இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம்
இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் (ஆங்கிலம்: Parliamentary Complex of Indonesia (MPR/DPR/DPD Building); இந்தோனேசியம்: Dewan Perwakilan Daerah Republik Indonesia (Gedung MPR/DPR/DPD R) என்பது இந்தோனேசிய சட்டவைகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் கட்டிட வளாகமாகும்.[1][2] இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சட்ட அவைகள்:
கட்டுமானம்இந்தோனேசியாவின் முதல் அதிபரான சுகார்னோவால், 1965-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி கட்டிடம் கட்ட ஆணையிடப்பட்டது. மார்ச் 1965 இல் கட்டுமானம் தொடங்கியது. சொஜோடி விர்ஜோமோஜோ (Soejoedi Wirjoatmodjo) எனும் கட்டிடக் கலைஞரின் தலைமையில் கட்டுமானம் நடைபெற்றது. செப்டம்பர் 30, 1965-இல் நடந்த இந்தோனேசிய செப்டம்பர் 30 இயக்கத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியால் கட்டுமானம் தடைபட்டது. நவம்பர் 9, 1966-இல் மீண்டும் கட்டுமானம் தொடங்கியது. படிப்படியாக, கட்டுமானம் முடிக்கப்பட்டு இந்தோனேசிய மக்களவை தலைமைச் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[3][4] மாணவர் ஆர்ப்பாட்டம்![]() மே 1998-இல், இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகக் கட்டிடங்கள், ஏறக்குறைய 80,000 பல்கலைக்கழக மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.[5] அதற்கு முன்னர், திரிசக்தி துப்பாக்கிச் சூடு (Trisakti Shootings); மற்றும் சுகார்த்தோவின் மேற்கத்திய சார்பு புதிய ஒழுங்குமுறை எனும் புதிய கட்டளை கொள்கைக்கு (New Order) எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்தோனேசிய மேலவை; மற்றும் 1998-2003-ஆம் ஆண்டின் இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை ஆகியவற்றைக் கலைக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.[6] பல்கலைக்கழக மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், அதிபர் சுகார்த்தோவின் ஆட்சி கவிழ்ந்தது. கட்டிடங்கள்கட்டிட அமைப்பு![]() ![]() இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் ஆறு கட்டிடங்களைக் கொண்டுள்ளது. முதன்மைக் கட்டிடம் நுசாந்தாரா (Nusantara). இந்தக் கட்டிடம் தனித்துவமான கருடனின் இறக்கை வடிவக் கூரையுடன்;[3] மற்றும் 1,700 இருக்கைகள் கொண்ட முழுமையான கூட்ட அரங்கத்தைக் கொண்டுள்ளது. மற்ற ஐந்து கட்டிடங்கள்:
23-மாடி கட்டிடம்; இந்த மூன்று கட்டிடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள்; மற்றும் கூட்ட அறைகள்; இவற்றுள் குழு சந்திப்பு அறைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன;
காட்சியகம்இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகத்தின் காட்சிப் படங்கள் மேற்கோள்கள்
சான்றுகள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia