ஈசான்ய ஞானதேசிகர்ஈசான்ய ஞானதேசிகர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவரே திருவண்ணாமலையில் வாழ்ந்த முதல் ஞானி என்று கூறுகின்றார்கள். இவரை கந்தப்ப தேசிகர் என்றும், திருவண்ணாமலையின் ஈசான்ய திசையில் வசித்தமையால் ஈசான்ய ஞான தேசிகர் என்று அழைக்கப்பட்டார். இளமையும் வாழ்வும்பாலாற்றின் அருகேயுள்ள வேலூர் என்ற இடத்தில் வாழ்ந்த திருநீலகண்டர் - உமைய பார்வதி தம்பதியினருக்கு மகனாக 1750 ல் பிறந்தார். [2]இவருக்கு பெற்றோரி கந்தப்பன் என்று பெயரிட்டனர். இள வயதில் துறவரம் பூண்டார், மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். [3] பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர், இறுதியில் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு ஈசான்ய இடத்தில் தவமிருந்தார். இவருடைய தவத்திற்கு இடையூறு நேராமல் இருக்க அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் புலிகளாக மாறி, காவல் இருந்ததாக கூறப்படுகிறது. அற்புதங்கள்
நூல்கள்
ஈசான்ய மடம்திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஈசான்ய லிங்கத்திற்கு அருகே ஞானதேசிகரின் சமாதி உள்ளது. [4] இவ்விடமானது தேசிகர் அண்ணாமலையாரை, தரிசிக்க செல்லும் இடமாகும். இவ்விடத்தினை வேட்டவலம் ஜமீன்தார் குடும்பம் மடமாக மாற்றியது. இவ்விடத்தினை ஈசான்ய மடம் என்கிறார்கள். இவற்றையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia