இந்தோ ஆரிய மக்கள்
இந்தோ ஆரியர்கள் (Indo-Aryan peoples) என்பவர்கள், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியத் துணை கண்டத்து நாடுகளில் வாழும் பெரும்பாலான மக்கள் ஆவர். இந்தோ ஆரிய மக்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இந்தோ ஆரிய மக்கள் வேதகாலத்தைச் சேர்ந்தவர்கள்.[4] மொழிஇந்தோ ஆரிய மக்களின் மொழி, இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றான இந்தோ ஈரானிய மொழியின் ஒரு கிளை மொழியாகும். இந்தோ ஆரியர்கள் பேசிய மொழிகள் பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம் ஆகும்.[5] மக்கள் தொகைதற்போது தெற்காசியாவில் 1.21 பில்லியன் இந்தோ ஆரிய மக்கள், இந்தோ ஆரிய மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியாவில் தென்னிந்தியாவைத் தவிர மற்ற பெரும்பாலான இந்தியப் பகுதிகளில், இந்தோ ஆரிய மொழிகள் ஏறத்தாழ 856 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. வரலாறுகிழக்கு ஐரோப்பியவின், இந்தோ ஐரோப்பிய மொழிகளை பேசிய இந்தோ ஐரோப்பியர்கள் தங்களின் கால்நடைகளுக்கான புல்வெளிகளைத் தேடி நடு ஆசியாவின் உஸ்பெக்கிஸ்தாண், துருக்மெனிஸ்தான், கசக்ஸ்தான் பகுதிகளிலும்; தெற்காசியாவில் குறிப்பாக ஈரான், ஈராக் நாடுகளில் குடியேறினர். பின்னர் இவர்களில் ஒரு பிரிவினரான இந்தோ ஈரானிய குடும்பத்தின் ஒரு ஒரு கூட்டம் இந்தியத் துணைகண்டத்தின் வடமேற்கு இந்தியாவில் கி மு 1800-இல் குடியேறியேறினார்கள்.[5].[6] ![]() மேலும் காண்கமேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia