இந்தியாவில் வேளாண்மைக் காப்பீடு![]() இந்தியாவில் வேளாண்மை வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற அழிவுகளால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான இயற்கைப் பேரழிவுகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், அடுத்த வேளாண்மைக் காலத்தில் அவர்களது கடன் தகுதியை உறுதி செய்யவும், இந்திய அரசு நாடு முழுவதும் பல வேளாண்மைத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.[1] பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana, பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா) என்ற பிரதமரின் புதிய வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இழப்பீட்டை சரியாகவும், விரைவாகவும் கிடைக்கச் செய்ய 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் பிரதமர் மோடி 2016 பெப்ரவரி 18 அன்று தொடங்கி வைத்தார்.[2][3] கரும்பு மற்றும் வாழை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதவிகிதமும், காரிஃப் பருவத்தில் பயிரிடப்படும் உணவுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு 2 சதவிகிதம், ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு 1.5 சதவிகிதம் என காப்புப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.[2] திட்டத்தின் பயன்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia