இந்து சமயத்தில் நேர்த்திக்கடன்இந்து சமயத்தில் நேர்த்திக்கடன் என்பது பக்தர்கள், இறைவனிடன் வேண்டிக்கொண்ட வேண்டுதல்கள் நிறைவேறிய பின் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். இந்த நேர்த்திக்கடனானது பொருள்களைக் காணிக்கையாக செலுத்துவது, நிலங்களை இறைவன் பெயருக்கு எழுதிதருவது, ஆபரணங்களை செய்து தருவது, கால்நடைகளை கோயிலுக்கு தருவது என பல்வேறு வடிவங்களில் செலுத்தப்படுகிறது. பூ மிதித்தல், அக்னிச்சட்டி, எடுத்தல், அலகு குத்துதல், தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற தங்களை வருத்திக்கொள்ளும் சடங்குகளையும் நேர்த்திக்கடனாக செய்கின்றனர். பெரு தெய்வ வழிபாட்டில் நேர்த்திக்கடன்பெரு தெய்வ வழிபாட்டில் நேர்த்திக் கடன்கள் பெரும்பாலும் உடல் துயருரா நிலையில் இருக்கின்றன. திருக்கல்யாணம் செய்வித்தல், அபிசேக ஆராதனை செய்வித்தல், ஆடை ஆபரணங்களை வணங்குதல், தங்க வெள்ளி கவசங்களை அணிவித்தல், வடைமாலை சாற்றதல் போன்ற பல நேர்த்திக்கடன்கள் உடல் துயருராத வண்ணம் உள்ளன. பெரு தெய்வ நேர்த்திக்கடன்களில் பிரதட்சணம் செய்தல், கிரிவலம் வருதல், தேர் இழுத்தல் போன்ற சில நேர்த்திக்கடன்கள் உடலை வருத்தக்கூடியவையாக உள்ளன.
வகைகள்இவ்வகையான நேர்த்திக் கடன்களை மூன்றாக பிரித்துக் கொள்கின்றனர். [1]
உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள்சிறு தெய்வ வழிபாட்டிற்கென உள்ள சில நேர்த்திக் கடன்கள் உடலை வருத்தி செய்யப்படுபவனவாகும். சிறு மற்றும் பெரு தெய்வ வழிபாட்டிற்கு பொதுவான நேர்த்திக் கடன்களும் உள்ளன. மண்சோறு சாப்பிடுதல், அலகு குத்துதல், பால்குடம், காவடி எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன.[1]
பொருளாக அளி்க்கப்படும் நேர்த்திக் கடன்கள்
உயிர்ப்பலியாக அளிக்கப்படும் நேர்த்திக் கடன்கள்
காலக்கெடுஇந்து சமயத்தில் எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன. இவற்றை நிறைவேற்ற எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படுவதில்லை. [2] கோரிக்கைகள் நிறைவேறியதும் நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள். நேர்த்திக்கடனை மறத்தல்நேர்த்திக்கடனை வேண்டிக்கொண்டு கோரிக்கை நிறைவேறிய பிறகு அலட்சியம் காரணமாக நேர்த்திக்கடனை செலுத்தாமல் இருந்தாலோ, மறந்து விடுபட்டாலோ துன்பம் நேரும் என நம்புகிறார்கள். இவ்வாறு மறந்த நேர்த்திக்கடனால் எதிர்பாராத விபத்துகள் நேரலாம் என்றும், பொருள் தொலைந்து போகலாம் என்றும் நினைக்கிறார்கள். சிலருக்கு மறந்து போன நேர்த்திக்கடனை தெய்வம் கனவில் வந்து நினைவுபடுத்துவதாக நம்புகிறார்கள். நேர்த்திக் கடன் செய்யத் தவறினால் ஒருவித தோசம் ஏற்படுவதாக சோதிட சாத்திரங்கள் கூறுகின்றது. [3] இந்த தோசம் நீங்க வேண்டியவரின் குலதெய்வம் கோயிலுக்கு ஐந்து பௌர்ணமிக்கு தொடர்ந்து சென்று வழிபட வேண்டும். அவர்களின் குல தெய்வ வழக்கப்படி பட்டு துணிகளை சாமிக்கு தந்து, பொங்கலிட்டு வழிபட்டால் தோசம் நீங்கும் என்கின்றனர். ஆதாரங்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia