இந்தோனேசியாவின் பிராந்தியங்கள் மற்றும் மாநகரங்களின் பட்டியல்![]() இந்தோனேசியாவின் பிராந்தியங்கள் மற்றும் மாநகரங்களின் பட்டியல் (ஆங்கிலம்: List of regencies and cities in Indonesia; இந்தோனேசியம்: Daftar kabupaten dan kota di Indonesia menurut provinsi; மலாய்: Senarai kabupaten dan kota di Indonesia) என்பது இந்தோனேசியாவின் பிராந்தியங்கள் மற்றும் நகரங்களைப் பட்டியலிடும் ஓர் அட்டவணையாகும். இந்தோனேசியாவில் இரண்டாம் நிலை நிர்வாகத் துணைப்பிரிவுகளாக பிராந்தியங்கள் மற்றும் மாநகரங்கள் (ஆங்கிலம்: Regency; City இந்தோனேசியம்: Kabupaten; Kota) உள்ளன. பிராந்தியங்கள் என்பது மாநிலங்களுக்கு (மாகாணங்கள்) கீழே அடுத்த படியாகவும், மாவட்டங்களுக்கு ஒரு படி மேலேயும் வருகின்றன.[1] பிராந்தியங்கள் ஏறக்குறைய அமெரிக்காவின் மாவட்டங்களுக்குச் (Counties) சமமானவை.[2] சிறப்புத் தகுதிஎடுத்துக்காட்டாக, பாலி என்பது ஒரு மாநிலம்; அந்த மாநிலத்தின் புலேலெங் என்பது ஒரு மாவட்டம்; சிங்கராஜா என்பது புலேலெங் மாவட்டத்தில் ஒரு நகரம் ஆகும். பாலியின் தென்பசார் மாநகரத்திற்கு மட்டும் பிராந்தியம் எனும் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டு உள்ளது. இதே போல யோக்யகர்த்தாவிற்கு பிராந்தியம் எனும் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டு உள்ளது. பிராந்தியங்களும் மாநகரங்களும் அவற்றுக்கென சொந்த உள்ளூர் அரசாங்கத்தையும் (Local Government) சட்டமன்ற அமைப்பையும் (Legislative body) கொண்டுள்ளன. ஒரு பிராந்தியம், ஒரு நகரத்தை விடப் பெரிய கிராமப்புறப் பகுதியை உள்ளடக்கியது; ஆனால் பெரும்பாலும் பல்வேறு நகரங்களையும் உள்ளடக்கியது. ஒரு மாநகரம் பொதுவாக வேளாண் அல்லாத பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும். ஒரு பிராந்தியம் பூபதி (Bupati) எனும் ஓர் ஆட்சியாளரால் தலைமை தாங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு மாநகரம் வாலி கோத்தா (Wali Kota) எனும் ஒரு மேயரால் தலைமை தாங்கப்படுகிறது. நிர்வாகப் பிரிவுகள்இந்தோனேசியாவின் நிர்வாகப் பிரிவுகள்; நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[3]
இரண்டாம் நிலைஇந்தோனேசியாவின் இரண்டாம் நிலை நிர்வாக அமைப்பு என்பது குறு மாநிலம்; பிராந்தியம் அல்லது ரீசன்சி; மாநகரம்; (ஆங்கிலம்: Regency; City இந்தோனேசியம்: Kabupaten; Kota) என்று அழைக்கப்படுகின்றது. இந்த உட்பிரிவுகள் மாநில மட்டத்திற்கு கீழே உள்ள அரசாங்கத்தின் உள்ளூர் மட்டமாகும். இருப்பினும், பொதுப் பள்ளிகள் மற்றும் பொது நலன் வசதிகளை வழங்குதல் போன்ற செயல்பாடுகளில் அதிக உரிமையைப் பெற்றுள்ளன. இவை முன்பு மாவட்ட இரண்டாம் நிலை வட்டாரங்கள் (Daerah Tingkat II; Level II Region) என்று அழைக்கப்பட்டன.[5] மாநில வாரியாக பிராந்தியங்கள்சனவரி 2023 நிலவரப்படி, இந்தோனேசியாவில் 38 மாநிலங்கள்; 416 பிராந்தியங்கள், 98 மாநகரங்கள் உள்ளன .[6][7] அச்சே பிராந்தியங்கள்வடக்கு சுமாத்திரா பிராந்தியங்கள்மேற்கு சுமாத்திரா பிராந்தியங்கள்
இரியாவு பிராந்தியங்கள்
ஜாம்பி பிராந்தியங்கள்தெற்கு சுமாத்திரா பிராந்தியங்கள்பெங்குலு பிராந்தியங்கள்லாம்புங் பிராந்தியங்கள்இரியாவு தீவுகள் பிராந்தியங்கள்பாங்கா பெலித்தோங் தீவுகள் பிராந்தியங்கள்ஜகார்த்தாமேற்கு சாவகம் பிராந்தியங்கள்நடுச் சாவகம் பிராந்தியங்கள்யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதிகிழக்கு சாவகம் பிராந்தியங்கள்பண்டென் பிராந்தியங்கள்பாலி பிராந்தியங்கள்
மேற்கு நுசா தெங்காரா பிராந்தியங்கள்கிழக்கு நுசா தெங்காரா பிராந்தியங்கள்கலிமந்தான்மேற்கு கலிமந்தான் பிராந்தியங்கள்மத்திய கலிமந்தான் பிராந்தியங்கள்தெற்கு கலிமந்தான் பிராந்தியங்கள்கிழக்கு கலிமந்தான் பிராந்தியங்கள்வடக்கு கலிமந்தான் பிராந்தியங்கள்சுலாவெசிவடக்கு சுலாவெசி பிராந்தியங்கள்மத்திய சுலாவெசி பிராந்தியங்கள்தெற்கு சுலாவெசி பிராந்தியங்கள்தென்கிழக்கு சுலாவெசி பிராந்தியங்கள்கோரோன்டலோ பிராந்தியங்கள்மேற்கு சுலாவெசி பிராந்தியங்கள்மலுக்கு தீவுகள்மலுக்கு பிராந்தியங்கள்வடக்கு மலுக்கு பிராந்தியங்கள்மேற்கு நியூ கினிபப்புவா பிராந்தியங்கள்மேற்கு பாப்புவா பிராந்தியங்கள்தெற்கு பப்புவா பிராந்தியங்கள்மத்திய பப்புவா பிராந்தியங்கள்பப்புவா மலைகள் பிராந்தியங்கள்தென்மேற்கு பப்புவா பிராந்தியங்கள்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்வார்ப்புரு:இந்தோனேசியாவின் பிராந்தியங்கள் மற்றும் நகரங்களின் பட்டியல் |
Portal di Ensiklopedia Dunia