இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு
இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு (Indian Regional Navigation Satellite System (IRNSS)) அல்லது ஆங்கிலத்தில் நேவிக்(NAVIC) என்பது இந்தியப் பகுதிக்காக தற்சார்பு இடஞ்சுட்டி அமைப்பை உருவாக்கும் பொருட்டு ஏழு செயற்கைக்கோள்களை புவி ஒத்திணைவு வட்டப்பாதையில் செலுத்தும் திட்டமாகும். இந்தியப் பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் இத்திட்டத்தை செயல்படுத்து. இந்திய அரசின் முழுமையான கட்டுபாட்டின் கீழ் இத்திட்டம் நடைபெறுகிறது. அமெரிக்காவின் இடஞ்சுட்டி வசதியை கார்கில் போரின் போது பயன்படுத்தியதில் ஏற்பட்ட சிரமங்களின் காரணமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.[1] இத்திட்டத்தில் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்கள் செலுத்தப்படும். அதில் நான்கு செயற்கைக்கோள்கள் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வரும். பயன்பாட்டு வகைஇந்தியப் பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் மூலம் உருவாக்கும் இடஞ்சுட்டி அமைப்பு, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் இரகசிய இராணுவப் பயன்பாடு என இருவகையில் பயன்பாட்டிற்கு வரும். உருவாக்கம்![]() இத்திட்டத்திற்காக 28 மே 2013 அன்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய செயற்கைக்கோள் வழிநடத்து மையம் பெங்களூருவில் பயலாலு கிராமத்தில் இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் வளாகத்தில் அமைக்கப்பட்டது.[2] இதன்படி நாடெங்கும் 21 நிலையங்கள் அமைத்து தகவல்களை கண்காணிக்க வழி செய்யப்பட்டது. செயற்கைக்கோள், தரையில் உள்ள கட்டுப்பாட்டுக் கருவிகள் மேலும் பயன்பாட்டுக் கருவிகள் அனைத்தும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 1,420 கோடி ரூபாய்கள்.[3][4] காலக்கெடுஏப்ரல் 2010 திட்ட அறிக்கையின்படி முதல் செயற்கைக்கோளை 2011 இறுதியில் செலுத்த ஆரம்பித்து ஒட்டுமொத்தத் திட்டமும் 2015 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் தாமதமடைந்து 2016 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்கள்செயற்கைக்கோள்கள் பட்டியல்இந்த செயற்கைக்கோள்கூட்டமைப்பு 7 செயற்பாட்டிலுள்ள செயற்கைக்கோள்களை கொண்டது. இதில் மூன்று செயற்கைக்கோள்கள் புவிநிலைச் சுற்றுப்பாதையிலும், மேலும் நான்கு செயற்கைக்கோள்கள் புவியிணக்கச் சுற்றுப்பாதையிலும் நிலைநிறுத்தப்படும். இந்த அமைப்பிலுள்ள செயற்கைக்கோள்கள் விவரம் பின்வருமாறு:
இத்திட்டத்தின்படி 7 செயற்கைக்கோள்கள் செயல்பாட்டிலிருக்கவேண்டும், இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏவின் அணுக்கடிகாரம் பழுதடைந்ததால் செயற்கைக்கோள் செயலிழந்தது, அதற்கு ஈடாக செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எச் செயற்கைக்கோள் ஏவுதலின் போது செயற்கைக்கோள் பிரிந்து நிலைநிறுத்துதல் செயல்படாமல் போனதால் தோல்வியடைந்தது. இதற்கு ஈடாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் 12ல் விண்ணில் ஏவப்பட்டது. எதிர்காலத் திட்டங்கள்12 வது FYP (2012-17) இல் தொழில்நுட்ப மற்றும் கொள்கை முயற்சிகளின் ஒரு பகுதியாக, உலகளாவிய இந்திய இடஞ்சுட்டி அமைப்பு (GINS) ஏற்படுத்துவதற்கான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு பூமியின் மேலே 24,000 கிமீ (14,913 மைல்) தொலைவினில் 24 செயற்கைக்கோள்களின் தொகுப்பினை கொண்டிருக்க வேண்டும். 2013 இன் படி, சர்வதேச விண்வெளி மையத்தில் ஜி.ஐ.என்.எஸ் அமைப்பிற்கான செயற்கைக்கோள்களின் அதிர்வெண் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிட்டிற்கு விண்ணப்பிக்கப்பட்டது.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia