இப்படிக்கு காதல்
இப்படிக்கு காதல் (Ippadiku Kadhal) என்பது 2024 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். இஃக்லூ புகழ் பரத் மோகன் இயக்கத்திலும் சபரீசு குமார் தயாரிப்பிலும் வெளிவந்த இப்படத்தில்.[1] பரத், சனனி ஐயர், சோனாக்சி சிங் இராவத் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அரோள் கரோலி இசையமைத்திருந்தார். பல்லு ஒளிப்பதிவையும் பிரசன்னா ஜி. கே. படத்தொகுப்பும் மேற்கொண்டனர்.[2] இப்படம் 2024 பெப்பிரவரி 9 அன்று கலவையான நேர்மறையான விமர்சனங்களுடன் ஆகாவில் நேரடியாக வெளியிடப்பட்டது. கதைச்சுருக்கம்10 ஆண்டு உறவுக்குப் பின்னர், சிவாவின் மனைவி இரம்யா இவர்களின் திருமண நாளன்றே ஒரு மகிழுந்து விபத்தில் இறந்துவிடுகிறார். மேலும் சிவா நினைவற்ற நிலைக்கு மாறுகிறார். அவர் அஞ்சனாவுடன் ஒரு புதிய உறவைத் தொடங்குகிறார்.[3] இரம்யாவுடனான கடந்தகால உறவு பற்றி அஞ்சனா அறிந்த பிறகு, மோதல் ஏற்படுகிறது. நடிகர்கள்
பாடல்கள்இஃக்லூ படத்திற்குப் பின்னர் இரண்டாவது தடவையாக பரத் மோகனுடன் இணைந்து அரோள் கரோலி இசையமைத்தார்.
அனைத்துப் பாடல்களையும் சௌந்தரராஜன் எழுதியுள்ளார்.
வரவேற்புசினிமா எக்ஸ்பிரஸின் விமர்சகர் ஒருவர், "கதையின் முடிவில் மட்டுமே கதை வேகத்தை அடைந்து கதாபாத்திரங்களின் துயரங்களைத் தெரிவிக்கின்றன. அப்போதுதான் அவர்களை உண்மையிலேயே என்ன தொந்தரவு செய்கிறது என்பது குறித்து நமக்குத் தெளிவு கிடைக்கும். இயக்க நேரம் முழுவதும் தயாரிப்பாளர்களுக்கு இந்த தெளிவு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்". என்று எழுதினார்.[4] ஆனந்த விகடனிலிருந்து ஒர் விமர்சகர், "மந்தமான திரைக்கதை, எளிமையான தயாரிப்பு, செயற்கையான நடிப்பு ஆகியவை இக்கதையின் காதலில் விழுவதை சாத்தியமற்றதாக ஆக்குகின்றன." என்று எழுதினார்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia