நவகண்டம்![]() நவகண்டம் என்பது, தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ அறுத்துத் தன்னையே பலி கொடுத்துக் கொள்வதாகும். தமிழகத்தில் 11ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் இந்தப் பலி கொடுத்துக் கொள்ளும் முறை இருந்துள்ளது. பொதுவாகக் கொற்றவை எனும் பெண் தெய்வத்திற்குத் தன்னைப் பலியிட்டுக் கொண்டுள்ளனர். இந்த நவகண்டப் பலியைப் பற்றி கோயில்களின் கல்வெட்டுகள், சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.[1] சித்தர்கள் சிலர் 'நவகண்ட யோகம்' எனும் சித்தினைக் கடைப் பிடித்துள்ளனர். 'நவகண்ட யோகம்' என்பது தன்னுடைய உடல் பாகங்களை ஒன்பது துண்டுகளாக்கிக் கொண்டு சிவனை நினைத்து யோகம் செய்வதாகும்.[2] இந்தச் சித்து முறையைச் செய்யும் போது அதனைக் கண்டவர்கள் பதறியுள்ளார்கள். அதன் பின்பு சித்தர்கள் முழு உருவோடு திரும்பி வந்த பிறகு அவரைச் சித்தர்களாக ஏற்று வழிபட்டார்கள் என்பதைப் பல்வேறு சித்தர்களின் வரலாறு தெரிவிக்கிறது.[3] நவகண்டம் - சொல்லிலக்கணம்உடலின் ஒன்பது பாகங்களைத் தானே அரிந்து கொற்றவைக்கு பலியிடுவது தான் நவகண்டம். நவகண்டம் கொடுப்பதற்கான காரணங்கள்இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு:
இப்பொழுது முக்கியமானவர்களுக்குப் பூனைப்படை பாதுகாப்பு இருப்பதைப் போல, அக்காலத்தில் சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" எனும் அமைப்பும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற படைகளும் இருந்தன. இவர்கள், தங்கள் கவனக் குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசனின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள். ஆனால் பிற்காலங்களில் கோயில் கட்டுவதற்கும், தடைப்பட்ட தேரோட்டத்தை தொடர்ந்து நடத்தவும், பிற காரணங்களுக்காகவும் மேற்சாதிக்காரர்களால் கீழ்ச் சாதிக்காரர்கள் நவகண்டம் கொடுக்க கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.[சான்று தேவை] இதில் கீழ்ச் சாதிப் பெண்களும், குழந்தைகளும் கூட ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.[சான்று தேவை] தமிழகத்தில் நவகண்டம் கொடுக்கும் வழக்கம்வேண்டுதல் காரணமாக தன்னைத் தானே பலி கொடுக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது.[1] இதைப் பற்றிக் கல்வெட்டுகளும், சிற்பங்களும் இங்கு, பரவலாகக் காணப்படுகின்றன. இம் மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாகத் தன் வேண்டுதலை நிறைவேற்றத் தலையை அறுத்துப் பலியிட்டு கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன, குறிப்பாக கலிங்கத்துப்பரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்துப் பலிகொடுத்த வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையைத் தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. பிடிபட்ட திருடனைக் குடும்பத்துடன் ஒரு நாள் மகிழ்வுடன் வாழவிட்டு, மறுநாள் கோவிலில் துர்க்கையின் முன் நவகண்டம் கொடுக்கச் செய்யும் வழக்கமும் உண்டு.[சான்று தேவை] மேலும் இது போன்றே தன் குடும்ப நன்மைக்காகவோ அல்லது முற்றிய நோயிலிருந்து மீள முடியாத பொழுதோ, நவகண்டம் கொடுப்பது உண்டு. [சான்று தேவை] இது ஜப்பானில் சாமுராய் வீரர்கள் தோல்வியைத் தாங்க முடியாமல் தம் கழுத்தை அறுத்துக் கொள்ளும் ஹராகிரி என்ற சடங்கிற்கு ஒப்பானதாகும்.[4] தமிழகத்தில் நவகண்டச் சிற்பங்களின் இருப்பிடம்தமிழகத்தில் காணப்படும் நவகண்டச் சிற்பங்கள் குறித்தான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
பரவலர் ஊடகங்களில் நவகண்டத்தின் சான்றுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia