பாக்கித்தான்
பாக்கித்தான் (ஆங்கிலம்: Pakistan) என்பது தெற்காசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது அலுவல் முறையாகப் பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு (ஆங்கிலம்: Islamic Republic of Pakistan) என்று அழைக்கப்படுகிறது. 24.15 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன்[c] உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய ஐந்தாவது நாடாக இந்நாடு திகழ்கிறது. 2023 ஆம் ஆண்டின் கணக்குப்படி உலகின் இரண்டாவது மிகப் பெரிய முசுலிம் மக்கள் தொகையை இந்நாடு கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகரம் இசுலாமாபாத்து ஆகும். அதே நேரத்தில், கராச்சி இந்நாட்டின் மிகப் பெரிய நகரமாகவும் நிதி மையமாகவும் திகழ்கிறது. பரப்பளவின் அடிப்படையில் உலகிலேயே 33 ஆவது மிகப் பெரிய நாடு பாக்கித்தானாகும். இந்நாடு தெற்கே அரபிக்கடல், தென்மேற்கே ஓமான் குடா தென்கிழக்கே சர் கிரிக்கு நீர் எல்லைக் கோடு ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கிழக்கே இந்தியா, மேற்கே ஆப்கானித்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே சீனா என்பவற்றுடன் இந்நாடு நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஓமான் குடாவில் ஓமானுடன் கடல் சார் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்நாடு ஆப்கானித்தானின் குறுகிய வக்கான் தாழ்வாரத்தால் வடமேற்குப் பகுதியில் தாஜிகிஸ்தானிலிருந்து வேறு பிரிந்துள்ளது. பாக்கித்தான் பல பண்டைக் காலப் பண்பாடுகளுக்குத் தளமாக விளங்கியுள்ளது. பலூசிஸ்தானின் 8,500 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால தளமான மெகர்கர், வெண்கலக் காலத்தின் சிந்துவெளி நாகரிகம்,[15]:{{{3}}}, பண்டைய காந்தார நாகரிகம்[16] ஆகியவை இதில் அடங்கும். நவீன நாடான பாக்கித்தானின் பகுதிகளானவை பல்வேறு பேரரசுகள் மற்றும் அரசமரபுகளின் அதிகார எல்லைகளுக்குள் இருந்துள்ளன. இதில் அகாமனிசியர், மௌரியர், குசானர், குப்தர், இதன் தெற்குப் பகுதிகளைக் கொண்டிருந்த உமையா கலீபகம்,[17] இந்து ஷாகி, கசனவியர், தில்லி சுல்தானகம், சம்மா, ஷா மீரியர், முகலாயர்,[18] மற்றும் மிக சமீபத்தில் 1858 ஆம் ஆண்டு முதல் 1947 வரை நீடித்திருந்த பிரித்தானியாப் பேரரசு ஆகியவை அடங்கும். பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களுக்கு ஒரு தாயகத்தை வேண்டிய பாக்கித்தான் இயக்கத்தால் தூண்டுதல் பெற்றது, 1946 இல் அகில இந்திய முசுலிம் லீக்கின் தேர்தல் வெற்றிகள் மற்றும் பிரித்தானிய இந்தியப் பேரரசின் பிரிப்பு ஆகியவற்றுக்குப் பிறகு 1947 இல் பாக்கித்தான் சுதந்திரமடைந்தது. தன் முசுலிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு தனி நாட்டை பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு வழங்கியது. அதற்கு இணையாக எதுவும் இல்லாத அளவுக்கு பெருமளவு புலப்பெயர்வு மற்றும் உயிரிழப்புடன் இந்த பிரிப்பு நடைபெற்றது.[19]:{{{3}}}[20]:{{{3}}} பிரித்தானியப் பொதுநலவாயத்தின் ஒரு மேலாட்சிப் பகுதியாக தொடக்கத்தில் இருந்த பாக்கித்தான் 1956 ஆம் ஆண்டு அதன் அரசியலமைப்பை அதிகாரப்பூர்வமாக இயற்றியது. இசுலாமியக் குடியரசு என்று அறிவிக்கப்பட்ட ஒரு நாடாகத் தோன்றியது. 1971 இல் கிழக்கு பாக்கித்தான் எனும் பிரித்தவுறுப்புப் பகுதியானது ஒன்பது மாத நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு பாக்கித்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற ஒரு புதிய நாடாக உருவானது. இதைத் தொடர்ந்த நான்கு தசாப்தங்களில் குடிசார் மற்றும் இராணுவ, சனநாயக மற்றும் சர்வாதிகார, ஒப்பீட்டளவில் சமயச் சார்பற்ற மற்றும் இசுலாமிய ஆகிய அரசாங்கங்களால் பாக்கித்தானானது ஆளப்பட்டு வந்துள்ளது.[21] உலகின் ஏழாவது மிகப் பெரிய நிலையான ஆயுதப் படைகளுடன் பாக்கித்தான் ஒரு நடுத்தர சக்தியாகக் கருதப்படுகிறது. இது ஓர் அறிவிக்கப்பட்ட அணு ஆயுத நாடாகும். ஒரு பெரிய மற்றும் துரிதமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்துடன், வளர்ந்து வரும் மற்றும் வளர்ச்சியையுடைய முன்னணிப் பொருளாதாரங்களில் ஒன்றாக[22] இந்நாடு தரநிலைப்படுத்தப்படுகிறது.[23][24] குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சி, மேலும் அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை ஆகியவற்றின் காலங்களை சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாக்கித்தானின் அரசியல் வரலாறானது இயல்பாகக் கொண்டுள்ளது. இது இன மற்றும் மொழி ரீதியாக பல வேற்றுமைகளையுடைய நாடாகும். இதே போன்று வேறுபட்ட புவியியல் மற்றும் காட்டுயிர்களையும் இந்நாடு கொண்டுள்ளது. வறுமை, எழுத்தறிவின்மை, இலஞ்ச ஊழல், மற்றும் தீவிரவாதம் உள்ளிட்ட சவால்களை இந்நாடு தொடர்ந்து எதிர் கொண்டுள்ளது.[25][26][27] ஐக்கிய நாடுகள் அவை, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, நாடுகளின் பொதுநலவாயம், தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு, தீவிரவாத எதிர்ப்புக்கான இசுலாமிய இராணுவக் கூட்டமைப்பு ஆகியவற்றில் ஓர் உறுப்பினராக பாக்கித்தான் உள்ளது. ஐக்கிய அமெரிக்கா இந்நாட்டிற்கு நேட்டோ நாடு அல்லாத ஒரு முக்கியமான கூட்டாளி என்ற நிலையை அளித்துள்ளது. பெயர்க் காரணம்பாக்கிஸ்தான் என்ற பெயரானது ஒரு பாக்கித்தானிய இயக்கச் செயல்பாட்டாளரான சௌத்ரி ரகமத் அலி என்பவரால் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது. தன்னுடைய தற்போது அல்லது எப்போதும் இல்லை என்ற சிற்றேட்டில் முதலெழுத்துக்களின் ஒரு சொல்லாக இதை சனவரி 1933 இல் முதன் முதலில் (உண்மையில் "பாக்ஸ்தான்") பதிப்பித்தார்.[28][29][30] "இந்தியா மற்றும் ஆசியாவின் பஞ்சாப், ஆப்கானியா, காசுமீர், சிந்து மற்றும் பலூசிஸ்தான் ஆகிய அனைத்து தாயகங்களின் பெயர்களில் இருந்தும் எடுக்கப்பட்ட முதல் எழுத்துக்களை பாக்கிஸ்தான் கொண்டுள்ளது" என ரகமத் அலி விளக்கினார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது, "பாக்கிஸ்தான் என்பது ஒரு பாரசீக மற்றும் உருது ஆகிய இரு மொழிச் சொல்லாகும்... இதன் பொருள் பாக்ஸ்களின் நிலம் என்பதாகும், ஆன்மீக ரீதியாக தூய்மையான மற்றும் மாசற்ற என்பதாகும்".[31] பாரசீக மற்றும் பஷ்தூ ஆகிய இரு மொழிகளில் பாக் என்ற சொல்லுக்கு 'தூய்மையான' மற்றும் -ஸ்தான் என்ற பாரசீகப் பின்னொட்டின் பொருள் 'நிலம்' அல்லது 'இடம்' என்ற பொருள்படுவதாக சொற்பிறப்பியல்லாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[29] ரகமத் அலியின் பாக்கித்தான் என்ற கருத்துருவானது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியுடன் மட்டுமே தொடர்புடையதாக இருந்தது. வங்காளத்தின் முசுலிம் பகுதிகளுக்கு "பங்க்ளாஸ்தான்" மற்றும் ஐதராபாத் இராச்சியத்திற்கு "ஒஸ்மானிஸ்தான்" ஆகிய பெயர்களையும் கூட இவர் பரிந்துரைத்தார். மேலும், இந்த மூன்று பகுதிகளுக்கு இடையில் ஓர் அரசியல் கூட்டமைப்பு ஏற்படுவதையும் பரிந்துரைத்தார்.[32] வரலாறுவரலாற்றுக்கு முந்திய காலமும் பண்டைக் காலமும்இசுவாத் பள்ளத்தாக்கின் காந்தாரக் கல்லறைப் பண்பாட்டைச் சேர்ந்த ஓர் அஸ்திக் கலசம், ஆண்டு அண். 1200 பொ. ஊ. மு.[34] தெற்காசியாவில் தொடக்க கால பண்டைய மனித நாகரிங்களில் சில தற்போதைய பாக்கித்தானை உள்ளடக்கிய பகுதிகளிலிருந்து தோன்றின.[35] பழைய கற்காலத்தின் பிற்பகுதியின் போதிருந்த சோவனிகப் பண்பாடு இப்பகுதியின் தொடக்க காலத்தில் அறியப்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்டிருந்தது. பஞ்சாப்பின் சோவன் பள்ளத்தாக்கில் இம்மக்களின் தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[36] தற்போதைய பாக்கித்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டிருந்த சிந்துப் பகுதி பல தொடர்ச்சியான பண்டைய பண்பாடுகளின் தளமாக இருந்துள்ளது. அதிற் புதிய கற்கால (7000–4300 பொ. ஊ. மு.) தளமான மெகர்கர்,[37]:{{{3}}}[38]:{{{3}}}[39]:{{{3}}} தெற்காசியாவின் 5,000 ஆண்டு கால நகர வாழ்வின் வரலாறு முதல் மொகெஞ்சதாரோ, அரப்பா உள்ளிட்ட சிந்துவெளி நாகரிகத்தின் பல்வேறு தளங்களும் அடங்கும்.[40]:{{{3}}}[41] சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வேத காலத்தில் (1,500-500 பொ. ஊ. மு.) பல அலைகளாக நடந்த புலப்பெயர்வில் நடு ஆசியாவிலிருந்து பஞ்சாப் பகுதிக்கு இந்திய-ஆரியப் பழங்குடியினங்கள் நகர்ந்தன.[42] தங்களது தனித்துவமான சமயப் பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை அவர்கள் தங்களுடன் கொண்டு வந்தனர். இவை உள்நாட்டுப் பண்பாட்டுடன் இணைந்தன.[43] பாக்திரியா-மர்கியானா பண்பாட்டைச் சேர்ந்த இந்திய-ஆரியர்களின் சமய நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், மற்றும் முந்தைய சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பூர்வீக அரப்பா சிந்து நம்பிக்கைகள் இறுதியாக வேதப் பண்பாடு மற்றும் பழங்குடியினங்களின் வளர்ச்சிக்குக் காரணமாயின.[43] இதில் மிக முக்கியமானது காந்தார நாகரிகம் ஆகும். இது இந்தியா, நடு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு இணையும் இடத்தில் செழித்திருந்தது. வணிக வழிகளை இணைத்தது. வேறுபட்ட நாகரிகங்களில் இருந்து பண்பாட்டுத் தாக்கங்களை உள்ளிழுத்துக் கொண்டது.[44] தொடக்க கால வேதப் பண்பாடானது ஒரு பழங்குடியின, மேய்ச்சல் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகமாக, சிந்துவெளியை மையமாகக் கொண்டிருந்தது. அது தற்போதைய பாக்கித்தானில் அமைந்திருந்தது.[45] இந்த காலத்தின் போது இந்து சமயத்தின் மிகப் பழமையான புனித நூல்களான வேதங்கள் உருவாக்கப்பட்டன.[46][d] செவ்வியல் காலம்![]() பொ. ஊ. மு. 517 வாக்கில் பாக்கித்தானின் மேற்குப் பகுதிகளானவை அகாமனிசியப் பேரரசின் பகுதியாக உருவாயின.[48] பொ. ஊ. மு. 326 இல் பேரரசர் அலெக்சாந்தர் பல்வேறு உள்ளூர் ஆட்சியாளர்களைத் தோற்கடித்ததன் மூலம் இப்பகுதியை வென்றார். தோற்கடிக்கப்பட்டவர்களில் மிக குறிப்பிடத்தக்கவர் செலத்தில் தோற்கடிக்கப்பட்ட மன்னர் போரசு ஆவார்.[49] இதைத் தொடர்ந்து சந்திரகுப்த மௌரியரால் தோற்றுவிக்கப்பட்டு, பேரரசர் அசோகரால் விரிவாக்கப்பட்டு பொ. ஊ. மு. 185 வரை நீடித்திருந்த மௌரியப் பேரரசு இப்பகுதியை ஆட்சி செய்தது.[50][51][52] பாக்திரியாவின் தெமித்திரசுவால் (180–165 பொ. ஊ. மு.) நிறுவப்பட்ட இந்திய-கிரேக்க இராச்சியமானது காந்தாரம் மற்றும் பஞ்சாப்பை உள்ளடக்கியிருந்தது. இது தன் உச்சபட்ச விரிவாக்கத்தை மெனாந்தரின் (165–150 பொ. ஊ. மு.) ஆட்சியின் கீழ் அடைந்தது. இப்பகுதியில் கிரேக்க-பௌத்தப் பண்பாடு செழிப்பதற்குக் காரணமானது.[53][54][55] உலகின் தொடக்க கால பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி மையங்களில் ஒன்றான தக்சசீலமானது பொ. ஊ. மு. 6 ஆம் நூற்றாண்டில் பிந்தைய வேத காலத்தின் போது நிறுவப்பட்டது.[56] பேரரசர் அலெக்சாந்தரின் படையெடுத்து வந்த இராணுவங்களாலும், பொ. ஊ. 4 ஆவது அல்லது 5 ஆவது நூற்றாண்டில் சீன புனிதப் பயணிகளாலும் பதிவு செய்யப்பட்டு இந்த பண்டைக் கால பல்கலைக் கழகமானது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[57][58][59] தமது உச்ச நிலையின் போது இராய் அரசமரபானது (489–632 பொ. ஊ.) சிந்து மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளை ஆண்டது.[60] நடுக் காலம்அரேபியப் படையெடுப்பாளரான முகம்மது இப்னு காசிம் சிந்து, மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளை பொ. ஊ. 711 இல் வென்றார்.[50][61] பாக்கித்தானிய அரசாங்கத்தின் அலுவல்பூர்வ காலவரிசையானது இந்நேரத்தையே பாக்கித்தானுக்கான அடித்தளம் நிறுவப்பட்ட காலமாகக் குறிப்பிடுகிறது.[62] தொடக்க நடுக் காலமானது (642–1219 பொ. ஊ.) இப்பகுதியில் இசுலாம் பரவுவதைக் கண்டது.[63] 8 ஆம் நூற்றாண்டில் இசுலாமின் தொடக்கம் தொடங்குவதற்கு முன்னர் பாக்கித்தான் பகுதியானது பல நம்பிக்கைகளுக்குத் தாயகமாக இருந்தது. இதில் இந்து சமயம், பௌத்தம், சைனம் மற்றும் சரதுசம் ஆகியவையும் அடங்கும்.[64]:{{{3}}}[65] இக்காலத்தின் போது சூபி சமய போதகர்கள் இப்பகுதியின் பெரும்பாலான மக்களை இசுலாமுக்கு மதம் மாற்றியதில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றினர்.[66] பொ. ஊ. 7 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை காபுல் பள்ளத்தாக்கு, காந்தாரம் மற்றும் மேற்கு பஞ்சாப்பை நிர்வகித்த துர்க் மற்றும் இந்து ஷாகி அரசமரபுகளின் தோல்வியைத் தொடர்ந்து பல தொடர்ச்சியான முசுலிம் பேரரசுகள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளன. இதில் கசனவியப் பேரரசு (975–1187 பொ. ஊ.), கோரி இராச்சியம் மற்றும் தில்லி சுல்தானகம் (1206–1526 பொ. ஊ.) ஆகியவை அடங்கும்.[67] தில்லி சுல்தானகத்தின் கடைசி அரசமரபான லௌதி அரசமரபானது முகலாயப் பேரரசால் (1526–1857 பொ. ஊ.) இடமாற்றம் செய்யப்பட்டது.[68] ![]() பாரசீக இலக்கியம் மற்றும் உயர்குடியினப் பண்பாட்டை முகலாயர்கள் அறிமுகப்படுத்தினர். இப்பகுதியில் இந்திய-பாரசீகப் பண்பாட்டின் வேர்களை நிறுவினர்.[70] நவீன கால பாக்கித்தான் பகுதியில் முகலாயர் காலத்தின் போது முக்கியமான நகரங்களாக முல்தான், இலாகூர், பெசாவர் மற்றும் தட்டா ஆகியவை திகழ்ந்தன.[71] போற்றத்தக்க முகலாயக் கட்டடங்களுக்குத் தளமாக இந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.[72] 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியானது முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து இருந்தது.[73] 18 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசின் மெதுவான சிதைவுறுதலானது எதிரி சக்திகளின் வளர்ச்சியால் வேகப்படுத்தப்பட்டது. அந்த எதிரி சக்திகளில் மராத்தியக் கூட்டமைப்பு மற்றும், பிந்தைய கால சீக்கியப் பேரரசு, மேலும், 1739 இல் ஈரானில் இருந்து நடத்தப்பட்ட நாதிர் ஷாவின் படையெடுப்புகள், மற்றும் 1759 இல் ஆப்கானித்தானின் துராணிப் பேரரசு ஆகியவை அடங்கும்.[74][75] வங்காளத்தில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த பிரித்தானியரின் அரசியல் சக்தியானது நவீன கால பாக்கித்தானை அந்நேரம் வரை அடையவில்லை.[76] குடியேற்ற ஆட்சிபாக்கித்தானின் அடிப்படையை அமைத்த பார்வையைக் கொண்டிருந்த சர் சையது அகமது கான் (1817–1898).[77]:{{{3}}}[78]:{{{3}}}[79] பாக்கித்தானின் முதல் பொது ஆளுநராகவும் (பிரித்தானியாவின் தலைமைப் பிரதிநிதி), பாக்கித்தான் இயக்கத்தின் தலைவராகவும் செயலாற்றிய முகம்மது அலி ஜின்னா (1876–1948).[80] சிந்துவின் தல்பூர்களால் நிர்வகிக்கப்பட்ட ஒரு சிறிய மீனவ கிராமமான, கடற்கரையைப் பாதுகாக்க ஒரு மணல் கோட்டையுடன் கூடிய கராச்சியானது கைப்பற்றப்பட்ட 1839 ஆம் ஆண்டு வரை நவீன் பாக்கித்தானின் எந்த ஒரு பகுதியும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இல்லை. ஒரு துறைமுகம் மற்றும் இராணுவ தளத்துடன் கூடிய, அந்நியப் பகுதிகளால் சூழப்பட்ட பகுதியாக இப்பகுதியை இதைத் தொடர்ந்து முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போரில் பிரித்தானியா பயன்படுத்தியது.[81] 1843 இல் எஞ்சிய சிந்துப் பகுதியானது பெறப்பட்டது.[82] இறுதியாக, ஒரு தொடர்ச்சியான போர்கள் மற்றும் ஒப்பந்தங்களின் வழியாக கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிறகு சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் (1857–1858) பிந்தைய காலத்தில் பிரித்தானியப் பேரரசின் இராணி விக்டோரியாவின் நேரடி ஆட்சி ஆகியவற்றின் போது பெரும்பாலான பகுதியானது பெறப்பட்டது.[83] சிந்தில் மியானி யுத்தத்தால் (1843) தீர்க்கப்பட்ட பலூச்சி தல்பூர் அரசமரபுக்கு எதிரான சண்டை,[84] ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் (1845–1849)[85] மற்றும் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்கள் (1839–1919)[86] உள்ளிட்டவை இப்பகுதியில் நடைபெற்ற முக்கியமான சண்டைகளாகும். 1893 வாக்கில் அனைத்து நவீன கால பாக்கித்தானும் பிரித்தானிய இந்தியப் பேரரசின் பகுதியாயின. 1947 இல் சுதந்திரம் அடையும் வரை பிரித்தனியாவின் ஆட்சியின் கீழ் தொடர்ந்தன.[87] பிரித்தானிய ஆட்சியின் கீழ் நவீன கால பாக்கித்தானானது முதன்மையாக சிந்துப் பிரிவு, பஞ்சாப் மாகாணம் மற்றும் பலூசிஸ்தான் முகமை என பிரிக்கப்பட்டிருந்தது. பல்வேறு மன்னர் அரசுகளையும் கூட இப்பகுதி உள்ளடக்கியிருந்தது. இதில் மிகப் பெரியது பகவல்பூர் ஆகும்.[88][89] இப்பகுதியில் பிரித்தானியருக்கு எதிரான முக்கியமான ஆயுதமேந்திய போராட்டமானது 1857 இல் நடைபெற்ற சிப்பாய்க் கிளர்ச்சி ஆகும்.[90] இந்து சமயம் மற்றும் இசுலாமுக்கு இடையிலான உறவு முறையில் வேறுபாடுகளானவை பிரித்தானிய இந்தியாவில் குறிப்பிடத்தக்க பதட்டங்களுக்குக் காரணமாயின. சமய வன்முறைக்கு இது வழி வகுத்தது. இந்துக்கள் மற்றும் முசுலிம்களுக்கு இடையே மொழி சர்ச்சையும் இதை மேலும் கடுமையாக்கியது.[79][91] இந்து மறுமலர்ச்சிக்கு எதிராக சர் சையது அகமது கானால் தலைமை தாங்கப்பட்ட ஒரு முசுலிம் சிந்தனைசார் இயக்கமானது இரு-நாட்டு கோட்பாட்டுக்கு வலியுறுத்தியது. 1906 இல் அகில இந்திய முசுலிம் லீக் நிறுவப்படுவதற்கு இது வழி வகுத்தது.[77]:{{{3}}}[78]:{{{3}}}[79] மார்ச் 1929 இல் நேரு அறிக்கைக்குப் பதிலாக பாக்கித்தானை நிறுவிய முகம்மது அலி ஜின்னா தனது 14 குறிப்புகளை வெளியிட்டார். ஓர் ஒன்றிணைந்த இந்தியாவில் முசுலிம் சிறுபான்மையினரின் குறிக்கோள்களைப் பாதுகாப்பதற்கான முன்மொழிவுகளை இது உள்ளடக்கியிருந்தது. இந்த முன்மொழிவுகளானவை நிராகரிக்கப்பட்டன.[92]:{{{3}}}[93]:{{{3}}}[94]:{{{3}}} 1930 திசம்பர் 29 அன்று தன்னுடைய உரையில் வடமேற்கு இந்தியாவில் இருந்த முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசுகளை ஒன்றிணைக்க முகமது இக்பால் பரிந்துரைத்தார். இதில் பஞ்சாப், வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், சிந்து மற்றும் பலூசிஸ்தான் ஆகியவை அடங்கும்.[94]:{{{3}}}[95] 1940 ஆம் ஆண்டில் பாக்கித்தான் முன்மொழிவு பின்பற்றப்படுவதற்கு இது வழி வகுத்தது. இதை ஏ. கே. பசுலுல் ஹக் சமர்ப்பித்தார். இது பாக்கித்தான் தீர்மானம் என்றும் கூட அறியப்படுகிறது.[96] 1942 வாக்கில் இந்தியா நேரடியாக சப்பானியப் படைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளானதுடன் பிரித்தானியா இரண்டாம் உலகப் போரின் போது குறிப்பிடத்தக்க அளவுக்கு அழுத்தத்தை எதிர் கொண்டது. போரின் போது ஆதரவு அளிப்பதற்கு மாற்றாக இந்தியாவுக்கு தாமாக முன் வந்து சுதந்திரத்தை அளிப்பதாக பிரித்தானியா உறுதியளித்தது. எனினும், இந்த உறுதியளிப்பானது ஒரு கூறை உள்ளடக்கியிருந்தது. அதில் உருவாக்கப்படும் மேலாட்சிப் பகுதியுடன் இணையுமாறு பிரித்தானிய இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் கட்டாயப்படுத்தப்படாது என்று குறிப்பிடப்பட்டது. ஒரு சுதந்திரமான முசுலிம் நாட்டுக்கு ஆதரவளிப்பதாக இதைப் புரிந்து கொள்ளலாம். காந்தியின் தலைமையின் கீழான காங்கிரசானது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. பிரித்தானிய ஆட்சிக்கு உடனடி முடிவைக் கொண்டு வர வேண்டியது. மாறாக, முசுலிம் லீக்கானது ஐக்கிய இராச்சியத்தின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வழியைத் தேர்ந்தெடுத்தது. ஒரு முசுலிம் நாடு நிறுவப்படுவதற்கான சாத்தியத்திற்கு இவ்வாறாக உதவியது.[97]:{{{3}}}[98] சுதந்திரம்![]() 1946 ஆம் ஆண்டு தேர்தல்களானவை முசுலிம் இடங்களில் 90%ஐ முசுலிம் லீக் வென்றதைக் கண்டன. சிந்து மற்றும் பஞ்சாப்பில் இருந்த நில உடைமையாளர்களால் இதற்கு ஆதரவளிக்கப்பட்டிருந்தது. இந்திய முசுலிம்களுக்கான லீக்கின் பிரதிநிதித்துவம் குறித்து தொடக்கத்தில் ஐயத்தைக் கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரசை அக்கட்சியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் நிலைக்கு இம்முடிவுகள் தள்ளின.[99]:{{{3}}} இந்தியாவைப் பிரிக்க பிரித்தானியருக்கு எண்ணம் இல்லாத போதும் அந்நிலையை மறுபரிசீலனை செய்ய இந்திய முசுலிம்களின் குரலாக ஜின்னா உருவானதானது கட்டாயப்படுத்தியது.[62] இந்தியப் பிரிவினையைத் தடுக்கும் தங்களது கடைசி முயற்சியாக பிரித்தானியர் 1946 ஆம் ஆண்டின் அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழுவை முன்மொழிந்தனர்.[100]:{{{3}}} அமைச்சரவை தூதுக் குழுவானது தோல்வியடைந்த போது பிரித்தானியர் சூன் 1948 வாக்கில் தமது ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தை அறிவித்தனர்.[101][102] இந்தியத் தலைமை ஆளுநரான பர்மாவின் மவுண்ட்பேட்டன் பிரபு, அகில இந்திய முசுலிம் லீக்கின் முகம்மது அலி ஜின்னா மற்றும் காங்கிரசின் சவகர்லால் நேரு ஆகியோரைக் கொண்ட கடுங்கண்டிப்பான விவாதங்களைத் தொடர்ந்து பிரித்தானிய இந்தியாவை பாக்கித்தான் மற்றும் இந்தியா என்ற பெயர்களைக் கொண்ட இரு சுதந்திரமான மேலாட்சிப் பகுதிகளாகப் பிரிக்கும் அலுவல்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை 1947 சூன் 3 அன்று மாலை மவுண்ட்பேட்டன் வெளியிட்டார். மவுண்ட்பேட்டனின் அலுவலகத்தில் உலக அளவில் ஒலிபரப்பப்படும் முன்னர் இத்திட்டத்தின் தங்களது நகல்களை தோராயமாக ஒரு டசன் முதன்மையான மன்னர் அரசுகளின் பிரதம மந்திரிகள் பெற்றனர். அன்று இரவு 7:00 மணிக்கு அனைத்திந்திய வானொலியானது இந்த பொது அறிவிப்பை ஒலிபரப்பியது. முதலில் இந்தியத் தலைமை ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. பிறகு, நேரு மற்றும் ஜின்னா தத்தமது உரையை ஆற்றினர்.[103] இந்தியாவைப் பிரிக்க ஐக்கிய இராச்சியம் ஒப்புக் கொண்ட போது[103] நவீன நாடான பாக்கித்தான் 14 ஆகத்து 1947 அன்று நிறுவப்பட்டது (இசுலாமிய நாட்காட்டியின் 1366 ஆம் ஆண்டின் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் இதுவாகும். இசுலாமியப் பார்வைப்படி மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இந்நாள் கருதப்பட்டது).[104][105] இந்தப் புதிய நாடானது பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதில் பலூசிஸ்தான், கிழக்கு வங்காளம், வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், மேற்கு பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய மாகாணங்கள் உள்ளடங்கியிருந்தன.[106] பஞ்சாப் மாகாணத்தைப் பிரிக்கும் போது நடந்த அமளியில் 2 முதல் 20 இலட்சத்திற்கு இடையிலான மக்கள் கொல்லப்பட்டனர். சமயங்களுக்கு இடையிலான ஒரு பழிவாங்கும் இனப்படுகொலை என்று சிலர் இதைக் குறிப்பிட்டனர்.[107] இந்தியாவிலிருந்து மேற்கு பாக்கித்தானுக்கு தோராயமாக 65 இலட்சம் முசுலிம்களும், மேற்கு பாக்கித்தானிலிருந்து இந்தியாவுக்கு 47 இலட்சம் இந்துக்களும், சீக்கியர்களும் இடம் பெயர்ந்தனர்.[108]:{{{3}}} மனித வரலாற்றில் மிகப் பெரிய மனித இடம் பெயர்வு இது தான்.[109] சம்மு மற்றும் காசுமீரின் மன்னர் அரசு மீது ஏற்பட்ட தொடர்ந்த பிரச்சினையானது இறுதியாக 1947-48 ஆம் ஆண்டின் இந்தியா-பாக்கித்தான் போருக்குக் காரணமானது.[110] சுதந்திரத்திற்குப் பிறகு![]() 1947இல் சுதந்திரத்திற்குப் பிறகு முசுலிம் லீக்கின் தலைவரான ஜின்னா பாக்கித்தானின் முதல் தலைமை ஆளுநராகவும், நாடாளுமன்றத்தின் முதல் அதிபர்-அவைத் தலைவராகவும் ஆனார். எனினும், காச நோய் பாதிப்பின் காரணமாக 1948 செப்டம்பர் 11 அன்று இறந்தார்.[112][113] இடைப்பட்ட வேளையில், பாக்கித்தானின் நிறுவனத் தந்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான லியாகத் அலி கானை நாட்டின் முதல் பிரதமராக நியமிக்க ஒப்புக் கொண்டனர்.[111][112] 1947 முதல் 1956 வரை பொதுநலவாய நாடுகளுக்குள் ஒரு முடியாட்சியாக பாக்கித்தான் திகழ்ந்தது. இந்நாடு குடியரசாக மாறுவதற்கும் முன்னர் இரு முடியாட்சியாளர்களைக் கொண்டிருந்தது.[114]:{{{3}}}
—பாக்கித்தானின் நாடாளுமன்றத்தில் முகம்மது அலி ஜின்னா ஆற்றிய முதல் உரை.[115] பாக்கித்தானின் உருவாக்கமானது மவுண்ட்பேட்டன் பிரபு உள்ளிட்ட பல பிரித்தானியத் தலைவர்களால் என்றுமே முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.[116]:{{{3}}} பாக்கித்தான் என்ற முசுலிம் லீக்கின் யோசனைக்கு தனது ஆதரவின்மை மற்றும் நம்பிக்கையின்மையை மவுண்ட்பேட்டன் வெளிப்படுத்தினார்.[117]:{{{3}}} பாக்கித்தானின் தலைமை ஆளுநராகச் சேவையாற்ற மவுண்ட்பேட்டன் முன் வந்ததை ஜின்னா நிராகரித்தார்.[118]:{{{3}}} அதிபர் இசுகாந்தர் மிர்சா இராணுவச் சட்டத்தை அமல்படுத்திய போது சனநாயகமானது தடங்கல்களை எதிர் கொண்டது. இவருக்குப் பிறகு இராணுவத் தளபதி அயூப் கான் பதவிக்கு வந்தார். 1962 இல் ஓர் அதிபர் ஆட்சி அமைப்பைக் கொண்டு வந்ததற்குப் பிறகு 1965 ஆம் ஆண்டில் இந்தியாவுடனான இரண்டாவது போர் வரை பாக்கித்தான் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. எனினும், போரின் காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. 1967 ஆம் ஆண்டு பரவலான பொதுமக்களின் அதிருப்தி ஏற்பட்டது.[119][120] 1969 இல் அதிபர் யாக்யா கான் தனது கட்டுப்பாட்டை நிலைபடுத்தினார். ஆனால், கிழக்கு பாக்கித்தானில் 5 இலட்சம் இறப்புகளுக்குக் காரணமான ஓர் அழிவை ஏற்படுத்திய சூறாவளி நிலையை எதிர் கொண்டார்.[121] 1970 இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து தன் முதல் சனநாயகத் தேர்தல்களை, இராணுவ ஆட்சியிலிருந்து சனநாயகத்திற்கு மாற்றமடையும் எண்ணத்தில் பாக்கித்தான் நடத்தியது. எனினும், பாக்கித்தான் மக்கள் கட்சிக்கு எதிராக கிழக்கு பாக்கித்தானின் அவாமி லீக்கானது வெற்றி பெற்றதற்குப் பிறகு யாக்யா கானும், இராணுவமும் அதிகாரத்தைக் கொடுக்க மறுத்தனர்.[122] பாவொளி விளக்க நடவடிக்கை எனும் ஓர் இராணுவ தடுப்பு நடவடிக்கைக்கு இது வழி வகுத்தது. கிழக்கு பாக்கித்தானில் வங்காள முக்தி வாகினி படைகளால் விடுதலைப் போருக்கான தூண்டுதலாக இறுதியாக இது அமைந்தது.[123] மேற்கு பாக்கித்தானில் ஒரு சுதந்திரப் போராட்டம் என்று குறிப்பிடப்படாமல் இது ஓர் உள்நாட்டு போர் என்று குறிப்பிடப்படுகிறது.[124] ![]() இக்காலகட்டத்தின் போது 3 முதல் 5 இலட்சம் குடிமக்கள் இறந்தனர் என சுதந்திரமான ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அதே வேளையில், வங்காளதேச அரசாங்கமானது இறந்தவர்களின் எண்ணிக்கையை 30 இலட்சம் என்று குறிப்பிடுகிறது.[126] இந்த எண்ணிக்கையானது தற்போது கிட்டத்தட்ட அனைவராலும் மட்டுமீறிய அளவாகக் கருதப்படுகிறது.[127] ருடால்ப் ரம்மல் மற்றும் ரௌனக் சகான் போன்ற சில கல்வியாளர்கள் இரு பிரிவினரும் இனப்படுகொலையில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.[128] ரிச்சர்டு சிசன் மற்றும் லியோ இ. ரோசு போன்ற பிறர் இனப் படுகொலை நடைபெறவில்லை என்று நம்புகின்றனர்.[129] கிழக்கு பாக்கித்தானில் சண்டைக்கான இந்தியாவின் ஆதரவுக்கு எதிர் வினையாக பாக்கித்தானிய விமானப்படை, கடற்படை மற்றும் ஈரூடகப்படைப் பிரிவினரால் இந்தியா மீது நடத்தப்பட்ட முன்னெச்சரிக்கைத் தாக்குதல்களானவை 1971 ஆம் ஆண்டு ஒரு மரபுவழிப் போருக்குக் காரணமானது. இது இந்தியா வெற்றி பெறுவதிலும், கிழக்கு பாக்கித்தான் வங்காளதேசம் என்ற பெயரில் சுதந்திரத்தைப் பெறுவதிலும் முடிவடைந்தது.[130] இப்போரில் பாக்கித்தான் சரணடைந்ததுடன்[131] யாக்யா கானுக்குப் பதிலாக சுல்பிக்கார் அலி பூட்டோ அதிபராகப் பதவிக்கு வந்தார். தனது அரசியலமைப்பை வெளிப்படையாக அறிவிப்பதற்கும், சனநாயக வழியில் நாட்டைச் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பாக்கித்தான் செயலாற்றியது.[132][133] எந்த ஓர் அயல்நாட்டுப் படையெடுப்பையும் தடுக்கும் குறிக்கோளுடன் அணு ஆயுதத்தால் அச்சுறுத்திக் கட்டுப்படுத்தும் தனது ஆற்றலை மேம்படுத்தும் குறிக்கோளுடைய ஒரு திட்டத்தை 1972 இல் பாக்கித்தான் தொடங்கியது. அதே ஆண்டில். இந்நாட்டின் முதல் அணு மின் நிலையமானது தொடங்கப்பட்டது.[134][135] இடது சாரி பாக்கித்தான் மக்கள் கட்சிக்கு எதிராக 1977 இல் நடந்த ஓர் இராணுவ ஆட்சி கவிழ்ப்புடன் சனநாயகமானது பாக்கித்தானில் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக 1978 இல் சியா-உல்-ஹக் அதிபரானார்.[136] 1977 முதல் 1988 வரை அதிபர் சியாவின் நிறுவனமயமாக்கம் மற்றும் பொருளாதார இசுலாமியமயமாக்க நடவடிக்கைகளானவை தெற்காசியாவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக பாக்கித்தானை ஆக்கின.[137] நாட்டின் அணு ஆயுதத் திட்டத்தை மேம்படுத்தியது, அதிகரித்த இசுலாமியமயமாக்கம் மற்றும் உள்நாட்டிலேயே உருவான பழமைவாத தத்துவத்தை வளர்த்தது ஆகிய செயல்களைச் செய்த அதே நேரத்தில், ஆப்கானித்தான் சனநாயகக் குடியரசில் சோவியத் ஒன்றியத்தின் தலையீட்டுக்கு எதிராக முசாகிதீன் பிரிவுகளுக்கு ஐக்கிய அமெரிக்க ஆதார வளங்களை மானியப்படுத்தி, பகிர்ந்தளிக்க பாக்கித்தான் உதவியது.[138][139][140] சோவியத்துகளுக்கு எதிரான ஆப்கானிய சண்டையாளர்களுக்கு ஒரு தளமாக பாக்கித்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமானது உருவானது.[141] 1988 இல் ஒரு விமான விபத்தில் அதிபர் சியா இறந்தார். சுல்பிக்கார் அலி பூட்டோவின் மகளான பெனசீர் பூட்டோ பாக்கித்தானின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தசாப்தத்தில் பாக்கித்தான் மக்கள் கட்சி அதைத் தொடர்ந்து பழமைவாத பாக்கித்தான் முசுலிம் லீக் (நவாஸ்) ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் அதிகராத்திற்காகப் போட்டியிட்டனர். மாறி மாறி ஆட்சியமைத்தனர்.[142] அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் தேவை நின்று போதல் ஆகியவற்றுடன் சேர்த்து அதிக பணவீக்கம், அரசியல் நிலையற்ற தன்மை, இலஞ்ச ஊழல், திறனற்ற ஆட்சி, இடதுசாரி-வலதுசாரி சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை ஆகியவற்றால் இக்காலகட்டமானது குறிக்கப்படுகிறது.[143][144] ![]() இரு நாடுகளுக்கிடையில் கார்கிலில் ஏற்பட்ட இராணுவப் பதட்டங்களானவை 1999 ஆம் ஆண்டின் கார்கில் போருக்குக் காரணமாயின.[146][147] குடிசார்-இராணுவ உறவு முறைகளில் ஏற்பட்ட பிரச்சினைகளானவை ஓர் இரத்தம் சிந்தாத ஆட்சிக் கவிழ்ப்பின் மூலமாக இராணுவத் தளபதி பெர்வேசு முசாரப் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அனுமதியளித்தன.[148] 1999 முதல் 2002 வரை அரசுத் தலைவராகவும், 2001 முதல் 2008 வரை அதிபராகவும் பாக்கித்தானை முசாரப் ஆண்டார்.[149] தேசிய நாடாளுமன்றமானது வரலாற்று ரீதியாக தன் முதல் முழுமையான ஐந்தாண்டு பதவிக் காலத்தை 2007 நவம்பர் 15 அன்று முடித்தது.[150] 2007 இல் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு பாக்கித்தான் மக்கள் கட்சியானது 200 ஆம் ஆண்டின் தேர்தல்களில் பெரும்பாலான வாக்குகளைப் பெற்றது. கட்சி உறுப்பினரான யூசஃப் ரசா கிலானியைப் பிரதமராக நியமித்தது.[151] குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான அதிபர் முசாரப் 2008 ஆகத்து 18 அன்று இராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு அதிபராக ஆசிஃப் அலி சர்தாரி பதவிக்கு வந்தார்.[152] நீதித்துறையுடனான பிரச்சினைகளானவை நாடாளுமன்றத்தில் இருந்து கிலானி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணமாயின. சூன் 2012 இல் பிரதமர் பதவியில் இருந்தும் இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[153] 2013 இல் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல்களானவை பாக்கித்தான் முசுலிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றியைப் பெறுவதைக் கண்டன.[154] இதைத் தொடர்ந்து நவாஸ் செரீப் மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[155] 2018 இல் பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு கட்சியானது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. பாக்கித்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவிக்கு வந்தார்.[156] இம்ரான் கான் நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் தோற்றதற்குப் பிறகு ஏப்ரல் 2022 இல் செபாஷ் செரீப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[157] 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபுவின் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் மிகப் பெரிய குழுவாக உருவாயினர்.[158] ஆனால், பாக்கித்தான் முசுலிம் லீக் (நவாஸ்) மற்றும் பாக்கித்தான் மக்கள் கட்சி நாடாளுமன்றவாதிகள் ஆகிய கட்சிகளின் ஒரு கூட்டணியின் விளைவாக இரண்டாவது முறையாக செபாஷ் செரீப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[159] புவியியல்![]() பாக்கித்தானின் வேறுபட்ட புவியியல் மற்றும் காலநிலையானது பல்வேறுபட்ட காட்டுயிர்களைக் கொண்டுள்ளது.[160] இந்நாட்டின் பரப்பளவு 8,81,913 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.[161] பிரான்சு மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் ஒட்டு மொத்த அளவுடன் பாக்கித்தானின் அளவு ஒப்பிடப்படக் கூடியதாகும்.[162] ஒட்டு மொத்த நிலப் பரப்பளவில் உலகின் 33 ஆவது மிகப் பெரிய நாடாக இந்நாடு திகழ்கிறது.[163] எனினும், காசுமீரின் பிணக்கான நிலை காரணமாக இந்த பரப்பளவு வேறுபடலாம். அரபிக் கடல் மற்றும் ஓமான் குடா ஆகியவற்றின் நெடுகில் பாக்கித்தான் 1,046 கிலோமீட்டர்கள் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது.[164][165] பாக்கித்தானின் நில எல்லைகளின் நீளமானது 6,774 கிலோமீட்டர்கள் ஆகும். இதில் ஆப்கானித்தானுடனான 2,430 கிலோமீட்டர்கள், சீனாவுடனான 523 கிலோமீட்டர்கள், இந்தியாவுடனான 2,912 கிலோமீட்டர்கள் மற்றும் ஈரானுடனான 909 கிலோமீட்டர்கள் ஆகியவை உள்ளடங்கும்.[166] ஓமானுடன் இது கடல் எல்லையைக் கொண்டுள்ளது.[167] வக்கான் தாழ்வாரம் வழியாக தஜிகிஸ்தானுடன் இது நில எல்லையைக் கொண்டுள்ளது.[168] தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் நடு ஆசியா[169] ஆகிய பகுதிகள் இணையுமிடத்தில் அமைந்துள்ள பாக்கிதானின் அமைவிடமானது புவிசார் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.[170] நிலவியல் ரீதியாக சிந்து-திசாங்போ தைப்புப் பகுதி, மற்றும் சிந்து மற்றும் பஞ்சாப்பில் உள்ள இந்தியப் புவித்தட்டு ஆகிய இரு பகுதிகளிலும் பாக்கித்தான் அமைந்துள்ளது. அதே நேரத்தில், பலூசிஸ்தான் மற்றும் பெரும்பாலான கைபர் பக்துன்க்வா பகுதியும் ஐரோவாசியப் புவியியல் தட்டின் மீது அமைந்துள்ளன. இவை முதன்மையாக ஈரானியப் பீடபூமியில் அமைந்துள்ளன. இந்தியப் புவித்தட்டின் நெடுகில் உள்ள கில்கித்-பல்திஸ்தான் மற்றும் பாக்கித்தான் காசுமீர் ஆகியவை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களுக்கு உள்ளாகக் கூடியவையாக உள்ளன.[171] ![]() பாக்கித்தானின் இயற்கைக் காட்சிப் பரப்புகளானவை கடற்கரைச் சமவெளிகள் முதல் பனிப் பாறை மலைகள் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றன. இந்நாட்டில் பாலைவனங்கள், காடுகள், குன்றுகள் மற்றும் பீடபூமிகள் காணப்படுகின்றன.[173] பாக்கித்தான் மூன்று முதன்மையான புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை வடக்கு உயர் நிலங்கள், சிந்துவெளி மற்றும் பலூசிஸ்தான் பீடபூமி ஆகியவையாகும்.[174] வடக்கு உயர் நிலங்களில் காரகோரம், இந்து குஃசு, மற்றும் பாமிர் மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. உலகின் மிக உயரமான சிகரங்களில் சிலவற்றை இவை கொண்டுள்ளன. எண்ணாயிரம் மீட்டரை மீறும் 14 மலைகளில் (8,000 மீட்டர்கள் or 26,250 அடிகள்) ஐந்து மலைகள் இங்குள்ளன. இதில் முக்கியமானவை கே-2 கொடுமுடி (8,611 m or 28,251 அடி) மற்றும் நங்க பர்வதம் (8,126 m or 26,660 அடி) ஆகியவையாகும்.[175][176] பலூசிஸ்தான் பீடபூமியானது மேற்கில் அமைந்துள்ளது. தார்ப் பாலைவனமானது கிழக்கில் அமைந்துள்ளது.[177][178][179] 1,609 கிலோமீட்டர்கள் நீள சிந்து ஆறும், அதன் கிளை ஆறுகளும் காசுமீர் முதல் அரபிக் கடல் வரை இந்நாட்டில் உள்ள பகுதிகள் வழியாகக் கடந்து செல்கின்றன. பஞ்சாப் மற்றும் சிந்துப் பகுதிகளுக்கு நெடுகில் வண்டல் சமவெளிகளை வளமாக்குகின்றன.[180] வெப்ப மண்டலம் முதல் மிதமான வெப்ப மண்டலப் பகுதிகள் என் இந்நாட்டின் காலநிலையானது வேறுபட்டுக் காணப்படுகிறது. தெற்குக் கடற்கரைப் பகுதியில் வறண்ட சூழ்நிலை காணப்படுகிறது. கடுமையான மழைப் பொழிவின் காரணமாக அடிக்கடி வெள்ளத்தை ஏற்படுத்தும் ஒரு பருவப் பெயர்ச்சி மழைக் காலமும் இங்கு ஏற்படுகிறது. மிகக் குறைவான மழைப் பொழிவு முதல் மழைப் பொழிவற்றது வரையிலான ஒரு வறண்ட காலநிலையும் இங்கு காணப்படுகிறது.[181] பாக்கித்தான் நான்கு தனித்துவமான பருவங்களைப் பெறுகிறது. அவை திசம்பர் முதல் பெப்ரவரி வரையிலான ஒரு குளிர்ந்த, வறண்ட குளிர் காலம், மார்ச் முதல் மே வரையிலான வறண்ட இளவேனிற்காலம், சூன் முதல் செப்டம்பர் வரையிலான கோடை மழைக்காலப் பருவம் அல்லது தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைக்காலம், மற்றும் அக்டோபர் மற்றும் நவம்பரின் பின்வாங்கும் பருவப் பெயர்ச்சி மழைக்காலம் ஆகும்.[182] ஒவ்வொரு ஆண்டும் மழைப் பொழிவானது பெருமளவுக்கு வேறுபடுகிறது. வெள்ளமும், வறட்சியும் மாறி மாறி வருவது இந்நாட்டில் பொதுவானதாக உள்ளது.[183] தாவரங்களும், விலங்குகளும்பாக்கித்தானில் காணப்படும் வேறுபட்ட இயற்கைக் காட்சிப் பரப்பு மற்றும் காலநிலையானது வேறுபட்ட அளவிலான மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு ஆதரவளிக்கிறது.[184] வடக்கு மலைகளில் உள்ள பைன் மற்றும் தேவதாரம் போன்ற ஊசியிலை அல்பைன் மற்றும் மலைச் சூழற்றொகுதிகள் முதல் சுலைமான் மலைத்தொடரில் உள்ள சிசே மரம் போன்ற இலையுதிர் மரங்கள் வரையிலும்,[181] மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள தென்னை மற்றும் பேரீச்சை போன்ற பனை வகை மரங்கள் வரையிலும் இங்கு வேறுபட்டு காணப்படுகின்றன.[185][186] மேற்குக் குன்றுகளானவை சூனிப்பர் தேவதாரு மரங்கள், கோடைச் சவுக்கு மரங்கள், கரடுமுரடான புற்கள் மற்றும் தூறுத் தாவரங்களைக் கொண்டுள்ளன.[187] தெற்கில் கடற்கரைச் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரக் காடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.[188] பெரும்பாலான வடக்கு மற்றும் வடமேற்கு உயர்நிலப் பகுதிகளில் கடல்மட்டத்திலிருந்து 1,000 முதல் 4,000 மீட்டர்கள் (3,300 முதல் 13,100 அடிகள்) உயரத்தில் ஊசியிலைக் காடுகள் இணைப்பவையாகக் காணப்படுகின்றன.[189] பலூசிஸ்தானின் மிக வறண்ட பகுதிகளில் பேரீச்சை மரங்களும், எபேத்ரா தூறுத் தாவரங்களும் பரவலாகக் காணப்படுகின்றன.[185][190] பஞ்சாப் மற்றும் சிந்துப் பகுதியின் சிந்துவெளிகளில் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல வறண்ட மற்றும் ஈரப்பதமான அகண்ட இலைக் காடுகளும், மேலும், வெப்ப மண்டல மற்றும் மிக வறண்ட தூறு நிலங்களும் செழித்தோங்குகின்றன.[191] 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி பாக்கித்தானின் 36,845.6 சதுர கிலோமீட்டர்கள் அல்லது தோராயமாக 4.8% நிலப்பரப்பானது காடுகளாக உள்ளது.[192][e] ![]() பாக்கித்தானின் விலங்குகளானவை இந்நாட்டின் வேறுபட்ட காலநிலையைப் பிரதிபலிக்கின்றன. காகங்கள், சிட்டுக்குருவிகள், மைனாக்கள், பாறுகள், வல்லூறுகள் மற்றும் கழுகுகள் உள்ளிட்ட சுமார் 668 பறவையினங்களை இந்நாடு கொண்டுள்ளது.[194] கைபர் பக்துன்க்வா மாகானத்தின் கோகிசுதானானது மேற்கத்திய டிராகோபானுக்குத் தாயகமாக உள்ளது. ஐரோப்பா, நடு ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து ஏராளமான வலசை வரும் பறவைகள் இங்கே வருகை புரிகின்றன.[195] தெற்கு சமவெளிகளில் கீரிகள்,[196] சிறு இந்தியப் புனுகுப்பூனை,[197] முயல்கள்,[198] பொன்னிறக் குள்ளநரி,[199] இந்திய அலங்கு,[200] காட்டுப்பூனை,[201] மற்றும் மணல் பூனை[202] ஆகியவை காணப்படுகின்றன. சிந்து ஆறானது சதுப்புநில முதலைகளுக்குத் தாயகமாக உள்ளது.[203] அதே நேரத்தில், சிந்து ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளானவை காட்டுப்பன்றிகள்,[204] மான்,[205] மற்றும் முள்ளம்பன்றிகளைக்[206] கொண்டுள்ளன. நடு பாக்கித்தானின் மணற்பாங்கான புதர் நிலங்களானவை ஆசிய சாகால் நரிகள்,[199] வரிக் கழுதைப்புலிகள்,[207] காட்டுப் பூனைகள் மற்றும் சிறுத்தைகளைக் கொண்டுள்ளன. மலைப்பாங்கான வடக்குப் பகுதியானது மார்கோ போலோ செம்மறியாடு,[208] உரியல் காட்டு செம்மறியாடு, மார்க்கோர் காட்டு ஆடு, ஐபெக்சு ஆடு, ஆசியக் கறுப்புக் கரடி, மற்றும் இமயமலை பழுப்புக் கரடி போன்ற பல்வேறுபட்ட விலங்குகளைக் கொண்டுள்ளது.[181] தாவரப் போர்வை இல்லாமை, கடுமையான காலநிலை மற்றும் பாலைவனங்களில் மேய்ச்சலின் தாக்கம் ஆகியவை இந்நாட்டில் காட்டு விலங்குகளை அருகிய இனங்களாக ஆக்கியுள்ளன.[209] சோலிஸ்தான் பாலைவனத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணப்படும் ஒரே ஒரு விலங்கு இந்தியச் சிறுமான் மட்டுமே ஆகும்.[210] வெகுசில நீலான்கள் பாக்கித்தான்-இந்திய எல்லைக்கு நெடுகிலும், சோலிஸ்தானின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன.[211] பனிச்சிறுத்தை மற்றும் கண்பார்வையற்ற சிந்து ஆற்று ஓங்கில் உள்ளிட்டவை அரிதாகக் காணப்படும் விலங்குகளாகும்.[181] சிந்து ஆற்று ஓங்கில்களில் சுமார் 1,816 மட்டுமே எஞ்சியுள்ளன என்று நம்பப்படுகிறது. சிந்து ஆற்றின் சிந்து ஓங்கில் காப்பிடத்தில் இவை பாதுகாக்கப்பட்டவையாக உள்ளன.[212] மொத்தமாக, 174 பாலூட்டியினங்கள், 177 ஊர்வன இனங்கள், 22 நீர்நில வாழ்வன, 198 நன்னீர் மீனினங்கள், 668 பறவையினங்கள், 5,000 க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் மற்றும் 5,700 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் ஆகியவை பாக்கித்தானில் பதிவிடப்பட்டுள்ளன.[194] காடழிதல், வேட்டையாடுதல் மற்றும் மாசுபடுதல் ஆகியவற்றை பாக்கித்தான் எதிர் கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் காட்டு இயற்கைக் காட்சிப்பரப்பு முழுமைச் சுட்டெண்ணானது பாக்கித்தானுக்கு 7.42/10 என்ற மதிப்பெண்ணைக் கொடுத்தது. கணக்கெடுக்கப்பட்ட 172 நாடுகளில் உலகளவில் 41 ஆவது இடத்தைக் கொடுத்தது.[213] அரசாங்கமும், அரசியலும்![]() ஒரு சனநாயக நாடாளுமன்றக் கூட்டாட்சிக் குடியரசாக பாக்கித்தான் செயல்படுகிறது. இந்நாட்டில் அரசின் சமயமாக இசுலாம் உள்ளது.[214][215] 1956 இல் ஓர் அரசியலமைப்பை இயற்றியதைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு அது அயூப் கானால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதை பாக்கித்தான் கண்டது. 1962 ஆம் ஆண்டு அதை இடமாற்ற ஓர் இரண்டாவது அரசியலமைப்பு இயற்றப்பட்டது.[216] 1973 இல் ஓர் அகல் விரிவான அரசியலமைப்பு உருவானது. 1977 இல் சியா-உல்-ஹக்கால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், 1985 ஆம் ஆண்டு மீண்டும் பின்பற்றப்படத் தொடங்கியது. இது நாட்டின் நிர்வாகத்தை வடிவமைத்துள்ளது.[166] பாக்கித்தான் வரலாறு முழுவதும் பெரும்பான்மை நடைமுறை வழக்கான அரசியலில் இராணுவத்தின் தாக்கமானது குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருந்துள்ளது.[217] 1958-1971, 1977-1988 மற்றும் 1999-2008 ஆகிய சகாப்தங்களானவை இராணுவத்தால் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புங்கள், இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது மற்றும் நடைமுறை ரீதியிலான அதிபர்களாக இராணுவத் தலைவர்கள் ஆட்சி செய்தது ஆகியவற்றைக் கண்டது.[218] தற்போது பாக்கித்தானானது அரசாங்கத் துறைகளுக்கிடையே தனித்துவமான அதிகாரப் பிரிவினையுடன்[219] ஒரு பல-கட்சி நாடாளுமன்ற முறையில் செயல்படுகிறது.[220] முதல் வெற்றிகரமான சனநாயக மாற்றானது மே 2013 இல் நடந்தது.[221] சமதர்மம், பழமைவாதம் மற்றும் மூன்றாவது வழி (மையம்) ஆகியவற்றின் ஒரு கலவையைச் சுற்றி பாக்கித்தானின் அரசியலானது நடைபெறுகிறது.[222] பழமைவாத பாக்கித்தான் முசுலிம் லீக் (நவாஸ்), சமதர்ம பாக்கித்தான் மக்கள் கட்சி மற்றும் மைய பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு ஆகிய மூன்று முதன்மையான அரசியல் கட்சிகள் இந்நாட்டில் உள்ளன.[223] 2010 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களானவை அதிபரின் சக்திகளைக் குறைத்தும், பிரதமரின் பங்கை செம்மைப்படுத்தவும் செய்தன.[224]
![]()
![]()
நிர்வாகப் பிரிவுகள்
ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாக பாக்கித்தான் நான்கு மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது. அவை பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பலூசிசுதானம் ஆகியவை ஆகும். இவற்றுடன் இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம், வடக்கு நிலங்கள், மற்றும் பாக்கித்தான் காஷ்மீர் ஆகிய மூன்று நிலப்பரப்புகளையும் இந்நாடு உள்ளடக்கியுள்ளது.[248] காசுமீரின் மேற்குப் பகுதிகளானவை பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் உள்ளன. பாக்கித்தான் காசுமீர் மற்றும் கில்கித்-பல்திசுதான் எனும் தனித் தனி அரசியல் பிரிவுகளாக இவை அமைக்கப்பட்டுள்ளன.[249] 2009 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தமானது கில்கித்-பல்திசுதானுக்கு பகுதியளவு-மாகாண நிலையையும், தன்னாட்சி உரிமையையும் கொடுத்தது.[250] உள்ளாட்சி அரசாங்க அமைப்பானது மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு நிலையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இவற்றுக்குச் சேவையாற்றுகின்றனர்.[251] பாக்கித்தானின் நான்கு மாகாணங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சி நிலப்பரப்புகளின் சொடுக்கக் கூடிய வரைபடம்.
![]()
அயல் நாட்டு உறவுகள்சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரு சுதந்திரமான அயல்நாட்டுக் கொள்கையைப் பேணுவதை பாக்கித்தான் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.[252] பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய அடையாளம் மற்றும் ஆள்புலத் திண்மை, மேலும் பிற முசுலிம் நாடுகளுடன் நெருக்கமான உறவு முறைகளைக் கட்டமைப்பது ஆகியவற்றை பாக்கித்தானின் அயல்நாட்டுக் கொள்கை மற்றும் புவிசார் உத்திகளானவை கவனக் குவியமாகக் கொண்டுள்ளன.[253] துருக்கி மற்றும் ஈரானுடன் நெருக்கமான உறவு முறைகளை பாக்கித்தான் கொண்டுள்ளது.[254] இந்நாட்டின் அயல்நாட்டுக் கொள்கையில் கவனக் குவியங்களாக இந்த இரண்டு நாடுகளும் உள்ளன. பாக்கித்தானின் அயல்நாட்டுக் கொள்கைகளில் சவூதி அரேபியாவும் கூட முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது.[255] அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத ஒரு நாடாக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தில் பாக்கித்தான் செல்வாக்கைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.[256] பிளவுறுமையை வரம்புபடுத்தும் ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்தை பல ஆண்டுகளாக பாக்கித்தான் தடுத்து வைத்துள்ளது. பாக்கித்தானிடம் உள்ள கையிருப்புகளானவை அதன் நீண்ட கால தேவைகளுக்குப் போதாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறி இந்நாடு வாதிட்டுள்ளது.[257] அயல்நாடுகளை அச்சுறுத்திக் கட்டுப்படுத்துவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற ஒரு கொள்கையைப் பாக்கித்தான் கொண்டுள்ளது.[258] அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையைப் பின்பற்ற பாக்கித்தான் மறுக்கிறது. அதே நேரத்தில், பிற பிராந்திய சக்திகளான இந்தியா மற்றும் சீனா இக்கொள்கையைப் பின்பற்றுகின்றன.[259] ![]() உலகின் முக்கியமான கடல்சார் கச்சா எண்ணெய் வழங்கும் வழிகள் மற்றும் தொலைத்தொடர்பு ஒளியிழை வழிகளில் உத்தி ரீதியில் அமையப் பெற்ற பாக்கித்தான் நடு ஆசிய நாடுகளின் இயற்கை வளங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது.[261] பன்னாட்டு அரசியலில் இந்நாட்டின் நிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு நிரந்தர பிரதிநிதியுடன் ஐநா சபையில் பாக்கித்தான் பங்கெடுத்து வருகிறது.[262] முசுலிம் உலகில் "அறிவொளி பெற்ற மிதவாதம்" என்ற கொள்கைக்கு இது பரிந்துரைத்து வருகிறது.[263] பொதுநலவாய நாடுகள், தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு,[264][265] மற்றும் ஜி20 வளர்ந்து வரும் நாடுகள் ஆகியவற்றின் ஓர் உறுப்பினராக பாக்கித்தான் உள்ளது.[266] ![]() பாக்கித்தானுக்கு சீனா "இரும்பு சகோதரன்" என்ற நிலையைக் கொடுத்துள்ளது. இந்நாடுகளின் நெருக்கமான மற்றும் ஆதரவான உறவு முறையின் முக்கியத்துவத்தை இது குறிக்கிறது.[268] 1950 களில் புவிசார் அரசியல் காரணங்களுக்காக பாக்கித்தான் சோவியத் ஒன்றியத்தை எதிர்த்தது. 1980 களில் சோவியத்-ஆப்கான் போரின் போது ஐக்கிய அமெரிக்காவின் ஒரு நெருங்கிய கூட்டாளியாக பாக்கித்தான் திகழ்ந்தது.[269] பனிப்போர் முடிந்ததிலிருந்து உருசியாவுடனான இந்நாட்டின் உறவு முறைகளானவை மேம்பட்டுள்ளன.[270] ஆனால், ஐக்கிய அமெரிக்காவுடனான பாக்கித்தானின் உறவு முறையானது "சில நேரங்களில் நன் முறையிலும், சில நேரங்களில் மோசமடைந்தும்" இருந்து வந்துள்ளது.[269] பனிப்போர்க் காலத்தின் போது தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு நெருங்கிய கூட்டாளியாக இருந்த பாக்கித்தானுடனான உறவு முறைகளானவை[271] 1990 களில் மோசமடைந்தது. பாக்கித்தானின் இரகசிய அணு ஆயுதத் திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்ததே இதற்குக் காரணம் ஆகும்.[272] 2001 செப்டம்பர் 11 தாக்குதலிலிருந்து பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு கூட்டாளியாக பாக்கித்தான் திகழ்கிறது. 20 ஆண்டுப் போர் மற்றும் பயங்கரவாத விவகாரங்களின் போது வேறுபட்டிருந்த விருப்பங்கள் மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக இந்நாடுகளின் உறவு முறையானது மோசமடைந்துள்ளது. 2004 இல் ஐக்கிய அமெரிக்கா நேட்டோ சாராத முக்கியமான கூட்டாளி என்ற நிலையை பாக்கித்தானுக்கு வழங்கிய போதும்,[273] ஆப்கானித்தானில் தாலிபான்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றச்சாட்டுகளையும் பாக்கித்தான் அமெரிக்காவிடமிருந்து எதிர் கொண்டுள்ளது.[274] இசுரேலுடன் அலுவல்பூர்வமான தூதரக உறவு முறைகளை பாக்கித்தான் கொண்டிருக்கவில்லை. இருந்த போதிலும், 2005 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையில் ஒரு தூதரகப் பரிமாற்றமானது துருக்கியை இடையீட்டாளராகக் கொண்டு நடந்தது.[275] சீனாவுடனான உறவு முறைகள்![]() சீனாவுடன் அலுவல்பூர்வமான தூதரக உறவுகளை நிறுவிய முதல் சில நாடுகளில் பாக்கித்தானும் ஒரு நாடாகும்.[278] ஐக்கிய அமெரிக்கா-சீனா இடையிலான மறு சீரிணைவின் போது ஓர் இடையீட்டாளராக பாக்கித்தான் 1970 களில் செயல்பட்டது.[279] சீனாவுக்கு ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் வரலாற்று ரீதியிலான பயணத்தை எளிதாக்கியது.[280][281] பாக்கித்தானிய நிர்வாகம் மற்றும் பிராந்திய அல்லது உலகளாவிய நிகழ்வுகளில் மாற்றங்கள் இருந்த போதும் பாக்கித்தானில் சீனாவின் செல்வாக்கானது தொடர்ந்து இன்றியமையாததாக உள்ளது.[279] இதற்குக் கைமாறாக பாக்கிதானின் மிகப் பெரிய வணிகக் கூட்டாளியாக சீனா திகழ்கிறது. பாக்கித்தானின் உட்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முதலீட்டை சீனா செய்துள்ளது. குறிப்பாக குவதார் துறைமுகத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.[282] 2015 இல் மட்டும் இரு நாடுகளும் ஒத்துழைப்பு முயற்சிகளுக்காக 51 ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளன.[283] 2006 இல் இரு நாடுகளும் ஒரு கட்டற்ற வணிக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.[284] சீனா–பாக்கித்தான் பொருளாதாரப் பாதை மூலமாக பாக்கித்தானின் வரலாற்றில் தன் மிகப் பெரிய முதலீட்டை சீனா செய்துள்ளது.[285] முசுலிம் நாடுகளுடனான சீனாவின் தொடர்பாளராக பாக்கித்தான் செயல்படுகிறது.[286] தைவான், சிஞ்சியாங் மற்றும் பிற உணர்ச்சி மென்மை வாய்ந்த விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கு மற்றொன்று ஆதரவளித்துக் கொள்கின்றன.[287] முசுலிம் உலகுடனான உறவு முறைகள்சுதந்திரத்திற்குப் பிறகு பிற முசுலிம் நாடுகளுடன் இருதரப்பு உறவு முறைகளைத் தொடங்க பாக்கித்தான் ஊக்கத்துடன் முயற்சித்தது.[288]:{{{3}}} இசுலாமிய உலகின் இயற்கையான தலைவராக பாக்கித்தானைக் காட்ட அலி சகோதரர்கள் விரும்பினர். இந்நாட்டின் முதன்மையான மனித வளம் மற்றும் இராணுவ வலிமை ஆகியவை இதற்கு ஒரு பங்கு காரணமாகும்.[289]:{{{3}}} பாக்கித்தானின் உருவாக்கத்துடன் சேர்த்து இந்த நிகழ்வுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து அங்கீகரிப்பைப் பெறவில்லை. பிரித்தானியப் பிரதமர் கிளமெண்ட் அட்லீ இந்தியா மற்றும் பாக்கித்தான் மீண்டும் இணைவதற்கு ஒரு நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.[290]:{{{3}}} எனினும், அரபு உலகத்தில் அந்நேரத்தில் ஒரு தேசியவாத விழிப்படைதல் நடந்து கொண்டிருந்ததன் காரணமாக ஒட்டு மொத்த இசுலாமிய நாடுகளையும் இணைத்து "இசுலாமிசுதான்" என்று பெயரிடும் பாக்கித்தானின் விருப்பங்களுக்குப் பிற நாடுகள் சிறிதளவு ஆர்வத்தையே வெளிப்படுத்தின.[291]:{{{3}}} சில அரபு நாடுகள் "இசுலாமிசுதான்" திட்டத்தை பிற முசுலிம் நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் பாக்கித்தானின் இன்னொரு முயற்சியாகக் கண்டன.[292]:{{{3}}} பாக்கித்தானை நிறுவிய முகம்மது அலி ஜின்னா பாலத்தீனிய காரணத்திற்காக தொடர்ந்து ஆதரவாகப் பேசினார். முசுலிம் ஒத்துணர்வுக்கான பரந்த ஆதாரக் கட்டமைப்புக்குள் பாலத்தீன உரிமைகளுக்கு ஆதரவளிக்க பாக்கித்தானின் அயல்நாட்டுக் கொள்கையை வடிவமைத்தார்.[293] 1967 ஆம் ஆண்டின் அரபு-இசுரேலியப் போரின் போது பாக்கித்தான் அரபு நாடுகளுக்கு ஆதரவளித்தது. ஐநாவுக்குள் மற்றும் அதைத் தாண்டிய வழிகளிலும் அரபு நாடுகளுக்காக ஈரானின் ஆதரவைப் பெறுவதில் இந்நாடு ஒரு முக்கியப் பங்காற்றியது.[294] சமயப் பிரிவு பதற்றங்களின் காரணமாக ஈரானுடனான பாக்கித்தானின் உறவு முறைகளானவை மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[295]:{{{3}}} தங்களது சார்பாண்மை சமயப் பிரிவுப் போருக்கு ஒரு யுத்த களமாக பாக்கித்தானை ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் பயன்படுத்துவதாகக் குறிப்பிடப்படுகிறது.[296]:{{{3}}} ஈரான்-ஈராக் போரின் தொடக்க நாட்களிலிருந்து அதிபர் சியா-உல்-ஹக் ஒரு முக்கியமான இடையீட்டாளரின் பங்கை ஆற்றினார். அச்சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் பாக்கித்தான் செயல்பாட்டுடன் ஈடுபட்டது.[297][298] வளைகுடாப் போரின் போது பாக்கித்தான் சவூதி அரேபியாவுக்கு ஆதரவு அளித்தது.[299] "தீர்க்கமான புயல் நடவடிக்கையின்" போது பாக்கித்தான் நடு நிலையாகத் தொடர்ந்து இருக்கும் வழியைத் தேர்ந்தெடுத்தது. யெமனுக்கு எதிரான சவூதி அரேபியாவின் தாக்குதலுக்கு இராணுவ ஆதரவை அனுப்புவதைத் தவிர்த்தது. மாறாகப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒரு செயல்பாடுடைய தூதரகப் பங்கை ஆற்றுவதை பாக்கித்தான் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.[300] இது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றங்களுக்கு வழி வகுத்தது.[299] இராணுவம்பாக்கித்தான் ஒரு நடுத்தர அளவு சக்தியாகக் கருதப்படுகிறது.[301][f] போர் வீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் 7 ஆவது மிகப் பெரிய நிலையான ஆயுதப் படைகளை இந்நாடு கொண்டுள்ளது. தோராயமாக 6.60 இலட்சம் செயல்பாட்டிலுள்ள துருப்புகள் மற்றும் 2.91 இலட்சம் துணை இராணுவப் படையினரை உள்ளடக்கிய ஆயுதப்படைகளை 2024 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்நாடு கொண்டுள்ளது.[302] 1947 இல் நிறுவப்பட்ட பாக்கித்தானின் ஆயுதப் படைகளானவை தேசிய அரசியல் மீது குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வாக்கைக் கொண்டுள்ளன.[303] தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை உள்ளிட்டவை இராணுவத்தின் முதன்மையான பிரிவுகள் ஆகும். இவர்களுக்கு ஆதரவாக ஏராளமான துணை இராணுவப் படையினரும் உள்ளனர்.[304] பணியாளர் ஆணையத்தின் இணைந்த தலைவர்களின் தலைவர் உயர்ந்த நிலையிலுள்ள இராணுவ அதிகாரியாவார். குடிசார் அரசாங்கத்திற்கு இவர் ஆலோசனைகளை வழங்குகிறார். எனினும், குடிசார் அரசுத் துறைகளின் மீது இவர் நேரடியான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இடையீட்டாளராக மட்டுமே சேவையாற்றுகிறார். இராணுவம் மற்றும் குடிசார் தலைமைத்துவத்துக்கு இடையிலான தொடர்பை இவர் உறுதி செய்கிறார். இணைந்த பணியாளர் தலைமையிடத்தை மேற்பார்வையிடும் இவர் சேவைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இணைந்த இராணுவத் திட்டங்களை ஒருங்கிணைக்கிறார்.[305] பாக்கித்தானின் உத்தி ரீதியிலான படைக்கல மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மீதான அதிகாரமும், கட்டுப்பாடும் தேசிய அதிகார அமைப்பிடம் உள்ளது. அணு ஆயுதக் கொள்கையை இது மேற்பார்வையிடுகிறது.[306] பாக்கித்தானில் ஆயுதப் படைகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை ஐக்கிய அமெரிக்கா, துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகள் பேணி வருகின்றன. வாடிக்கையாக இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வது மற்றும் தொழில்நுட்பத்தைக் கை மாற்றுவது உள்ளிட்டவற்றை இந்நாடுகள் செய்து வருகின்றன.[307] 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கு இடையில் உலகின் 5 ஆவது மிகப் பெரிய ஆயுத இறக்குமதியாளராக பாக்கித்தான் திகழ்ந்தது.[308] இராணுவ வரலாறுபாக்கித்தானின் முதன்மையான உளவியல் முகமையான சேவைகளிடை உளவுத்துறையானது 1947 இல் பாக்கித்தானின் சுதந்திரத்திலிருந்து ஓராண்டுக்குள்ளாகவே நிறுவப்பட்டது.[309] சோவியத்-ஆப்கான் போரின் போது பாக்கித்தானின் உளவியல் சமூகமானது. பெரும்பாலும் சேவைகளிடை உளவுத்துறையானது. சோவியத் இருப்புக்கு எதிராக ஆப்கானிய முசாகிதீன் மற்றும் அயல்நாட்டு சண்டையாளர்களுக்கு ஆதரவளிக்க ஐக்கிய அமெரிக்காவின் வளங்களை ஒருங்கிணைத்தது.[310] இச்சண்டையின் போது சோவியத் மற்றும் ஆப்கானிய விமானப்படைகளுக்கு எதிராக பாக்கித்தான் விமானப்படையானது சண்டையிட்டது.[311] ஐநா அமைதி காக்கும் படைகளில் செயல்பட்டிலுள்ள பங்கெடுப்பாளராக பாக்கித்தான் திகழ்கிறது.[312] 1993 இல் சோமாலியாவின் முக்தீசூவில் மீட்பு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியுள்ளது.[313] 2023 ஆம் ஆண்டின் ஐநா அறிக்கையின்படி ஐநா அமைதி காக்கும் படைகளுக்கு ஐந்தாவது மிகப் பெரிய துருப்புப் பங்களிப்பாளராக பாக்கித்தான் இராணுவம் திகழ்கிறது.[314] பாக்கித்தான் சில அரபு நாடுகளில் தன்னுடைய இராணுவத்தை பாதுகாப்பு, பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்க இறக்கியுள்ளது.[315][316] ஆறு நாள் போர் மற்றும் யோம் கிப்பூர்ப் போர் ஆகியவற்றின் போது இசுரேலுக்கு எதிராக சண்டைகளில் பாக்கித்தானிய விமானப் படையின் போர் விமானிகள் பங்கெடுத்துள்ளனர்.[317] பெரிய பள்ளிவாசல் கைப்பற்றலின் போது மக்காவில் சவூதி படைகளுக்கு பாக்கித்தானிய சிறப்புப் படைகள் உதவி புரிந்தன.[318] வளைகுடாப் போரின் போது சவூதி அரேபியாவின் பாதுகாப்புக்காக ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக 5,000 துருப்புக்களையும் கூட பாக்கித்தான் அனுப்பியது.[319] பொசுனியா எர்செகோவினாவுக்கு ஆயுதம் வழங்குவதற்கு ஐநா தடை விதித்திருந்த போதிலும், தளபதி சாவேத் நசீர் தலைமையிலான சேவைகளிடை உளவுத்துறையானது பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை பொசுனிய முசாகிதீன்களுக்கு விமானங்களின் மூலம் வழங்கியது. பொசுனிய முசுலிம்களுக்கு ஆதரவாக சண்டையின் போக்கு மாறியதற்கு இது காரணமானது. நசீரின் தலைமைத்துவத்தின் கீழான சேவைகளிடை உளவுத்துறையானது சிஞ்சியாங்கில் சீன முசுலிம்கள், பிலிப்பீன்சில் கிளர்ச்சியாளர் குழுக்கள் மற்றும் நடு ஆசியாவில் சமயக் குழுக்கள் ஆகியோருக்கு ஆதரவளித்தது.[320]:{{{3}}}[321]:{{{3}}} 2001இலிருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் பாக்கித்தானிய இராணுவம் பங்கெடுத்துள்ளது. முதன்மையாக பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் மற்றும் அதனுடன் தொடர்புடைய போராளிக் குழுக்களை இலக்காக்கியுள்ளது. நீடித்த சுதந்திரம் நடவடிக்கை, அல்-மிசான் நடவடிக்கை, சல்சலா நடவடிக்கை, செர்தில் நடவடிக்கை, ரஹ்-இ-ஹக் நடவடிக்கை, ரஹ்-இ-ரஸ்த் நடவடிக்கை மற்றும் ரஹ்-இ-நிசாத் நடவடிக்கை உள்ளிட்டவை இக்காலத்தின் போது நடத்தப்பட்ட முக்கியமான இராணுவ நடவடிக்கைகள் ஆகும்.[322] சட்ட அமலாக்கம்பாக்கித்தானில் சட்ட அமலாக்கமானது கூட்டாட்சி மற்றும் மாகாண காவல் முகமைகளை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு நான்கு மாகாணமும் (பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான்) அவற்றின் சொந்த காவல் படையைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், இசுலாமாபாத் தலைநகர ஆள்புலமானது இசுலாமாபாத் காவல்துறையைக் கொண்டுள்ளது.[323] மாகாண காவல் படைகளானவை காவல் பொது ஆய்வாளரால் தலைமை தாங்கப்படுகின்றன. கூட்டாட்சி அளவில் சேர்க்கப்படும் மற்றும் பயிற்றுவிக்கப்படும் பாக்கித்தானின் காவல்துறை சேவையிலிருந்து இவர் நியமிக்கப்படுகிறார். கூட்டாட்சி மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு கலந்தாய்வு செயல்முறையின் வழியாக இவர் நியமிக்கப்படுகிறார். உதவி காவல்துறை கண்காணிப்பாளர் நிலைக்கு மேலே உள்ள அனைத்து பதவிகளும் பாக்கித்தானின் காவல் சேவையிலிருந்து நிரப்பப்படுகின்றன. மாகாணப் படைகளின் மத்தியில் தேசிய அளவிலான தரத்தை உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறு நிரப்பப்படுகின்றன.[324] சிறப்புப் பிரிவுகள்:
குடிசார் ஆயுதப்படைகளானவை உள்ளூர் சட்ட அமல்படுத்தும் முகமைகளுக்கு உதவி புரிகின்றன. எல்லைப்புற பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக, சண்டைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பங்கெடுக்கின்றன.[327] 2021 இல் தேசிய உளவியல் ஒருங்கிணைப்புக் குழுவானது பாக்கித்தானிய உளவியல் முகமைகளுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை மேம்படுத்த நிறுவப்பட்டது. சேவைகளிடை உளவுத்துறை, உளவியல் செயலகம், மற்றும் கூட்டாட்சி புலனாய்வு முகமை ஆகியவற்றின் தலைவர்கள் இதன் தொடக்க கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்தனர்.[328] மனித உரிமைகள்2024 இல் எல்லைகளற்ற செய்தியாளர்களால் வெளியிடப்பட்ட ஊடகச் சுதந்திர சுட்டெண்ணில் 180 நாடுகளில் 152 ஆவது இடத்தை பாக்கித்தான் பெற்றது. ஊடகச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகளை இந்த அமைப்பு சுட்டிக் காட்டியது.[329] அரசாங்கம் அல்லது இராணுவத்தை விமர்சிக்கும் அறிக்கைகளைப் பதிப்பிக்கும் தொலைக்காட்சி நிலையங்களும், செய்தித்தாள்களும் மூடப்படும் நிலையை எதிர் கொள்கின்றன.[330] பொருளாதாரம்
பாக்கித்தானின் பொருளாதாரமானது கொள்வனவு ஆற்றல் சமநிலையின்படி உலகளவில் 24 ஆவது இடத்தையும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் 43 ஆவது இடத்தையும் பெறுகிறது. வரலாற்று ரீதியாக பொ. ஊ. முதலாம் ஆயிரமாண்டில் உலகிலேயே மிக செல்வ வளம் மிக்கதாக் இருந்த இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக பாக்கித்தான் திகழ்ந்தது. ஆனால், 18 ஆம் நூற்றாண்டு வாக்கில் சீனா மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற பகுதிகளிடம் இடத்தை இழந்தது.[338] பாக்கித்தான் ஒரு வளர்ந்து வரும் நாடு ஆகும்.[339] பிரிக் நாடுகளுடன் சேர்த்து "அடுத்த 11" என்று குறிப்பிடப்படும் 21 ஆம் நூற்றாண்டில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக வளரும் நிலையைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.[340] சமீபத்திய ஆண்டுகளில், சமூக நிலையற்ற தன்மை மற்றும் பருப்பொருளியல் சமநிலையின்மைகளைப் பாக்கித்தான் எதிர் கொண்டுள்ளது. தொடருந்து போக்குவரத்து மற்றும் மின்சார ஆற்றல் உற்பத்தி போன்ற சேவைகளில் குறைபாடுகளைக் கொண்டுள்ளது.[341] பகுதியளவு-தொழிற்மயமாக்கப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரமானது வளர்ச்சி மையங்களை சிந்து ஆற்றின் நெடுகில் கொண்டுள்ளது.[342][343][344] கராச்சி மற்றும் பஞ்சாப்பின் நகர மையங்களின் பன்முகப் பொருளாதாரங்களானவை நாட்டின் பிற பகுதிகளில், குறிப்பாக பலூசிஸ்தானில் உள்ள வளர்ச்சி குறைவான பகுதிகளுடன் சேர்ந்து அமைந்துள்ளன.[343] உலகின் 67 ஆவது மிகப் பெரிய ஏற்றுமதிப் பொருளாதாரமாகவும், 106 ஆவது மிகவும் சிக்கலான பொருளாதாரமாகவும் பாக்கித்தான் தரநிலைப்படுத்தப்பட்டுள்ளது. 2015-16 ஆம் நிதியாண்டில் எதிர்மறை வணிக சமநிலையாக ஐஅ$23.96 பில்லியன் (₹1,71,352.3 கோடி) மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதியை விட அதிகமாக இந்நாடு இறக்குமதி செய்கிறது.[345][346] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி பாக்கித்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஐஅ$376.493 பில்லியன் (₹26,92,527.3 கோடி) ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.[347] கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஐஅ$1.512 டிரில்லியன் (₹108.1 டிரில்லியன்) ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. பெயரளவு தனிநபர் வருமானமானது ஐஅ$1,658 (₹1,18,573.5) என்றும், கொள்வனவு ஆற்றல் சமநிலையின் அடிப்படையிலான தனிநபர் வருமானமானது ஐஅ$6,662 (₹4,76,439.6) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.[331] உலக வங்கியின் கூற்றுப்படி பாக்கித்தான் முக்கியமான உத்தி ரீதியிலான அறக்கொடைகள் பெறும் நிலை மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சியாற்றலைக் கொண்டுள்ளது. பாக்கித்தானின் மக்கள் தொகையில் இளைய தலைமுறையினரின் அதிகரித்து வரும் தகவுப் பொருத்தமானது ஓர் உள்ளார்ந்த மக்கள் தொகை ஆதாயம் மற்றும் அவர்களுக்குத் தேவையான சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு சவால் ஆகிய இரண்டையுமே இந்நாட்டிற்குக் கொடுக்கிறது.[348] ஒரு நாளைக்கு ஐஅ$1.25 (₹89.4) எனும் பன்னாட்டு வறுமைக் கோட்டிற்குக் கீழ் இந்நாட்டின் மக்களில் 21.04% பேர் உள்ளனர். 15 மற்றும் அதற்கு அதிக வயதுடைய மக்களிடையே வேலைவாய்ப்பின்மை வீதமானது 5.5% ஆக உள்ளது.[349] பாக்கித்தான் 4 கோடி நடுத்தர வர்க்கக் குடிமக்களைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2050 வாக்கில் இது 10 கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.[350] 2015 ஆம் ஆண்டு உலக வங்கியால் பதிப்பிக்கப்பட்ட அறிக்கையானது பாக்கித்தானின் பொருளாதாரத்தை கொள்வனவு ஆற்றல் சமநிலையின்படி 24 ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும்,[351] பெயரளவு அல்லது ஒட்டு மொத்த அளவீடுகளில் 41 ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும்[352] தரநிலைப்படுத்தியது. தெற்காசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் இதுவாகும். தெற்காசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15% ஐ இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[353] பாக்கித்தானின் பொருளாதார வளர்ச்சி வீதமானது வேறுபட்ட அளவுகளில் இருந்துள்ளது. சனநாயக மாற்றங்களின் போது மெதுவாகவும், இராணுவச் சட்டத்தின் கீழ் கட்டுரமான விரிவாக்கத்துடனும் நீடித்த அடித்தளங்கள் இல்லாமல் இருந்து வந்துள்ளது.[120] 2000 ங்களின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரையிலான அதிகரித்த வளர்ச்சி செலவீனம் உள்ளிட்ட துரித சீர்திருத்தங்களானவை வறுமையை 10% குறைத்தும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை 3% அதிகரித்தும் வந்துள்ளன.[354][355] 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு பொருளாதாரமானது மந்தமாகியுள்ளது.[354] பண வீக்கமானது 2008 ஆம் ஆண்டு 25% என்ற உச்ச நிலையை அடைந்தது.[356] பாக்கித்தான் திவாலாவதைத் தடுக்க அனைத்துலக நாணய நிதியம் தலையிட வேண்டிய தேவை ஏற்பட்டது.[357] பாக்கித்தானில் பிறகு பொருளாதார அழுத்தமானது மென்மையாகியுள்ளதை ஆசிய வளர்ச்சி வங்கி குறிப்பிட்டது.[358] 2010-11 ஆம் நிதியாண்டில் பணவீக்கமானது 14.1% ஆக இருந்தது.[359] 2013 இலிருந்து பாக்கித்தானின் பொருளாதாரமானது அனைத்துலக நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2050 ஆம் ஆண்டு வாக்கில் பாக்கித்தானின் பொருளாதாரமானது 15 மடங்குகள் வளர்ச்சியடையும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.[360] அதாவது 2015-16 இல் இந்நாட்டின் 70 இலட்சம் பேரைக் கொண்ட வலிமையான வெளிநாடு வாழ் குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட ஐஅ$19.9 பில்லியன் (₹1,42,316.8 கோடி) பங்களிப்புடன் சேர்த்து பாக்கித்தானின் பரந்த இயற்கை மூலப்பொருள் உற்பத்தி மற்றும் 10 ஆவது மிகப் பெரிய பணியாளர் சந்தை[361][362][363] ஆகியவை இந்நாட்டை முக்கியத்துவமிக்க நிலையில் வைக்கின்றன. எனினும், உலகளாவிய ஏற்றுமதியில் பாக்கித்தானின் பங்களிப்பானது வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. உலக வணிக அமைப்பின் கூற்றுப்படி 2007 ஆம் ஆண்டில் இது வெறும் 0.13% ஆக மட்டுமே இருந்தது.[364] வேளாண்மை மற்றும் சுரங்கத் துறை![]() பாக்கித்தானின் பொருளாதாரமானது வேளாண்மையிலிருந்து சேவைத்துறைக்கு மாறிவிட்டது. 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையானது வெறும் 20.9% பங்களிப்பை மட்டுமே அளித்தது.[366] இவ்வாறு உள்ள போதிலும், 2005 இல் பாக்கித்தானின் கோதுமை உற்பத்தியானது ஆப்பிரிக்காவை மிஞ்சியது. தென்னமெரிக்காவின் அளவை கிட்டத்தட்ட ஈடுகட்டியது. இது இந்நாட்டின் வேளாண்மை முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.[367] வேளாண்மைத் துறையானது நாட்டின் மொத்த வேலையாட்களில் 43.5% பேருக்கு பணி வழங்குகிறது. அன்னிய செலாவணியை ஈட்டும் ஒரு முக்கியமான ஆதாரமாக வேளாண்மை உள்ளது.[366][368] பருத்தி மற்றும் விலங்குத் தோல்கள் போன்ற வேளாண்மை மூலப்பொருட்களை கடுமையாகச் சார்ந்துள்ள உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியானது விநியோகப் பற்றாக்குறைகள் மற்றும் சந்தையின் நிலையற்ற தன்மைகள் ஆகியவற்றின் காரணமாக பணவீக்க அழுத்தங்களை எதிர் கொண்டுள்ளது. பருத்தி உற்பத்தியில் பாக்கித்தான் உலகளவில் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது. கரும்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. உலகளவில் நான்காவது மிகப் பெரிய பால் உற்பத்தியாளர் பாக்கித்தான் ஆகும். நிலம் மற்றும் நீர் ஆதாரங்களானவை தகவுப் பொறுத்த அளவில் அதிகரித்திருக்காவிட்டாலும் உற்பத்தி பெருக்கங்களானவை, குறிப்பாக 1960 களின் பிற்பகுதி மற்றும் 1970 களில் நடந்த பசுமைப் புரட்சியில் இருந்து பெறப்பட்டதானது கோதுமை மற்றும் அரிசி மகசூலை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளன. தனியார் குழாய் கிணறுகள் மற்றும் அதிக மகசூலைக் கொடுக்கும் பயிர் வகைகள் ஆகியவை பயிர் மகசூலை மேற்கொண்டு அதிகப்படுத்தியுள்ளன.[369] பாக்கித்தானின் மாமிச தொழில் துறையானது ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 1.4% ஐப் பங்களிக்கிறது.[370] தொழிற்துறை![]() மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 19.74% பங்களிக்கும் மற்றும் மொத்த வேலைவாய்ப்புக்கு 24% பங்களிக்கும் தொழில் துறையானது இந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய துறையாக உள்ளது. பெரிய அளவில் செயல்படும் உற்பத்தித் துறையானது இதில் ஆதிக்கம் செலுத்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.2% பங்கை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆப்கானித்தான் மற்றும் உள்நாட்டு வீட்டு மனைத் துறையில் இருந்து ஏற்படும் தேவை காரணமாக சீமைக்காரை உற்பத்தியானது செழித்தோங்குகிறது.[372] 2013 இல் பாக்கித்தான் 77,08,557 டன்கள் சீமைக்காரையை ஏற்றுமதி செய்தது. 4,47,68,250 டன்கள் சீமைக்காரையை உற்பத்தி செய்யும் நிறுவப்பட்ட கொள்திறன் இந்நாட்டிடம் உள்ளது.[373] பாக்கித்தானின் உற்பத்தித் துறையில் ஒரு முக்கியமான பங்களிப்பாளரான ஜவுளித் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 9.5% பங்களிக்கிறது. இத்துறையில் சுமார் 1.50 கோடி மக்கள் பணியாற்றுகின்றனர். 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி பருத்தி உற்பத்தியில் பாக்கித்தான் உலகளவில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.[374] குறிப்பிடத்தக்க ஆடை நெய்யும் கொள்ளளவுடன் ஆசியாவில் ஜவுளிப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு முக்கியமான நாடாக இது இந்நாட்டை ஆக்குகிறது.[375] பாக்கித்தானிய ஜவுளிகளின் ஒரு முக்கியமான கொள்வனவாளராக சீனா திகழ்கிறது. 2012 இல் ஐஅ$1.527 பில்லியன் (₹10,920.5 கோடி) மதிப்புள்ள ஜவுளிகளை சீனா பாக்கித்தானிலிருந்து இறக்குமதி செய்தது.[376] சேவைத்துறை![]() 2014-15 ஆம் ஆண்டு நிலவரப்படி சேவைத் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 58.8% பங்களிக்கிறது.[366] பாக்கித்தானில் பொருளாதார வளர்ச்சின் முக்கிய முன்னோடியாக இது சேவையாற்றுகிறது.[377] நுகர்வு சார்ந்த சமூகம் இந்நாட்டில் உள்ளது. வேளாண்மை மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சி வீதத்தை விட சேவைத்துறையின் வளர்ச்சி வீதம் அதிகமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 54% ஆகவும், மொத்த வேலைவாய்ப்பில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானதையும் இது வழங்குகிறது. பிற துறைகளுடன் இது வலிமையான தொடர்புகளைக் கொண்டுள்ளது. வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறைக்குத் தேவையான உள்ளீடுகளை இத்துறை வழங்குகிறது.[378] பாக்கித்தானின் தகவல் தொழில்நுட்பத் துறையானது மிக வேகமாக வளரும் துறைகளில் ஒன்றாகும். உலகப் பொருளாதார மன்றத்தால் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் 110 ஆவது தரநிலையை இந்நாடு பெற்றுள்ளது.[379] மே 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 8.20 கோடி இணையப் பயன்பாட்டாளர்களுடன் உலகளவில் முதல் 10 தரநிலைகளுக்குள் பாக்கித்தான் வருகிறது.[380] 2020 ஆம் ஆண்டு வாக்கில் இதன் தகவல் தொடர்பு தொழில்நுட்ப தொழிற்துறையானது ஐஅ$10 பில்லியன் (₹71,516 கோடி)க்கும் அதிகமான மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[381] 12,000 பணியாளர்களுடன் உலகின் முதல் 5 தன்னார்வ பணியாளர்களைக் கொண்ட நாடுகளுக்குள் பாக்கித்தான் வருகிறது[382]. தொலைத்தொடர்பு, கணினி மற்றும் தகவல் சேவைகளில் இந்நாட்டின் ஏற்றுமதி செயல்பாடானது குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்பட்டுள்ளது.[383] சுற்றுலாத்துறை![]() இதன் பன்முகப் பண்பாடுகள், இயற்கைக் காட்சிப் பரப்புகள் மற்றும் சுற்றுலாத் தளங்களுடன் பாக்கித்தான் 2018 ஆம் ஆண்டில் சுமார் 66 இலட்சம் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது.[384] எனினும், ஐரோப்பாவிலிருந்து இந்தியா மற்றும் நேபாளத்திற்கு தரை வழியாகப் பயணித்த பிரபலமான ஹிப்பி வழித்தடத்தால் உந்தப்பட்ட 1970 களில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலையிலிருந்து இது ஒரு வீழ்ச்சியாகும்.[385] தெற்கே அலையாத்திக் காடுகள் முதல் வடகிழக்கே இமயமலை மலை வாழிடங்கள் வரை பாக்கித்தான் பல ஈர்ப்புகளைக் கொண்டுள்ளது. தக்த்-இ-பாகி மற்றும் தக்சசீலாவின் பண்டைக்கால பௌத்த சிதிலங்கள், மொகெஞ்சதாரோ மற்றும் அரப்பா போன்ற 5,000 ஆண்டு பழமையான சிந்துவெளி நாகரிகத் தளங்கள் [386]மற்றும் 7,000 மீட்டருக்கும் அதிக உயரமுடைய ஏராளமான மலைச் சிகரங்கள்[387] ஆகியவை இதில் அடங்கும். பண்டைக்கால கட்டடக் கலையைக் காட்டும் ஏராளமான பழைய கோட்டைகளை பாக்கித்தானின் வடக்குப் பகுதியானது கொண்டுள்ளது. இவை கன்சா மற்றும் சித்ரால்களை உள்ளடக்கியுள்ளது. இங்கு தான் சிறிய இசுலாமுக்கு முந்தைய கலாசு சமூகம் வாழ்கிறது. பேரரசர் அலெக்சாந்தரின் வழித்தோன்றலாக இவர்கள் தம்மைக் குறிப்பிடுகின்றனர்.[388] பாக்கித்தானின் பண்பாட்டுத் தலைநகரமான இலாகூரானது பாத்சாகி மசூதி, சாலிமார் பூங்கா, ஜஹாங்கிரின் கல்லறை, மற்றும் இலாகூர் கோட்டை உள்ளிட்ட முகலாயக் கட்டடக்கலையின் ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் காசுமீர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தி கார்டியன் பத்திரிக்கையானது சுற்றுலாத் துறையை ஊக்கமூட்டுவதற்காக "பாக்கித்தானின் முதல் ஐந்து சுற்றுலாத் தளங்களைக்" குறிப்பிட்டுக் காட்டியது. இதில் தக்சசீலா, இலாகூர், காரகோரம் நெடுஞ்சாலை, கரிமாபாத்து, மற்றும் சைபுல் முலுக் ஏரி போன்ற இடங்கள் சிறப்பிக்கப்பட்டிருந்தன.[389] பாக்கித்தானின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரபலப்படுத்துவதை விழாக்களும், அரசாங்கத் திட்டங்களும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.[390] 2015 இல் உலகப் பொருளாதார மன்றமானது அதன் "பயணம் மற்றும் சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில்" 141 நாடுகளில் பாக்கித்தானுக்கு 125 ஆவது இடத்தைக் கொடுத்தது.[391] உட்கட்டமைப்புமின்சாரமும், ஆற்றலும்![]() மே 2021 நிலவரப்படி பாக்கித்தான் ஆறு உரிமம் பெற்ற வணிக ரீதியிலான அணு மின் நிலையங்களை நடத்தி வருகிறது.[392] இந்த நிலையங்களை பாக்கித்தான் அணு ஆற்றல் குழுவானது மேற்பார்வையிடுகிறது. அதே நேரத்தில், பாக்கித்தான் அணுக்கரு ஒழுங்குபடுத்தும் அமைப்பானது இவற்றின் பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்கிறது.[393] பாக்கித்தானின் மின்சார விநியோகத்தில் இந்த நிலையங்கள் தோராயமாக 5.8% பங்களிக்கின்றன. அதே நேரத்தில், புதை படிவ எரிபொருள்கள் (சுத்திகரிக்கப்படாத எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு) 64.2%ஐயும், நீர் மின் ஆற்றல் 29.9%ஐயும், மற்றும் நிலக்கரியானது 0.1%ஐயும் பங்களிக்கின்றன.[394][395] கனுப்-ஒன்று எனப்படுவது பாக்கித்தானின் முதல் வணிக ரீதியிலான அணுமின் நிலையமாகும். 1971 இல் கனடாவால் இது பாக்கித்தானுக்கு வழங்கப்பட்டது. சீன-பாக்கித்தானிய அணுக்கரு ஒத்துழைப்பானது 1980 களில் தொடங்கியது. சசுனுப்-ஒன்று நிலையம் நிறுவப்படுவதற்கு இது வழி வகுத்தது. 2005 இல் இரு நாடுகளும் ஒருங்கிணைந்த ஆற்றல் பாதுகாப்புத் திட்டத்தை முன் மொழிந்தன. 2030 ஆம் ஆண்டு வாக்கில் 1.60 இலட்சம் மெகாவாட்டுகளுக்கும் அதிகமான உற்பத்தித் திறனை அமைப்பதை இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பாக்கித்தானின் அணுக்கரு ஆற்றல் திட்டம் 2050 ஆனது 40,000 மெகாவாட்டுகள் உற்பத்தி என்ற இலக்கைக் கொண்டுள்ளது.[396] 2030 வாக்கில் 8,900 மெகாவாட்டுகள் இதில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[397] சூன் 2008 இல் பஞ்சாப் மாகாணத்தின் சசுமா அணு ஆற்றல் வளாகமானது சசுமா-மூன்று மற்றும் சசுமா-நான்கு ஆகிய அணு உலைகள் நிறுவப்பட்டதற்குப் பிறகு விரிவாக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு அணு உலையும் 325 முதல் 340 மெகாவாட்டுகள் உற்பத்தித் திறன் கொண்டவையாகும். இவை 12,900 கோடி பாக்கித்தானிய ரூபாய்கள் விலை மதிப்புடையவை ஆகும். இதில் 8,000 கோடி பாக்கித்தானிய ரூபாய்கள் பன்னாட்டு ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டவையாகும். இந்நிதி முதன்மையாக சீனாவிடமிருந்து பெறப்பட்டது. சீனாவின் ஒத்துழைப்புக்கான மற்றொரு ஒப்பந்தமானது அக்டோபர் 2008 இல் கையொப்பமிடப்பட்டது. இத்திட்டத்தின் செலவு ஐஅ$1.7 பில்லியன் (₹12,157.7 கோடி) ஆகும். இதில் ஐஅ$1.07 பில்லியன் (₹7,652.2 கோடி) அயல்நாட்டுக் கடன் மூலம் பெறப்பட்டது. 2013 இல் மேற்கொண்ட அணு உலைகள் நிறுவும் திட்டத்துடன் கராச்சியில் ஓர் இரண்டாவது அணுக்கரு வளாகமானது பாக்கித்தானால் நிறுவப்பட்டது.[398] பாக்கித்தானில் மின்சார ஆற்றலானது பல்வேறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய மின்சக்தி ஒழுங்குபடுத்தும் அமைப்பால் நான்கு மாகாணங்களுக்கும் சரி சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனினும், கராச்சியை அடிப்படையாகக் கொண்ட கே-எலெக்ட்ரிக் மற்றும், நீர் மற்றும் மின்சக்தி வளர்ச்சி அமைப்பானது பாக்கித்தானில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மின்சார ஆற்றலை உற்பத்தி செய்கிறது. நாடு முழுவதும் வருவாயை வசூலிக்கிறது.[399] 2023 இல் பாக்கித்தானின் நிறுவப்பட்ட மின் உற்பத்தி கொள்திறனானது ~45,885 மெகாவாட்டுகளாக இருந்தது.[400] 2016 அக்டோபர் மாதத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பாக்கித்தான் 1,135 மெகாவாட்டுகள் வரை உற்பத்தி செய்தது. 2025 வாக்கில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம் 10,000 மெகாவாட்டுகளை பாக்கித்தான் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[401] போக்குவரத்து2,567 கிலோமீட்டர்கள் நீளமுடைய பெருவழிச் சாலைகள் மற்றும் தோராயமாக 2,63,942 கிலோமீட்டர்கள் நீளமுடைய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை பாக்கித்தான் கொண்டுள்ளது. இவை 92% பயணிகள் மற்றும் 96% சரக்குப் போக்குவரத்தை கையாளுகின்றன. ஒட்டு மொத்த சாலை நீளத்தில் வெறும் 4.6%ஐ மட்டுமே கொண்டுள்ள போதிலும் இந்த வடக்கு-தெற்கு தொடர்புகள் நாட்டின் போக்குவரத்தில் 85%ஐ கையாளுகின்றன. பலூசிஸ்தானில் உள்ள குவாதார் துறைமுகம் மற்றும் பாசுனி துறைமுகம் ஆகியவற்றுடன் சேர்த்து, சிந்துவில் உள்ள கராச்சி துறைமுகம் மற்றும் காசிம் துறைமுகம் போன்ற தெற்குக் கடற்கரைத் துறைமுகங்களை உள்நாட்டு அளவில் மிக அதிக மக்கள் தொகையுடைய மாகாணங்களான பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவுடனும், சீன-பாக்கித்தான் பொருளாதார பாதை வழியாக ஆப்கானித்தான் போன்ற அண்டை நாடுகள், நடு ஆசியா மற்றும் சீனா ஆகியவற்றுடன் இவை இணைக்கின்றன.[402][403][404][405] உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையின்படி 2007 மற்றும் 2016 க்கு இடையில் பாக்கித்தானின் துறைமுக உட்கட்டமைப்பு தரமானது 3.7 இலிருந்து 4.1 மதிப்பீடுகளாக உயர்ந்தது.[406] உள்நாட்டுப் போக்குவரத்தில் தொடருந்து அமைப்பின் பங்களிப்பானது பயணிகளுக்கு 8%க்கும் கீழாகவும், சரக்குப் பொருட்களுக்கு 4% ஆகவும் குறைந்தது.[366] 1990-91 இல் 8,775 கிலோமீட்டர்கள் நீளம் என்பதிலிருந்து 2011 இல் 7,791 கிலோமீட்டர்கள் நீளம் என ஒட்டு மொத்த இருப்புப் பாதைகளின் நீளம் குறைவதற்கு இந்த மாற்றமானது வழி வகுத்துள்ளது.[403][402] ![]() 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி பாக்கித்தான் தோராயமாக் 151 விமான நிலையங்களையும், விமானத் தளங்களையும் கொண்டுள்ளது.[407] இதில் இராணுவம் மற்றும் குடிசார் ஆகிய இரு வகையுமே அடங்கும். முதன்மையான பன்னாட்டு வாயிலாக ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் சேவையாற்றும் போதும், குறிப்பிடத்தக்க பன்னாட்டு விமானப் போக்குவரத்தானது பிற நகரங்களின் விமான நிலையங்கள் வழியாகவும் நடைபெறுகிறது. 1993 ஆம் ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட குடிசார் விமான தொழிற்துறையானது அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுகிறது. அரசின் சொந்த நிறுவனமான பாக்கித்தான் பன்னாட்டு வான்வழியானது உள்நாட்டு பயணிகளில் 73%த்தினரையும், உள்நாட்டு சரக்குப் போக்குவரத்தில் அனைத்தையும் கொண்டுள்ளதாக ஆதிக்கம் செலுத்துகிறது. மக்கள்மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாமிடம் வகிக்கிறது. பாக்கிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது. குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia