இந்திய கனநீர் வாரியம்இந்திய நடுவண் அரசின் அணுசக்தித்துறையின் கீழ் கனநீர் வாரியம் செயல்படுகிறது. அணுமின் நிலையங்களிலும் அணு ஆராய்ச்சி மையங்களிலும்[1] கனநீர் (D2O) மட்டுப்படுத்தியாக அல்லது தணிப்பியாகவும், குளிராக்குதிரவமாகவும் அதிக அளவில் தேவைப்படுகிறது. இத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே கனநீர் வாரியம் அமைக்கப்பெற்றது. உலகில் கனநீர் உற்பத்தியில் இந்தியா தற்பொழுது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.[2] 1960 ஆம் ஆண்டுகளில், மும்பையில் செயல்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையம் தீவிரமாக கனநீர் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அதே நேரத்தில் 1962 ஆம் ஆண்டில் இந்திய அணுசக்தித்துறை இந்தியாவின் முதல் கனநீர் ஆலையை பஞ்சாப் மாநிலத்தில், நங்கலில் அமைந்த தேசிய உரத் தொழிற்சாலையின் வளாகத்தில் நிறுவியது.[3] இந்த ஆலையின் பங்குகளைத் தனியாருக்கு விற்றதால் பாதுகாப்பு கருதி இந்த கனநீர் ஆலையைப் பிரித்தெடுக்க வேண்டியதாயிற்று. அது வரை இந்த ஆலையை உரத்தொழிற்சாலையின் பணியாளர்கள் செயல்படுத்தி வந்தனர். கனநீரின் உற்பத்தித்தரத்தை அணு சக்தித்துறை உறுதியளித்து வந்தது.[4] தற்பொழுது கனநீர் வாரியம் இந்தியாவில் வெவ்வேறிடங்களில் அமைந்த ஏழு கனநீர் ஆலைகளை செயல்படுத்தி வருகிறது. அவை பரோடா, ஹஜீரா, கோட்டா, மனகுரு, தால்செர், தால், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia