இணைப்பிழையம்
இணைப்பிழையம் அல்லது தொடுப்பிழையம் (Connective tissue) (CT) என்பது விலங்குகளின் நான்குவகை இழையங்களில் அல்லது திசுக்களில் ஒன்றாகும். மற்ற மூன்று இழையங்களாவன புறவணியிழையம், தசையிழையம், நரம்பிழையம் என்பனவாகும். இது முகிழ்கருவின் இடைப்படையில் இருந்து தோன்றுகிறது. இணைப்பிழையம், நரம்பமைப்பு உட்பட, உடலெங்கும் உள்ள மற்ற இழையங்களுக்கு இடையில் அமைந்து இணைக்கிறது. மைய உயர்நரம்பு மண்டலத்தில், மூளையையும் தண்டுவடத்தையும் சுற்றியமைந்த மூன்று மென்படலங்கள் இணைப்பிழையங்களால் ஆனவை. இவை உடலைத் தாங்குவதோடு உடலுக்குப் பாதுகாப்பும் அளிக்கின்றன. அனைத்து இணைப்பிழையங்களிலும் மூன்று உறுப்புகள் அமைந்துள்ளன. அவையாவன, நாரிழைகள் (மீண்மவகை, பிசின்மவகை உட்பட),[1] ஏந்து பொருள்கள், உயிர்க்கலங்கள் என்பனவாகும். பலர் குருதியையும் [2] நிணநீரையும், அவற்றில் நார்மப்பொருள் இல்லாமையால், இணைப்பிழையமாக ஏற்பதில்லை. இணைப்பிழைய உறுப்புகள் அனைத்துமே உடல்நீர்மத்தில் மூழ்கியுள்ளன. இணைப்பிழைய உயிர்க்கலங்களில் நார்க்குருத்துகள், கொழுப்புயிர்க்கலம், பெருந்தின்கலம், அடிநாட்டக்கலம், குருதி வெள்ளணுக்கள் ஆகியவை அடங்கும். வகைபாடுஇணைப்பிழையம் இயல்பு இணைப்பிழையம், சிறப்பு இணைப்பிழையம் என பொதுவாக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.[3][4] இயல்பு இணைப்பிழையம் தளர் இணைப்பிழையம், அடர் இணைப்பிழையம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அடர் இணைப்பிழையம் ஒழுங்கான அடர் இணைப்பிழையம், ஒழுங்கற்ற அடர் இணைப்பிழையம் என மேலும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.)[5] ஏந்துபொருளுக்கும் நார்ப்பொருளுக்கும் உள்ள விகிதத்தால் தளர் இணைப்பிழையமும் அடர் இணைப்பிழையமும் பாகுபடுத்தப்படுகின்றன. தளர் இணைப்பிழையத்தில் நார்ப்பொருளைவிட ஏந்துபொருள் கூடுதலாக அமையும். அடர் இணைப்பிழையங்களில் ஏந்துபொருளை விட நார்ப்பொருள் கூடுதலாக அமையும். ஒழுங்கான அடர் இணைப்பிழையம் தசைநாண்களிலும் தசைநார்களிலும் அமைகிறது. இது ஒழுங்கான இணைவரிசைகளில் அமைந்த பிசின்ம நாரிழையின் பான்மையைக் கொண்டிருக்கும். இந்த ஏற்பாடு ஒரு திசையில் மட்டும் இழுவலிமையைத் தரும். ஒழுங்கற்ற அடர் இணைப்பிழையம் அடர் நாரிழைக் கொத்துகளை அனைத்து திசைகளிலும் கொண்டமைவதால், பல திசைகளிலும் இழுவலிமையைத் தரும். சிறப்பு இணைப்பிழையங்களில் நுண்வலை இணைப்பிழையம், கொழுப்பு இணைப்பிழையம், குருத்திழையம், எலும்பு, குருதி ஆகியன அடங்கும்.[6] Other kinds of connective tissues include fibrous, elastic, and lymphoid connective tissues.[7] New vascularised connective tissue that forms in the process of wound healing is termed granulation tissue.[8] முகிழ்கருவின் நார்க்குருத்துக் கலங்களில் இருந்து தான் சில இணைப்பிழையங்கள் உருவாகின்றன. முதல்வகைப் பிசின்மம் பல வடிவ இணைப்பிழையங்களில் அமைகிறது. இது பாலூட்டி உடலின் மொத்தப் புரத உள்ளடக்கத்தில் 25% அளவுக்கு அமைகிறது.[9] ![]() பான்மைகள்இணைப்பிழையங்களின் பான்மைகள் பின்வருமாறு:
