கலைஞர் தொலைக்காட்சி
கலைஞர் தொலைக்காட்சி (Kalaignar TV) என்பது இந்திய மாநிலமான தமிழகத்திலிருந்து தேனாம்பேட்டை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். இந்த தொலைக்காட்சி செப்டம்பர் 15, 2007 அன்று தனது ஒளிபரப்பைத் துவக்கியது.[1] வரலாறுசன் தொலைக்காட்சிக் குழுமத்தின் மாறன் சகோதரர்களுடன் இடையில் ஏற்பட்டப் பிணக்குக் காரணமாக, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி குடும்பத்தினர், கலைஞர் பெயரிலேயே ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை, அண்ணா பிறந்த நாளான 15 செப்டம்பர் 2007 அன்று துவங்கினர். தற்போது இரு குடும்பத்தார்க்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டபோதிலும், தனி நிறுவனமாக தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தனது பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் சன் தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக 2007ஆம் ஆண்டு முதல் 2012 வரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. நிகழ்ச்சிகள்இந்த தொலைக்காட்சியில் மானாட மயிலாட, மறக்க முடியுமா, தெற்கத்திப்பொண்ணு, நம்ம குடும்பம் போன்றவை பிரபலமான நிகழ்ச்சிகள் ஆகும். 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுகலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் மு. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவுக்கு 60 சதவிகிதம் பங்குகளும் மகள் கனிமொழிக்கு 20 சதவிகிதம் பங்குகளும் கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் ஷ்ரத் குமாருக்கு 20 சதவிகித பங்குகளும் உள்ளன. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில் இலஞ்சமாகப் பெறப்பட்ட 200 கோடி ரூபாய் பல நிறுவனங்கள் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நடுவண் புலனாய்வுச் செயலகம் தனது குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இதனை கலைஞர் தொலைக்காட்சி மறுத்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சி அலைவரிசைகள்கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசைகள்:
மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia