இந்தோனேசிய நேரம்![]() இந்தோனேசிய நேரம் அல்லது இந்தோனேசிய சீர் நேரம் (ஆங்கிலம்: Indonesia Standard Time), (மலாய்: Waktu Piawai Indonesia), (Indonesian: Zona waktu Indonesia) என்பது இந்தோனேசியாவில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமையாகும். இந்த நேர வலயம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு (ஆங்கிலம்: Greenwich Mean Time - GMT)) +06:00 மணி நேரம் முன்னதாக அமைகின்றது. இந்தோனேசிய தீவுக்கூட்டம் புவியியல் ரீதியாக; ஆச்சே (Aceh) (UTC+06:00) நிலப்பகுதியில் தொடங்கி பப்புவா நியூ கினி (Papua) (UTC+09:00) நிலப்பகுதிகள் வரை; நான்கு நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தோனேசிய அரசாங்கம் அதன் நாட்டில் மூன்று நேர மண்டலங்களை மட்டுமே அங்கீகரிக்கின்றது.[1] பொதுஇந்தோனேசிய அரசாங்கம் அதன் நாட்டில் அங்கீகரித்த மூன்று நேர மண்டலங்கள்:
வரலாறுஇந்தோனேசியாவின் மேற்கு மற்றும் மத்திய நேர மண்டலங்களுக்கு இடையிலான எல்லை; மேற்கு கலிமந்தான் (West Kalimantan) மற்றும் மத்திய கலிமந்தான் (Central Kalimantan) மாநில எல்லைகளின் வழியாக ஜாவா மற்றும் பாலிக்கு இடையே வடக்கே செல்லும் ஒரு கோடாக நிறுவப்பட்டது.[2][3] மத்திய மற்றும் கிழக்கு நேர மண்டலங்களுக்கு இடையிலான எல்லை இந்தோனேசியாவின் கிழக்குத் திமோர் (Timor) முனையில் இருந்து சுலவேசியின் (Sulawesi) கிழக்கு முனை வரை வடக்கே செல்கிறது.[4] பகலொளி சேமிப்பு நேரம் (Daylight Saving Time - DST) இந்தோனேசியாவில் எங்கும் பயன்பாட்டில் இல்லை. மேற்கோள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia