் மோர்கன்
gute Nacht – இரவு வணக்கம் – கூட்டெ நாஹ்ட்
இடாய்ச்சு இலக்கணம்
Declension of the German definite articles, der, die and das ("the").
இடாய்ச்சு இலக்கணம் சற்றுச் சிக்கலானது. இடாய்ச்சு மொழியில் சொற்கள் பால், இடம்,காலம் போன்றவற்றைப் பொறுத்து மாறும்; இம்மொழியில் ஆண், பெண், அஃறிணை என மூன்று பாலினங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரே வேர்ச்சொல்லிலிருந்து பல சொற்கள் வந்துள்ளன.
இடாய்ச்சு இலக்கணத்தில் இடம் பெறும் சுட்டிடைச் சொற்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ உள்ளவை போல சரியான வரையறைக்குள் அடங்காதவை.
யேர்மனிய மொழி der, die, das என்ற மூன்று Artikels ஐ அடிப்படையாகக் கொண்டே பேசப்படுகின்றது. வேற்றுமை உருபுகள் Artikels இன் மாற்றங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குமான Artikel தெரியாவிடின் வேற்றுமைகளைக் கற்பதோ, சரியான முறையில் ஜேர்மன் மொழியைப் பேசுவதோ முடியாத விடயம் என்றே சொல்லலாம்.
நமீபியாவில் தினசரி வாழ்வில் இடாய்ச்சுப் பயன்படுத்தப்படுவதைக் காட்டும் படிமம்ஐரோப்பா முழுமையிலும் இடாய்ச்சு அறிவு பெற்றோர். ஐரோப்பாவில் இடாய்ச்சைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 100 மில்லிநன் உள்ளனர்.
ஐரோப்பாவுக்கு வெளியே இடாய்ச்சு மொழியை பேசுவோரின் தொகையை உள்ளடக்கியப் பட்டியல்:
நாடு
இடாய்ச்சு மொழி பேசுவோர் தொகை (ஐரோப்பாவுக்கு வெளியே)[18]
யாரெழுதியது என அறியப்படாத நிபெலுங்கென்லீடு இக்காலத்தின் முதன்மை படைப்பாக உள்ளது. 19வது நூற்றாண்டில் யேகப் வில்கெம் கிரிம் தொகுத்து வெளியிட்ட தேவதைக் கதைகள் உலகெங்கும் பிரபலமாயிற்று.
இறைமையியலாளர் லூதர் விவிலியத்தை இடாய்ச்சில் மொழிபெயர்த்தார். இவரே தற்கால "உயர் இடாய்ச்சு" மொழிக்கு வித்திட்டதாக பலராலும் கருதப்படுகின்றார். லெசிங், கேத்தா, சில்லர், கிளெய்ஸ்ட், ஹாஃப்மேன், பிரெக்ட், ஹைய்ன், சுமிட் மிகவும் அறியப்பட்ட இடாய்ச்சுக் கவிஞர்களும் எழுத்தாளர்களுமாக உள்ளனர். பதின்மூன்று இடாய்ச்சுக் கலைஞர்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்: மொம்சன், ருடோல்ஃப் கிறிஸ்டோப் யூக்கென், பவுல் பொன் எய்சு, கெர்கார்ட் ஆப்ட்மான், கார்ல் இசுப்பிட்லெர், தாமசு மாண், நெல்லி சாக்ஸ், ஹேர்மன் ஹெசே, போல், கனெட்டி, குந்தர் கிராசு, எல்பிரீடு யெலைனெக் மற்றும் கெர்ட்டா முல்லர்.
↑"Deutsch in Namibia"(PDF) (in German). Supplement of the Allgemeine Zeitung. 2007-08-18. Archived from the original(PDF) on 2018-12-25. Retrieved 2008-06-23.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
↑"Why Learn German?". SDSU – German Studies Department of European Studies. Archived from the original on 23 அக்டோபர் 2014. Retrieved 28 September 2014.