செயல்உயிர்க்கலங்களின் வகைகளையும் நாரிழைகளின் பல்வேறு வகைகளையும் பொறுத்து இணைப்பிழையங்கL பலவகைப் பணிகளைச் செய்கின்றன. தளர் இணைப்பிழையமும் ஒழுங்கற்ற அடர் இணைப்பிழையமும், நார்க்குருத்துகளில் இருந்தும் பிசின்ம நாரிழைகளில் இருந்தும் உருவாகின்றன. இவை நுண்புழைகளில் இருந்து உயிர்க்கலங்களுக்கு உயிரகமும் ஊட்டங்களும் விரவிட உதவும் ஊடகத்தைத் தருகின்றன. அதேபோல, கரிமவளிமமும் கழிவுப் பொருள்களும் உயிர்க்கலங்களில் இருந்து விரவி சுற்றோட்டத்துக்குள் மீளவும் உதவுகின்றன. இவை உறுப்புகளின் மீது செயல்படும் இழுப்பு (நீட்டுவிப்பு), துணிப்பு விசைகளையும் தாங்குகின்றன. ஒழுங்கான அடர் இணைப்பிழையம் உடலின் பல்வேறு கட்டமைவுகளை உருவாக்குகின்றன. இது தசைநார்கள், தசைநாண்கள், விரிதசை நாண்கள் (aponeuroses), சிறப்பு உறுப்பாகிய கருவிழி ஆகியவற்றின் முதன்மைக் கூறாக அமைகிறது.[12]:161 மீண்ம நாரிழைகள் (மீண்மன், நாரன் ஆகியவற்ரால் ஆனவை), இழுப்பு (நீட்டுவிப்பு) வசைகளுக்கு எதிர்ப்பு தருகின்றன.[12]:171 இவை பெரிய குருதிக்குழல் சுவர்களிலும் தசைநார்களிலும் குறிப்பாக மஞ்சள் தசைநாரிலும் காணப்படுகின்றன.[12]:173 குருதியாக்க இழையங்கள் (hematopoietic tissues), நிணநீர் இழையங்கள் ஆகியவற்றில், நுண்வலை உயிர்க்கலங்களாலான நுண்வலை நாரிழைகள் உறுப்பின் கடத்தி இழையத்துக்கு அல்லது செயற்பகுதிக்கு தாங்கும் கட்டமைப்பாக அமைகின்றன.[12]:171 கருவின் வளர் உறுப்புகளில் காணப்படும் இடைப்படை ஒருவகை இணைப்பிழையம் ஆகும். இது உயிர்க்கல வேறுபாட்டை உருவாக்கி அனைத்துவகை முதிர்நிலை இணைப்பிழையங்களையும் உருவாக்குகிறது.[13] ஓரள்வு வேறுபடுத்தப்படாத மற்றொரு வகை இணைப்பிழையம் சளி அல்லது கோழை இணைப்பிழையம் ஆகும். இது கொப்பூழ்கொடியில் அல்லது தொப்புள் கொடியில் காணப்படுகிறது.[12]:160 பல்வேறுவகை சிறப்பு இழையங்களும் உயிர்க்கலங்களும் இணைப்பிழைய வகைகளுக்குள் வகைபடுத்தப்படுகின்றன. இவற்றில் பழுப்புக் கொழுப்பிழையமும் வெள்ளைக் கொழுப்பிழையமும் குருதியும், குருத்தெலும்பும் எலும்பும் அடங்கும்.[12]:158 பெருந்தின்கலங்கள், அடிநாட்டக் கலங்கள், குருதி நீர்மக் கலங்கள், ஒவ்வாமைக் குருதிக்கலங்கள் (eosinophils) போன்ற நோயெதிர்ப்பு அமைப்பின் உயிர்க்கலங்கள் தளர் இணைப்பிழையங்களில் சிதறி விரவியுள்ளன. இவை தொடக்கநிலை அழற்சி, நோயெதிர்ப்பு சார்ந்த துலங்கலை, எதிர்ப்பொருள்களைச் சந்திக்கும்போது உருவாக்குகின்றன.[12]:161 நோய்நாடல் சிறப்புஇணைப்பிழைய ஒழுங்கின்மைகள் பின்வருமாறு பலவகைகளில் அமைகின்றன:
இணைப்பிழைய நிறமூட்டல்நுண்ணோக்கிவழி பார்க்க, இணைப்பிழைய நிறமூட்டும் நுட்பங்கள் இழைய நார்களை வேறுபடுத்தவல்லபடி நிறமூட்டுகின்றன. பிசின்ம இழையங்கள் பின்வருமாறு பலவகைகளில் நிறமூட்டப்படுகின்றன:
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia