இந்துப்பூர்
இந்துப்பூர் (Hindupur) இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் இந்துப்பூர் மண்டல் மற்றும் இந்துப்பூர் வருவாய் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.[2][3] இந்துபூர் நகரம், மாவட்டத் தலைமையிடமான அனந்தபூரிலிருந்து 98 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்துப்பூர் நகரம் ஆந்திர - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. 1920ல் நிறுவப்பட்ட இந்துப்பூர் நகராட்சி மன்றம் 38 உறுப்பினர்களைக் கொண்டது. 38.16 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்துப்பூர் நகராட்சி, 1,51,835 மக்கள்தொகையுடன் சிறப்புநிலை நகராட்சி தகுதி கொண்டது. மக்கள்தொகையியல்2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்துபூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,51,677 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 76,370 ஆகவும்; பெண்கள் 75307 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 986 பெண்கள் வீதம் உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 980 பெண் குழந்தைகள் வீதம் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டோர் 17,185 ஆகவுள்ளனர். எழுத்தறிவு கொண்டோர் 1,01,176 (75.23 %) ஆகவுள்ளனர். இந்துப்பூர் நகர மக்கள்தொகையில் இந்துக்கள் 97,500 (64.28%) ஆகவும்; இசுலாமியர் 52,514 (34.62 %) ஆகவும்; மற்றவர்கள் 1.11% ஆகவுள்ளனர்.[4]பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடி மக்கள் முறையே 8.82% மற்றும் 0.57% ஆகவுள்ளனர். இந்நகரம் ஆந்திரப் பிரதேசத்தில் இருப்பினும், மக்களின் பேச்சு மொழி கன்னட மொழியாக உள்ளது. தொடருந்து சேவைகள்நான்கு நடைமேடைகள் கொண்ட இந்துப்பூர் தொடருந்து நிலையத்தை நாளொன்றுக்கு 64 தொடருந்துகள் நின்று செல்கிறது.[5] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia