இன்ட்டு தி ஸ்ட்டார்ம்
இன்டு தி ஸ்ட்டார்ம் (ஆங்கிலம்: Into the Storm) (தமிழ்: மரணப்புயல்) 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு பேரழிவு திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஸ்டீவன் குவேல் என்பவர் இயக்க, ரிச்சர்ட் ஆர்மிடேஜ், சாரா வேய்னே கேல்லிஸ், மாட் வால்ஷ், நேத்தன் கிரெஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தை ரோட்ஷோ என்டர்டைன்மன்ட் மற்றும் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனங்கள் விநியோகம் செய்கின்றது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 8, 2014ஆம் ஆண்டு வெளியானது.[1][2][3] நடிகர்கள்
கதைச்சுருக்கம்மனிதர்கள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி என்னன்வோ செய்கிறார்கள். ஆனால் இயற்கை மனிதனின் வாழ்க்கையை ஒரு சில மணி நேரத்திலேயே தவுடுபொடியாக்கி விடுகிறது என்பதை ஒரு நாளில் நடக்கக்கூடிய கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் குவேல். படத்தின் பிரமாண்டம்ஒரே நேரத்தில் பல சூறாவளி தொகுப்பு சுற்றி வளைத்து தாக்குவது, தரையில் இருந்து கண்டெய்னர்கள், கார்கள், விமானங்கள் எல்லாம் சூறாவளி காற்றுக்குள் சிக்கி விண்ணை நோக்கி பறப்பது போன்ற காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. வெளியீடுஇந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் மரணப்புயல் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 8, 2014ஆம் ஆண்டு வெளியானது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia