இந்திய ஆட்சிப் பணிஇந்திய ஆட்சிப் பணி (அ) இ.ஆ.ப, (ஐ.ஏ.எஸ்) (இந்தி: भारतीय प्रशासनिक सेवा, பாரதீய பிரசாசனிக் சேவா) அனைத்து இந்தியப் பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய வனப் பணி (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு மூலம் இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது.[1][2][3] வரலாறுஇந்திய ஆட்சிப் பணியின் முன்னோடியாக இந்தியாவில் இருந்த அமைப்பு இந்தியக் குடியுரிமைப் பணி (கலெக்டர்-ஆட்சியர்) என்ற அமைப்பாக இந்தியா பிரித்தானியரின் காலனி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இருந்தது. இந்தியா விடுதலையடைந்த பின் இவ்வமைப்பு இந்திய ஆட்சிப் பணி என்று பெயர் மாற்றம் கண்டது. தேர்வு மற்றும் பயிற்சிகள்ஒருவர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்தியக் காவல் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி நடுவண் அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக ஒன்றிய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன). தேர்வு நிலைகள்
தேர்வு நடைமுறை
பதவி உயர்வு இந்திய ஆட்சிப் பணிஇந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை நேரடியாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பணிகளில் சேர்வது ஒரு வகையாக இருந்தாலும், அரசுத் துறைகளில் பணியாற்றி வருபவர்கள் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக மாநில அரசுகளின் வழியாகத் தரம் உயர்த்தப்படும் முறையும் இந்தியாவில் உள்ளது. இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia