இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
இந்திரலோகத்தில் நா அழகப்பன், தம்பி ராமையா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இது இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து வடிவேலு கதாநாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படமாகும். இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தைப் போலவே இந்தத் திரைப்படமும் ஒரு வரலாற்றுத் திரைப்படமாக அமைந்தாலும், இத்திரைப்படத்தில் வரலாற்றுக் கதைக்கும் தற்கால வாழ்வுக்கும் இடையே ஒரு தொடர்பினை உருவாக்கி திரைக்கதையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.[1] நடிகர்கள்
வீட்டு ஊடகம்இந்த திரைப்படத்தின் செய்மதித் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றது. விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "பிரமாண்ட பிரமாண்ட பிரமாண்ட பிரமாண்டமாக செட்டு போட்டு, மாங்கு மாங்கு மாங்கு மாங்கென்று வசனம் எழுதி, வண்டி வண்டி வண்டி வண்டியாக அட்வைஸ் கொடுத்து, தப்பு தப்பு தப்பு தப்பாக சென்டிமென்ட் வைத்து, துளி துளி துளி துளியூண்டு காமெடியோடு..." என்று எழுதினர்.[2] பிலிமி பீட் வலைத்தளத்தில் "இந்திரலோகத்தில் நா. அழகப்பன்- கந்தரகோலம்! கவுத்திபுட்டாங்கப்பா..." என்று எழுதினர்.[3] சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia