இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்
இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் (Association of Indian Universities-AIU) என்பது இந்தியாவின் பல்கலைக்கழகங்களின் முக்கிய அமைப்பு மற்றும் சங்கமாகும்.[3] இதன் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது. இது வெளிநாடுகளில் பின்பற்றப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் படிப்புகள், பாடத்திட்டங்கள், தரநிலைகள் மற்றும் வரவுகளை மதிப்பீடு செய்கிறது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பல்வேறு படிப்புகள் தொடர்பானவற்றைச் சமன் செய்கிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களில் உயர் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான நோக்கத்திற்காகப் பல்கலைக்கழக மானியக் குழு புது தில்லி மற்றும் வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் / டிப்ளோமாக்களை அங்கீகரிப்பதில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் முக்கிய பங்காற்றுகிறது.[4] இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் கல்வித் துறையில் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையில் நிறைவேற்றப்பட்ட கலாச்சார பரிவர்த்தனைத் திட்டங்களின் கீழ் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் நிறுவனமாகும். இது வெளிநாட்டுத் தகுதிகளை அங்கீகரிப்பது தொடர்பானது (மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகள் தவிர). மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia