இந்திய புவியியல் ஆய்வு மையம்இந்திய புவியியல் ஆய்வு மையம் (The Geological Survey of India, GSI) 1851 ல் நிறுவப்பட்ட ஒரு இந்திய அறிவியல் நிறுவனமாகும். இது இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பாகும். இது உலகின் மிகப் பழமையான புவியியல் ஆய்வு மைய அமைப்புகளில் இரண்டாவது பழமையான அமைப்பாகும். நில அளவை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்டது. வரலாறுபிரித்தானியாவின் வளங்களை மேம்படுத்தவும், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை அனுப்பவும் காலனியாதிக்கதின் கீழிருந்த இந்தியாவில் இவ்வமைப்பு துவக்கப்பட்டது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் நிலக்கரி குறித்த ஆய்வுகளுக்காக டேவிட் ஹிரம் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டார்.[1], [2] நோக்கம்எஃகு, நிலக்கரி, உலோகம், சிமென்ட், மின் தொழில்கள் குறித்த தகவல்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆய்வு செய்து வழங்கிவருகின்றது. மேலும் சர்வதேச புவி அறிவியல் மன்றங்களில் அலுவல்முறை பங்கேற்பாளராகவும் இருந்து வருகின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia