இடைக்காட்டுச் சித்தர்
இடைக்காட்டுச் சித்தர் என்பவர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காட்டுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்திப் பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார். இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும், சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம் பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார் என ஜனன சாகரம் 500 நூலில் போகர் கூறுகிறார்.[1] இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்![]() இடைக்காடனார் என்னும் பெயருடன் சங்க காலத்தில் ஒரு புலவர் வேறு. திருவள்ளுவ மாலை பாடல்களில் ஒன்றைப் பாடிய இடைக்காடனார் என்பவரும் வேறு. இங்கு கூறப்படும் இடைக்காடனார் ஒரு சித்தர். இடைக்காடு என்பது இவர் வாழ்ந்த ஊர். இந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ள இடைக்காடு என்றும், மதுரைக்குக் கிழக்கில் உள்ள இடைக்காடு என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஆடு, மாடு, அன்னம், மயில், குயில், புல்லாங்குழல், அறிவு, நெஞ்சம், முதலானவற்றை முன்னிறுத்திப் பாடுவதாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன.
தியானச் செய்யுள்
இடைக்காடர் சித்தரின் பூசை முறைகள்தேகசுத்தியுடன் சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் இடைக்காடர் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைத்து; முதலில இந்தச் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி பின்வரும் 16 போற்றிகளைக் கூறி தென்னம்பூ, மல்லிகை பூக்கள் கொண்டு அர்ச்சிப்பது. பதினாறு போற்றிகள்1. கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி! 2. கருணாமூர்த்தியே போற்றி! 3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி! 4. இளநீர் பிரியரே போற்றி! 5. உலகரட்சகரே போற்றி! 6. அபயவரதம் உடையவரே போற்றி! 7. மருந்தின் உருவமானவரே போற்றி! 8. பூலோகச் சூரியனே போற்றி! 9. ஒளிமயமானவரே போற்றி! 10. கருவை காப்பவரே போற்றி! 11. “ஸ்ரீம்” பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி! 13. ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி! 14. அங்குசத்தை உடையவரே போற்றி! 15. தேவலீலை பிரியரே போற்றி! 16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை ஓதப்படும். அதன்பின் நிவேதனமாக இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். இவருக்கு பச்சை வண்ண வஸ்திரம் அணிவிக்க வேண்டும். பூசை செய்ய உகந்த நாள் புதன்கிழமை. இவற்றையும் பார்க்கவும்அடிக்குறிப்பு
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia