இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டம்தென் இந்தியாவின் கடற்கரை கனிம வளங்களுக்குப் பெயர் போனது. கேரளக் கடற்கரையில் உலகின் மிகப் பெரிய அளவிலான மானசைட்டு கனிமப் படிவங்கள் உள்ளன.[1] இப்படிவங்களில் இருந்து தோரியம், யுரேனியம் ஆகிய அணு ஆற்றலுடன் கூடிய தனிமங்களைப் பிரித்தெடுக்கலாம். இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டம் இக்கனிம வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்தியா விடுதலை பெற்ற உடனேயே அணு சக்தியை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவதற்காக, 1948 ஆம் ஆண்டிலேயே நடுவண் அரசு அணு சக்தித்துறை அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றியது. இந்திய அணுசக்திப் பேரவையும் அவ்வாண்டே அமைந்தது.[2]. அணு சக்தித்துறையை அமைத்து அதற்கான நெறிமுறைகளையும் வகுத்தது. முதல் கட்டமாக இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியம் தனிமத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி மிகையான அழுத்தத்தில் செயல்படும் கனநீர் உலைகளை அமைத்து மின்சாரத்தைத் தயாரிக்க முடிவு செய்தது. இந்த செய்முறையின் பக்கவிளைவாக புளுத்தோனியம் 239 தனிமமும் கிடைக்கப்பெற்றது. இந்தியாவில் செயல்படும் அணு மின் நிலையங்கள் பெரும்பாலும் இம்முறையைப் பின்பற்றி மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இரண்டாவது கட்டத்தில் யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்டு வேக ஈனுலையைப் (Fast Breeder Reactor) பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அணு சக்தித்துறை தீட்டியது. இந்த செய்முறை ஆய்வுகளில் தோரியம் 232 தனிமத்தில் இருந்து யுரேனியம் 233 பிரித்தெடுக்கப்பெற்றது.[3] வேக ஈனுலை சார்ந்த ஆய்வுகள் சென்னையில் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திலும், அணுமின் நிலையத்திலும் நடந்து வருகிறது.[4] இவை நீர்ம உலோகம் வகை வேக ஈனுலை சார்ந்தவையாகும், கல்பாக்கத்தில் சோடியம் நீர்மம் உலோகமாகவும், குளிரூட்டியாகவும் பயன்படுகிறது. சோடியம் அணு உலையின் வெப்பத்தைத் தாங்கிச்செல்வதுடன், அந்த வெப்பத்தை வெப்பப் பரிமாற்றி மூலமாக நீரை நீராவியாக மாற்றி மின்சாரம் தயாரிக்க உதவுகிறது. இவ்வகையில் அமைந்த வேக ஈனுலைகள் இங்கு 2012-13 ஆண்டுகளில் செயல்படலாம். மூன்றாம் கட்டம், இதை விட முன்னேறிய அதிக திறனுடைய அணுமின் நிலையங்களை, உருவாக்குவதாகும். இவற்றில் தோரியம் 232, யுரேனியம் 233 வகை தனிமங்களை எரிபொருளாகப் பயன்படும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia